25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jun 06, 2026

நார்வே சர்வதேச செஸ்தொடரின் 9வது சுற்றில் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

நார்வேயில் நடைபெறும் சர்வதேச செஸ் தொடரின் 9வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடி, உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் குகேஷை 34 நகர்த்தல்களில் வீழ்த்தினார். இது தொடரில் பிரக்ஞானந்தா பெற்ற 'ஹாட்ரிக்' வெற்றியாகும். மற்றொரு போட்டியில் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் வெஸ்லே சோவிடம் தோல்வியடைந்தார்.9 சுற்றுகளின் முடிவில் வெஸ்லே சோ (15.5 புள்ளி) முதலிடத்திலும், பிரக்ஞானந்தா (15.0 புள்ளி) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். குகேஷ் (8 புள்ளி) கடைசி இடத்தில் உள்ளார்.

Jun 06, 2026

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்.

பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் ஜாகுப் மென்சிக்கை வீழ்த்தினார். 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தின் மூலம், ஸ்வெரேவ் 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Jun 06, 2026

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர் இன்று துவக்கம்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று பஞ்சாபில் துவங்குகிறது. புதிய சண்டிகர் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் களம் காண்கிறது. இரு அணிகளும் கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன.

Jun 05, 2026

பிரெஞ்ச் ஓபன்: முதன்முறையாக பைனலில் ஆன்ட்ரீவா! ஜோடி சேர்ந்து அசத்திய இத்தாலி!

பெண்கள் ஒற்றையர்: பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கை வீழ்த்தி, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார்.கலப்பு இரட்டையர்: இத்தாலியின் சாரா இரானி - ஆன்ட்ரியா வாவஸ்சோரி ஜோடி 4-6, 6-3, 10-4 என்ற கணக்கில் கனடா-அமெரிக்க ஜோடியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது இவர்களது 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

Jun 05, 2026

பிளாஷ்பேக் 2010: முதன்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்!

தென் ஆப்ரிக்காவில் நடந்த 2010 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா போன்ற முன்னணி அணிகள் ஏமாற்றின.விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதின. கூடுதல் நேரத்தின் 116வது நிமிடத்தில் இனியஸ்டா அடித்த அபார கோலால், ஸ்பெயின் 1-0 என நெதர்லாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் ஆனது.

Jun 05, 2026

தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் அணி!

கோவாவில் நடக்கும் தெற்காசிய பெண்கள் கால்பந்து தொடரின் அரையிறுதியில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பூடானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் இந்தியாவின் சன்பிதா வெற்றி கோலை அடித்தார். நாளை நடக்கும் மெகா பைனலில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Jun 04, 2026

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர்கள்ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் - ருத்விகா ஜோடி வெற்றி.

ஜகர்தாவில் நடைபெறும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.ஆண்கள் ஒற்றையர்: இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஹோங் யங் வெங்கை 8-21, 22-20, 21-15 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.கலப்பு இரட்டையர்: இந்தியாவின் ரோஹன் கபூர் - ருத்விகா காடே ஜோடி 21-14, 21-14 என்ற நேர்செட்களில் சீன தைபேயின் போ ஹூன் யங் - லிங் பாங் ஹூ கூட்டணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

Jun 04, 2026

நார்வே செஸ்போட்டியின் 8-வது சுற்றில், மாக்னஸ் கார்ல்செனை மீண்டும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.

ஆஸ்லோவில் நடைபெற்று வரும் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியின் 8-வது சுற்றில், தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக தரம் வரிசையில் முதலிடத்தில் உள்ள மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி மாஸ் காட்டியுள்ளார்.அபார வெற்றி: கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 50-வது காய் நகர்த்தலில் கார்ல்செனை தோற்கடித்தார்.2-வது முறை: இந்த நடப்புத் தொடரின் கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்செனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.10 சுற்றுகள் கொண்ட இத்தொடரின் முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

Jun 04, 2026

ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ஜப்பானில் நடைபெற்று வரும் சப்-ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை ஹாக்கி  போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் இமாலய வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன:ஆண்கள் பிரிவு: தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவு: சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 25-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி துவம்சம் செய்து, தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.

Jun 03, 2026

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு

போட்டி விவரம்: சர்வதேச பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி  போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஜூன் 15 முதல் 21 வரை நடக்கிறது.பிரிவுகள்: 'ஏ' பிரிவில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, உருகுவே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் நியூசிலாந்து, சிலி, தென் கொரியா, பிரான்ஸ் அணிகளும் உள்ளன.சுற்று முறை: லீக் சுற்றில் தலா 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் வெல்லும் அணி 'புரோ லீக்' போட்டிக்கு தகுதி பெறும்.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 171 172

AD's



More News