25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

May 20, 2026

LUCKNOW - RAJASTHAN - 19TH MAY 2026 IPL CRICKET .

ராஜஸ்தான், லக்னோ அணிகள், நேற்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின.லக்னோ அணி ஏற்கனவே 'பிளே - ஆப்' வாய்ப்பை இழந்துவிட்டது. ராஜஸ்தான் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. டாஸ்' வென்ற தற்காலிக கேப்டன் ஜெய்ஸ்வால், 'பவுலிங்' தேர்வு செய்தார். லக்னோ அணி 20 ஓவரில் 220/5 ரன் குவித்தது. ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 225/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

May 20, 2026

இந்தியாவின் ஹரிஹரன், அர்ஜுன் ஜோடி,மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர்  "கோலாலம்பூரில் ,நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, இத் தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற பிரான்சின் கிறிஸ்டோபோபோவ், டோமா போபோவ் சகோதரர்கள் ஜோடியை எதிர் கொண்டது.முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட 21-15 என எளிதாக வசப்படுத்தியது. 36 நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 21-19, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.இந்தியாவின் அஷ்மிதா ,பெண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றில் 21-23, 21-16, 21-16 न செட் கணக்கில் சீன தைபேவின் பாய் யு போவை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.இந்தியாவின் சாத்வித் ரெட்டி கனபுரம், ராதிகா சர்மா ஜோடி  கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்றில் 21-15, 21-17 என மலேசியாவின் தது ஆனிப், கிளாரிசா ஜோடியை வென்றது.

May 19, 2026

CHENNAI - HYDERABAD 18TH MAY 2026 IPL CRICKET

சென்னை, ஐதராபாத் அணிகள்  சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில்   மோதின.  'டாஸ்' வென்ற சென்னைகேப்டன் ருதுராஜ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.  சென்னை அணி 20 ஓவரில் 180/7 ரன் எடுத்தது.  ஐதராபாத் அணி,  19 ஓவரில் 181/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

May 19, 2026

இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிசில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ரோம் நகரில் நடந்த இத்தாலி ஓபன் சர்வதேசடென்னிஸ் போட்டி நேற்று முன்தினம்இரவு ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர்ஜானிக் சினெர் (இத் தாலி), கேஸ்பர் ரூட்டுடன் (நார்வே) மோதினார். சினெர் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்து முதல் முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இத்தாலி ஓபனை இத்தாலி வீரர் ஒருவர் வெல்வது 1976-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். அவருக்கு ரூ.11% கோடியும், 2-வது இடம் பிடித்த கேஸ்பருக்கு ரூ.6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.இதற்கு முன்புசெர்பியாவின்நோவக்ஜோகோவிச் 2018ம்ஆண்டுமாஸ்டர்ஸ்பட்டத்தைமுழுமையாகவென்றுசாதனை படைத்திருந்தார். இச்சாதனையை நிகழ்த்திய 24 வயதான இளம் வீரர் சினெர் 'இத்தாலி ஓபனை 50 ஆண்டுக்கு பிறகு வென்ற இத்தாலி வீரர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று  கூறினார்.

May 18, 2026

BANGALORE - PUNJAB 17TH MAY 2026  IPL CRICKET.

 இமாசலம் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில்  நேற்று பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில்  222/4 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி,  20 ஓவரில் 199/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.  பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றது.  

May 18, 2026

DELHI - RAJASTHAN 17TH MAY 2026  IPL CRICKET .

டில்லி, ராஜஸ்தான் அணிகள் நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மோதின.  'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.  ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 193/8 ரன் எடுத்தது. டில்லி அணி,  19.2 ஓவரில் 197/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

May 18, 2026

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 'சாம்பியன்’ பட்டம் வென்றார். 

ரோம் நகரில் களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகதரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் 31 வயது உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான கோகோ காப்புடன் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினார். ஸ்விடோலினா 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விடோலினாவுக்கு 1,000 தரவரிசை புள்ளியுடன், ரூ.11% கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடம் பெற்றகோகோ காப்புக்கு ரூ.6% கோடி கிட்டியது.வெற்றிக்கு பிறகு 'இங்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இருந்து நிறைய பாடங்களை கற்றேன். இது அடுத்து நடைபெறும் பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு உத்வேகம் அளிக்கும்' என்று ஸ்விடோலினா கூறினார்.

May 16, 2026

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வில்வித்தை மங்கை பாயல் நாக்.

கை, கால் இழந்த உலகின் முதல் இளம் வீராங்கனையான பாயல் நாக் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்துள்ளார். பாங்காக்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்றார். 8 வயதில் மின்சாரம் தாக்கியதில் கை கால்களை இழந்த பாயல், வாயைக் கொண்டு வரைந்த ஒவியம் 2022-ல் வைரலானது. இதையடுத்து, பாராலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி பயிற்சியாளர் குல்தீப், பாயலுக்கு பயிற்சியளித்து சாதிக்க வைத்துள்ளார். சர்வதேச அளவில் தங்கம் வென்று, 'Para Archer of the Year 2025' விருதை வென்றுள்ளார்

May 16, 2026

'சூப்பர் செஸ் கிளாசிக்' இந்தியாவின் செஸ் பிரக்ஞானந்தா 'டிரா'

இந்தியாவின்  செஸ் பிரக்ஞானந்தா 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரின் முதல் சுற்றை 'டிரா' செய்தார். 11வது சீசன் 6 தொடர்களாக 'கிராண்ட் செஸ் டூர்' நடக்கிறது. ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', நடக்கிறது.இந்தியாவின் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தானின், சின்டாரோவ், ஜெர்மனியின் வின்சன்ட் ,  கீமர், அமெரிக்காவின் சோவெஸ்லே உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசாபிரூஸ்ஜா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 60வது நகர்த்தலில் போட்டியை  'டிரா' செய்தார். 

May 16, 2026

LUCKNOW -  CHENNAI -15TH MAY 2026 IPL CRICKET .

லக்னோ, வாஜ்பாய் மைதானத்தில்  நேற்று நடந்த போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மோதின. . 'டாஸ்' வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணி 20 ஓவரில் 187/5 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி 188/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 171 172

AD's



More News