ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.🌟 3-வது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான 3-வது போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மாஸ் காட்டியது.கோல் அடித்த வீராங்கனைகள்: இந்திய அணி தரப்பில் ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் சோனம் ஒரு கோலும், 49-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி ஒரு கோலும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.📊 தொடரின் தற்போதைய நிலை (2-1):இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.1-வது ஆட்டம்: ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வெற்றி.2-வது ஆட்டம்: இந்தியா பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வெற்றி.3-வது ஆட்டம்: இந்தியா 2-0 என்ற கணக்கில் அதிரடி வெற்றி.தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கோப்பையை இந்தியப் பெண்கள் தட்டிச் செல்வார்களா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்!
நடப்பு நிலை: இங்கிலாந்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஸ்கோர் விபரம்: முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 188/7 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியால் 150/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.அடுத்த போட்டி: தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2-வது போட்டி இன்று இரவு 7 மணிக்கு பிரிஸ்டலில் நடக்கிறது.
புதிய சாதனை: ஹாங்காங்கில் நடக்கும் ஆசிய ஜூனியர் தடகள போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.93 மீட்டர் உயரம் தாண்டி, சீனியர் அளவில் புதிய தேசிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.முறியடிப்பு: இதன் மூலம் 2012-ல் சஹானா குமாரி (1.92 மீட்டர்) படைத்த 14 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.கூடுதல் தங்கம்: இத்தொடரின் ஆடவர் 5,000 மீட்டர் நடைப்பந்தயத்தில் நிதின் குப்தாவும், மகளிர் வட்டு எறிதலில் அமனாத் கம்போஜும் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர்.
நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்ல்செனை 46-வது நகர்த்தலில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். (கார்ல்செனை இவர் வீழ்த்துவது இது 2-வது முறை). இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா, மொத்தமாக 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறினார். தோற்ற கார்ல்சென் கடைசி இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரரான குகேஷ், பிரான்சின் அலிரெஜாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பின் வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'ஆர்மகேட்டன்' சுற்றில் குகேஷ் தோல்வியடைந்து 1 புள்ளியைப் பெற்றார். 3-வது சுற்று முடிவில் பிரான்சின் அலிரெஜா 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
.ராஜஸ்தான், ஹைதெராபாத் அணிகள் நேற்றிரவு நியூ சண்டிகாரில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவரில், 243/8 ரன்கள் எடுத்தது. ஹைதெராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி வெளியேறியது. ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் இதே மைதானத்தில் ராஜஸ்தான்- குஜராத் டைட் டன்ஸ் அணிகள் மோத உள்ளன.இறுதிப்போட்டியில் இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்தும்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பய ணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலா வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டுவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
IPL CRICKET முதலாவது , தகுதி சுற்றில் நேற்று இமைச்சலா பிரதேசம் தர்மசாலாவில் குஜராத், பெங்களூர், அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பீல்ட்ங் தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 254/5 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி, 19.3 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது தகுதி சுற்றில் ஹைதெராபாத், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
இலங்கையில் நடந்தகாமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக்கல் ஆகிய 3 வடிவங்களில் ,ஓபன் பிரிவில் 96 பேர் பங்கேற்றனர். இதன் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் 7-வது மற்றும் கடைசி சுற்று முடிவில் 6½ புள்ளிகள்பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.இந்தியாவின் ஸ்ரீஹரி ரேபிட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மித்ரபா வெண்கலப் பதக்கமும், பிளிட்ஸ் பிரிவில் இந்தியாவின் ரோகித் கிருஷ்ணா வெள்ளிப்பதக்கமும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆஸ்லோ நகரில் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை வெற்றி பெறுவர்.உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் ஆண்கள் பிரிவில் முதல் சுற்றில் மோதினார். குகேஷ் கிட்டத்தட்ட 5 மணிநேர போராட்டதுக்கு பிறகு 144-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதையடுத்து வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க ஆர்மகேட்டன் முறை கடைபிடிக்கப்பட்டு, ஆடிய குகேஷ் 22-வது நகர்த்தலில் கீமரை தோற்கடித்தார். அவருக்கு 12 புள்ளியும், கீமருக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது. தமிழகத்தின் பிரக்ஞானந்தா, இதேபோல் ஆர்மகேட்டன் முறையில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை 43-வது நகர்த்தலில் வென்றார்.
டெல்லியில் நேற்று நடந்த இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.