25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 10, 2026

புயல் உருவாகும் விதம்: ஒரு விளக்கம்.

தாழ்வு நிலையின் காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் போது, ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது. பூமியின் சுழற்சி காரணமாக, காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது. புயலின் கண் இந்நிலையிலேயே உருவாகும். காற்றழுத்தத் தாழ்வுநிலையின் போது, காற்றின் வேகம் 31 கிலோ மீட்டர் வரை அதிகரித்தால், அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாகும்.

Jul 10, 2026

பூமியை விட வயதான விண்கல்... வீட்டுக்குள் விழுந்த அதிசயம்!

விண்கற்கள் அடிக்கடி பூமியை வந்தடைகின்றன. ஆனால் பெரும்பாலானவை சிறியதாக இருப்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.செர்ரி பழத்தின் அளவிலான ஒரு சிறிய விண்கல், வீட்டின் கூரை, சீலிங் மற்றும் காற்றோட்டக் குழாயை துளைத்துக் கொண்டு, துப்பாக்கி குண்டின் வேகத்தில் வீட்டிற்குள் பாய்ந்து தரையில் விழுந்தது. இந்த விண்கல்லுக்கு அது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் பெயரான "மெக்டோனா" என்று பெயரிடப்பட்டுள்ளது.சுமார் 50 கிராம் எடையுள்ள இந்த விண்கல்லில் 23 கிராம் மாதிரியை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இது ஆக்சிஜன், மெக்னீசியம், இரும்பு மற்றும் சிலிக்கான் நிறைந்த காண்ட்ரைட் (Chondrite) வகையைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்தனர்.மேலும், இந்த விண்கல்லின் வயது சுமார் 456 கோடி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள் என்பதால், இந்த விண்கல் பூமியை விட பழமையானது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் வளையத்தில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த விண்கல் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள், சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து புதிய தகவல்களை வெளிக்கொணரலாம்.

Jul 09, 2026

130 வருடங்கள் கொத்தடிமையாக வாழ்ந்து வந்த குடும்பம்

130 வருடங்கள் கொத்தடிமையாக வாழ்ந்து வந்த குடும்பம். பாகிஸ்தானின் கசூர் பகுதியில், தலைமுறை தலைமுறையாக 130 ஆண்டுகள் மேலாக செங்கல் சூளையில் அடிமைகளாகக் கிடந்த ஒரு குடும்பத்தை, அவர்களின் பூர்வீகக் கடனை முழுமையாக செலுத்தி மீட்டெடுத்த ஆரோன் ஹட்ச்சிங்ஸ் என்ற வெளிநாட்டவர். இவர்களது செயலுக்கு இவரைப் பாராட்டி வாழ்த்துங்கள்.

Jul 09, 2026

மறதி நோய்க்கு புதிய காரணம் கண்டுபிடிப்பு?

அல்சைமர் மறதி நோய்க்கு, பொதுவாக பலரிடம் காணப்படும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்-1 (HSV-1) காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் நீண்ட காலம் நரம்பு மண்டலத்தில் செயலற்ற நிலையில் இருந்து, பின்னர் மூளையில் புரதக் கட்டிகளை உருவாக்கி அல்சைமரைத் தூண்டக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் எதிர்காலத்தில் அல்சைமர் பாதிப்பைக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Jul 09, 2026

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி  செய்தி!

இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை!தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதனை ஏற்று மொத்த வேலை நாட்கள் 220 நாட்கள் இனி 210,ஆக குறைக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் மனநலத்திற்கும், ஆசிரியர்களின் நலனுக்கும் ஒரு சிறந்த முடிவு!இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை..

Jul 09, 2026

இலவச மின்சாரம் - தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் தற்போதுள்ள 100 யூனிட்இலவசமின்சாரதிட்டம்உள்ளபடியேதொடரும்வீட்டு மின்நுகர்வோர்கள் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 200 யூனிட் மின்சாரம் இலவசம்; 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் மின்சாரம் இலவசம் - தமிழக அரசு விளக்கம்!

Jul 09, 2026

9 மாதங்களில் மக்கும் பலூன்கள்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பலூன்களுக்கு மாற்றாக, யுகே விஞ்ஞானிகள் 'பயோலூன்' (Bioloon) என்ற புதிய வகை மக்கும் பலூனை உருவாக்கியுள்ளனர். இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பலூன்கள், நிலத்தில் விழுந்த பிறகு 9 மாதங்களுக்குள் முழுமையாக மக்கிவிடும். இதனால் மண், நீர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Jul 09, 2026

1,500 கி.மீ. பாயும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி!

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (LR-AShM) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் பாயக்கூடிய இந்த ஏவுகணை, 1,500 கி.மீ. தூரம் வரை இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 08, 2026

கடலுக்கு அடியில் 16,000 ஆண்டுகள் பழமையான காடு!

வடகடலின் அடிப்பகுதியில் 16,000 ஆண்டுகள் பழமையான பண்டைய காட்டு சுவடுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனையும் ஐரோப்பாவையும் இணைத்திருந்த டாகர்லேண்ட் (Doggerland) என்ற நிலப்பகுதி, ஓக் மற்றும் எல்ம் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததாகக் கருதப்பட்ட மர இனங்களின் டிஎன்ஏ சுவடுகளும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Jul 08, 2026

திருச்சியில் ஒரு புதிய 5-ஸ்டார் ஹோட்டல்!

திருச்சி மாநகரில், சாமி குரூப் (SAAMY GROUP) சார்பில் ஒரு புதிய 5-ஸ்டார் ஹோட்டல் அமையவுள்ளது. இந்த ஹோட்டலில் 125 அறைகள் இருக்கும். 2.07 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாகும் இந்த ஹோட்டல், 1.42 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்டமான ஹோட்டல் கன்வென்ஷன் சென்டர் அமைக்கும். இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஹோட்டல் கன்வென்ஷன் சென்டர் ஆகும்.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 130 131

AD's