பி.வி.சிந்து சாதனை: தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறிய சிந்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தரவரிசையில் மீண்டும் டாப்-10 இடத்திற்குள் (10-வது இடம்) நுழைந்துள்ளார்.ஆண்கள் இரட்டையர்: இந்தியாவின் ஹரிகரன் - எம்.ஆர்.அர்ஜூன் இணை மலேசிய ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.தோல்விகள்: ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் ஆகியோர் நேர் செட்களில் தோற்று வெளியேறினர்.
ஆண்கள் பிரிவு: 7-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரெஜாவை வீழ்த்தி 9 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். வெஸ்லி சோ 12½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.பெண்கள் பிரிவு: இந்திய வீராங்கனைகள் மோதிய ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பியை வீழ்த்தி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஒப்பந்தம்: இன்னும் 10 நாட்களில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கான ஒளிபரப்பு உரிமத்தை FIFA உறுதி செய்துள்ளது.விலைக்குறைப்பு: ஆரம்பத்தில் 835 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட இதன் மதிப்பு, தற்போது சுமார் 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் போட்டிகளை டிவியில் தடையின்றி ரசிக்கலாம்.
ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் லீக் தொடரில் 776 ரன்கள் (72 சிக்சர், 63 பவுண்டரி, ஸ்டிரைக் ரேட் 237.30) குவித்து அசத்தியுள்ளார்.வென்ற விருதுகளும் பரிசுகளும் (மொத்தம் ரூ. 55 லட்சம் + கார்):ஆரஞ்ச் கேப் (அதிக ரன்) – ரூ. 10 லட்சம்வளர்ந்து வரும் சிறந்த வீரர் – ரூ. 10 லட்சம்சூப்பர் ஸ்ட்ரைக்கர் – ரூ. 10 லட்சம்அதிக சிக்சர் – ரூ. 10 லட்சம்அதிக மதிப்புமிக்க வீரர் (MVP) – ரூ. 15 லட்சம்பாராட்டு மழை: "இவரை அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி-20 அணியில் சேர்க்க வேண்டும்" என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மேலும், "சச்சின், கோலி, கபில் தேவ் போன்றவர்களின் ஆட்ட மனநிலை இவரிடம் உள்ளது; நூறாண்டுக்கு ஒருமுறை தோன்றும் வீரர்" என முன்னாள் வீரர் மதன் லால் பாராட்டியுள்ளார்.
கொசோவாவில் நடந்த WTT பீடர் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் 15 வயது வீராங்கனை திவ்யான்ஷி இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.ஒற்றையர் பிரிவு: விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் தொடரின் 'நம்பர்-1' வீராங்கனையான யே இ தியானை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.இரட்டையர் பிரிவு: பெண்களுக்கான இரட்டையர் இறுதிப்போட்டியில் திவ்யான்ஷி - சிண்ட்ரெல்லா ஜோடி, பலத்த போராட்டத்திற்குப் பின் ஜப்பானிய ஜோடியை 3-2 (11-7, 12-14, 14-12, 8-11, 11-7) என்ற கணக்கில் வீழ்த்தி தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றது.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில், குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) சாம்பியன் பட்டம் வென்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பெங்களூரு அணி, குஜராத்தை 20 ஓவர்களில் 155/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு, 18 ஓவர்களில் 161/5 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ₹20 கோடியும், இரண்டாமிடம் பிடித்த குஜராத் அணிக்கு ₹12.5 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த வெற்றியை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், இந்தோனேசியாவின் ஃபஜர் அல்பியான் - முகமது ஷோஹிபுல் ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினர். 1 மணி 13 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் மூலம், சிங்கப்பூர் ஓபனில் இரட்டையர் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றை அவர்கள் படைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ₹70 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பஞ்சாப்பின் நியூ சண்டிகாரில் நேற்றிரவு நடந்த விறுவிறுப்பான 2-வது தகுதிச் சுற்று (Qualifier 2) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.டாஸ்: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.ராஜஸ்தான் ஸ்கோர்: அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.குஜராத் பதிலடி: கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.நாளை இறுதிப்போட்டி!இந்த மாஸ் வெற்றியின் மூலம் குஜராத் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.மெகா பைனல்: நாளை (31.05.2026) அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்குஜராத் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியை எதிர்கொள்கிறது.2026 IPL கோப்பையைக் கைப்பற்றப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்?
சென்னை: இலங்கையில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் தமிழ்அமுதன் மற்றும் இந்திய செஸ் மாஸ்டர்களுக்கு தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.🥇 8 வயதில் உலக சாதனை:இலங்கையில் நடந்த இப்போட்டியில், 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற தமிழகத்தின் 8 வயது இளம் வீரர் தமிழ்அமுதன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி ஆளுநர் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.🌟 சாம்பியன் இனியனுக்கு பாராட்டு:அதேபோல், இத்தொடரின் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வத்திற்கும் ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.🎖️ பதக்கங்களை அள்ளிய தமிழக மாஸ்டர்கள்:பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மாஸ்டர்களான:ஸ்ரீஹரிமித்ரபாரோஹித் கிருஷ்ணாமேஹா ஆரின்நந்திஷ்மரியம் பாத்திமாகிரித்தன் பொக்கரப்புஆகியோருக்கும் ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் பகிர்ந்து கொண்டார்."வெற்றி பெற்ற அனைவரும் எதிர்காலத்தில் இன்னும் பல சர்வதேசப் போட்டிகளில் முத்திரை பதித்து, உலக சாதனையாளர்களாக உருவெடுக்க வேண்டும்!" என ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற கால்இறுதிச் சுற்று முடிவுகள்.🏆 சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி:ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி, 19-21, 21-17, 21-13 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அடுத்ததாக இவர்கள் தென்கொரிய ஜோடியுடன் மோதவுள்ளனர்.❌ பி.வி.சிந்து ஏமாற்றம்:பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலகின் 'நம்பர் ஒன்' வீராங்கனையான தென்கொரியாவின் அன்சே யங்கிடம் 17-21, 14-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். (அன்சே யங்கிற்கு எதிராக சிந்து சந்திக்கும் 9-வது தோல்வி இதுவாகும்).❌ லக்ஷயா சென் வீழ்ச்சி:ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் கடுமையான போராட்டத்திற்குப் பின், 19-21, 21-15, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோகி வதனாபேயிடம் தோல்வி கண்டு தொடரிலிருந்து வெளியேறினார்.