ஸ்பெயினில் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர்,ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 7-5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின்கேமரூன் நோரியை வென்றுகால் இறுதியை எட்டினார்.ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும், மாஸ்டர்ஸ் டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி. மற்றொரு ஆட்டத்தில் 14-ம் நிலை வீரரான ஜிரி லெஹக்கா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள லோரென்ஜோ முசெட்டியை (இத்தாலி) வெளியேற்றினார்.கால் இறுதி ஆட்டத்தில் பெண்கள் பிரிவில் நடந்த 8-ம் நிலை வீராங்கனையான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் லேலா பெர்னாண்டசை (கனடா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
சமோவா நாட்டின் அபியா நகரில் காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய வீரர் சுனில் சிங் 2-வது நாளில் நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் 'ஸ்னாட்ச்' முறையில் 126 கிலோ, 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 145 கிலோ என மொத்தம் 271கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் அபினோப் கோகோய் 71கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 284 கிலோ (ஸ்னாட்ச்-129, கிளீன் அண்ட் ஜெர்க்-155) எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை அய் சங்பா கோகோய் பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் ,மொத்தம் 185 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-79, கிளீன் அண்ட் ஜெர்க்-106) தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இந்திய வீரர் சாரு பேசி சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 65கிலோ எடைப்பிரிவில் 289 கிலோ எடைதூக்கி (ஸ்னாட்ச்-127, கிளீன் அண்ட் ஜெர்க்-162) தங்கப் பதக்கம்வென்றார்.
40-வது லீக் ஆட்டத்தில், நேற்றிரவு நியூசண்டிகாரில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்'ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்கு 6-வது வெற்றியாகும்.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், டெல்லி, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார், பீல்டிங் தேர்வு செய்தார். டில்லி அணி 16.3 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி 6.3 ஓவரில் 77/1 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்நேற்று மதியம் நடந்த போட்டியில் குஜராத், சென்னை அணி மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவரில் 158/7 ரன்கள் எடுத்தது, குஜராத் அணி 16.4 ஓவரில் 162/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோவில் நேற்று மாலை நடந்த போட்டியில், கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்ட்ங் தேர்வு செய்தது .கொல்கத்தா அணி 20 ஓவரில் 155/7 ரன் எடுத்தது, லக்னோ அணியும் 20 ஓவரில் 155/8 என சமன் செய்தது. சூப்பர் 1 ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
சுவிட் சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் கிராஸ்ஹோப்பர் கோப்பை சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்ட த்தில் உலகதரவரிசையில் 13-ம் நிலை வீரரான அலி அபு எலெய்னனை ,24-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அபய் சிங் 12-10, 11-9 என்ற நேர்செட்டில் வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
பெங்களூரு அணி, குஜராத் அணி ,பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில், நேற்று நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதரர் பீல்ட்ங் தேர்வு செய்தார். குஜராத் அணி 20 ஓவரில் 205 ரன் எடுத்தது. பெங்களூரு அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு இது 5 வது வெற்றியாகும்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ,சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிகரன்கள் குவித்த வீரர், அதிக சர்வதேச போட்டிகளில் ஆடியவீரர் உள்ளிட்ட அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் நேற்று தனது 53-வது பிறந்த நாளைகொண்டாடினார்.மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் முன் மனைவியுடன் இணைந்து கேக்வெட்டி கொண்டாடி, ரசிகர்களுடன் உற்சாகமாக செல்பியும் எடுத்துக் கொண்டார்.
மும்பை, சென்னை அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பீல் டிங்' தேர்வு செய்தார். சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்தது.சாம்சன் சாம்சன் 101 ரன்னுக்கு அவுட் ஆகாமல் இருந்தார். மும்பை அணி 18 ஓவரில் 104 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.