25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

May 15, 2026

  MUMBAI - PUNJAB --14TH MAY 2026 IPL CRICKET -

லீக் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில்  மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை அணிக்கு கேப்டனாக பும்ரா முதன் முறையாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற இவர், பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 200/8 ரன் எடுத்தது.  மும்பை அணி 205/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

May 14, 2026

KOLKATTA – BANGALORE-- 13TH MAY 2026 IPL CRICKET 

57-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு,  கொல்கத்தா  அணிகள் ராய்ப்பூரில் நேற்றிரவு மோதியது.  'டாஸ்' ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது  கொல்கத்தா அணி 20 ஓவரில்  192/4 ரன்கள் எடுத்தது.  பெங்களூரு அணி 19.1 ஓவரில் 194/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.   

May 14, 2026

இந்திய வீராங்கனை ஞானேஸ்வரிக்கு  ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கம் .

 குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.  இந்த போட்டியில் 30 நாடுகளைசேர்ந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி சுற்றாக விளங்கும் 178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 3-வது நாளானநேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந் திய வீராங்கனைஞானேஸ்வரி யாதவ் 'ஸ்னாட்ச்' முறையில் 88 கிலோவும், 'கிளீன் அண்ட் 3 ஜெர்க் முறையில் 106 கிலோவும் என மொத்தம் 194 கிலோ எடை தூக்கினார். அவர் ஸ்னாட்ச்முறையில் வெள்ளிப்பதக்கமும், ஒட் டுமொத்தத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். தொடக்க நாளில் இந்திய வீராங்கனை ககன் கோகம் கோஹர் (48கிலோ) ஒரு வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். சீனாவின் ஜின்லான் ஜாவ் 'ஸ்னாட்ச்' முறையில் 95 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோவும் என மொத்தம் 216 கிலோ எடை 1 தூக்கி தங்கப்பதக்கத்தைவென்றார். வியட்நாம் வீராங் கனை ஹோய்ஹூயோங்'ஸ்னாட்ச் ‘ஸ்னாட்ச் முறையில் 87கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 108 கிலோவும் எனமொத்தம் 195 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றுள்ளது..

May 13, 2026

GUJARAT  - HYDERABAD  - 12TH MAY IPL CRICKET .

 56-வது லீக் ஆட்டத்தில் குஜராத், ஐதராபாத் அணிகள் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு மோதின. 'டாஸ்'ஜெயித்தஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, 20 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது, 14.5 ஓவர்களில் ஐதராபாத் அணியின் விக்கெட்டுகள் மளமள வென்று 86 ரன்னில்  சரிந்தன. குஜராத் அணி 82ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

May 12, 2026

PUNJAB - DELHI - 11TH  MAY IPL CRICKET  .

 தர்மசாலாவில் நேற்று இரவு நடந்த 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ,55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்,  டெல்லி அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. டெல்லி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

May 12, 2026

தமிழக வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் இந்தியன் தடகள சீரிஸ்-6குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் இந்தியன்தடகள சீரிஸ்-6 போட்டி பெண்களுக்கான குண்டு எறிதலில், தமிழக வீராங்கனை கிருஷ்ணாஜெயசங்கர்  மேனன் 16.96 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். உத்தர பிரதேச வீராங்கனை விதி 15.77 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், அரியானா வீராங்கனை அன்ஷூ 15.52 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.  வட்டு எறிதலில்  அரியானாவின் நந்தினி ராணி (58.82 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.கிருஷ்ணா (53.37 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் வென்றார். 

May 12, 2026

இந்திய வீராங்கனை கோமல் கோஹர்க்கு ஆசிய பளுதூக்குதலில் வெண்கலம் !

 குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று, ஆசிய பளுதூக்குதல் சாம்பியன் ஷிப்போட்டி தொடங்கியது. 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 179 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் நாளில் இந்திய வீராங்கனை கோமல் கோஹர் மொத்தம் 177 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-78, கிளீன் அண்ட் ஜெர்க் 99) வெண்கலப்பதக்கம் பெற்றார்.  சீன தைபேயின் ஷூயாங் யி சென் (193 கிலோ) தங்கப்பதக்கமும், பாங் வான்லிங் (192 கிலோ) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

May 12, 2026

மாரத்தானில் கென்ய வீரர் சபாஸ்டியன் சாவே புதிய உலக சாதனை.

லண்டன் மாரத்தானில் கென்ய வீரர் சபாஸ்டியன் சாவே புதிய உலக சாதனை.2 மணி நேரம் 35 வினாடிகளில் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்த நிலையில், 42 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 59 நிமிடங்களில் எட்டி வரலாறு படைத்தார்.

May 11, 2026

CHENNAI - LUCKNOW  10TH MAY 2026 IPL CRICKET .

சென்னை, லக்னோ அணிகள் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின.  'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.  லக்னோ அணி 20 ஓவரில் 203/8 ரன் எடுத்தது,  சென்னை அணி 19.2 ஓவரில் 208/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

May 11, 2026

BANGALORE - MUMBAI - 10TH MAY 2026 IPL CRICKET.

பெங்களூரு, மும்பை அணிகள் நேற்று, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின.  'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.  மும்பை அணி 20 ஓவ ரில் 166/7 ரன் எடுத்தது.  பெங்களூரு அணி  20 ஓவரில் 167/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

1 2 ... 28 29 30 31 32 33 34 ... 171 172

AD's



More News