25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமீபத்திய நிகழ்வுகள்

Mar 24, 2025

பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி

பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்ததான நிகழ்ச்சி நடந்தது. மகப்பேறு மருத்துவமனையில் அமைப்பின்மாவட்டசெய லாளர் பகத்சிங் தலைமை வகித்தார்.கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் டாக்டர் அறம் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி.,லிங்கம், எம்.எல்.ஏ., ராமசாமி, மாப்பிள்ளை விநாயகர் மன்ற தலைவர் ராமராஜ், கண்மணி காதர், இ.கம்யூ., நகர் தலைவர் விஜயன் கலந்து கொண்டனர் . 50 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். 

Mar 20, 2025

ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர்.

ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் ,55 ஆயிரம் குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என இந்த ஆண்டு இலக்கான ரூ.19 கோடி வசூலிக்கப்பட  வேண்டும்.நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில், உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி வருவாய் பிரிவினர், சுகாதார பிரிவு அலுவலர்கள் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் 70 சதவீதம் வசூல் ஆகி உள்ளது.மத்திய அரசின்  15வது நிதிகுழு மானியம்பெறதீவிரம்.இன்னும் பத்து நாட்களே உள்ளதால் நகராட்சியின் அனைத்து துறையினரும் வரி வசூலில் கவனம் செலுத்தி, இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வருகின்றனர். 

Mar 19, 2025

ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே .

 ராஜபாளைய நகராட்சியில் மாஸ்டர் பிளான், கார்பன் நியூட்ரல் திட்டங்களின்படி நீர் நிலைகளை தூய்மையாக பராமரிப்பது குறித்து  ஆர்.சி.எஸ் அமைப்பு, நகராட்சி சார்பில் டிஜிட்டல் கணக்கெடுப்பு துவங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை, தாமிர பரணி குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான டிஜிட்டல் தரவுகள் எடுக்கும் பணி, ராம்கோ கம்யூனிட்டி சர்வீஸ் மூலம் பள்ளி கல்லுாரி மாணவர்களை கொண்டு அலைபேசி ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.மாநில பசுமை கால நிலை ஆட்சி குழு உறுப்பினர் நிர்மலா ராஜா துவக்கினார். பி.ஏ. சி.எம் பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, டாக்டர் சித்ரா மாண வர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.கட்டடத்தின், வகைப்பாடு, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதா?, இல்லையெனில் அதற்கான காரணம், ஆழ் துளைகுழாய் இணைப்பு உள்ளதா?, பொதுகழிப்பறை பயன்படுத்துகிறீர்களா? உள்ளிட்ட 14 வகையான கேள்விகளுடன், வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். அதிகாரிகள் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைப் பதன் மூலம் பராமரிப்பு பணிகளில் துல்லியமாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர். 

Mar 11, 2025

சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா

ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா நடந் தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா வந்தவுடன் விழா நாட்களில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பன்னிரு திருமுறை பாராயண நிகழ்ச்சி, பாரம்பரிய இன்னிசை கச்சேரிகள் நடந்தது.இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம், தெப் போற்ஸவத்தை அடுத்து நேற்று காலை தேர்திரு விழா நடந்தது. கோயி லில் அலங்கரிக்கப்பட்டதேரினை ராம்கோ குரூப் சேர்மனும் கோயில் பரம் பரை அறங்காவலருமான பி.ஆர். வெங்கட்ராமராஜா வடம் பிடித்து துவக்கி, ராம மந்திரம் வரை தரிசனத்திற்காக தேர் வீதி உலா வந்து கோயிலை சுற்றி நிலையை அடைந்தது. தேர்த் திருவிழா ஏற்பாடுகளை ராம்கோ குரூப் சார்பில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Mar 10, 2025

ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா

 மாசி பிரம்மோற்ஸவத்தைமுன்னிட்டு ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா நடந் தது. பத்து நாள் நடை பெறும் விழாவில் சுவாமி ,அம்பாள் பல்வேறு அலங் காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று தெப்ப திருவிழாவை முன்னிட்டு காலை முதல் கோயில் பின்புறம் உள்ள மானசரோவர் குளத்தில் இரவு 7:00 மணிக்கு மேல் வாத்தியங்கள் முழங்க மீனாட்சி, சொக்கர் ரதத்தில் கோயிலில் இருந்து எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ராம்கோ குழுமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Mar 09, 2025

ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . .

பத்து நாள் திருவிழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு அலங்காரங்களில்தினமும் சுவாமி காட்சியளித்தார். ஏழாம் நாளான நேற்று மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம்சிறப்பாகநடைபெற்றது.சுவாமியும்அம்மனும்மணக்கோலத்தில்பக்தர்களுக்குகாட்சியளித்தனர்.திருக்கல்யாணம் முடிந்தவுடன் திருமணம் ஆன பெண்கள் புதிய தாலிக்கயிற்றை அணிந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப் பல்லாக்கில் வலம் வந்தனர்.

Mar 09, 2025

இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம்

இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தினத்தை மார்ச் 8 ஆம் தேதி சிறப்பாக  கொண்டாடினர். பிரசிடன்ட் ஆனந்தி இவ்விழாவில் 20 பெண்களை, அவர்கள் செய்திருக்கின்ற அளப்பறிய செயல்களைப் பாராட்டி, கெளரவப் படுத்தினார்.இராஜபாளையம் டைம்ஸ் எடிட்டர், பப்ளிஸர் ஆன கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வரும் பத்திரிகையை பாராட்டி அனைவரிடமும் அறிமுகப்படுத்தி கௌரவித்தார். அவரவர்கள் துறையில் சாதித்த எல்லா பெண்களையும் அறிமுகப்படுத்தி, சிறப்பித்தார். நகராட்சி தலைவர் பவித்ரா சியாம் சிறப்பாக பேசி ,பெண் முன்னேற வேண்டுமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம், தயக்கம் ,வேண்டவே வேண்டாம் என்றார். டாக்டர் சித்ரா அவர்கள் ,பெண் முன்னேற ஆண்கள் மட்டுமல்ல ,அப்பெண்ணிற்கும் தைரியமும், பின்வாங்கும் குணமும் இல்லாமல், தானாக முன்னேற வேண்டும் என்றார். ஆண்கள் உறுதுணை இருந்தாலும் பெண்கள் உறுதியாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்றார். விருது பெற்ற அனைத்து பெண்களும் சிறப்பாக பேசியது அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது. 5.30 மணிக்கு ஆரம்பித்த விழா 8.45 மணிக்கு நிறைவு பெற்றது.  இனிய இரவு விருந்துடன் விழா நிறைவு பெற்றது.

Feb 27, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள்

இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, புலி, சிறுத்தை காட்டு எருமை, காட்டு பன் றிகள், மான் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. அதேபோல இங்கு சாம் பல் நிற அணில்களும் உள்ளன. இப்பகுதி முன்பு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அழைக்கப்பட்டும்  இப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இருப்பதாலும், உணவுகள் கிடைப்பதாலும் இந்த அணில்கள் இங்கு மட்டுமே காணப்படும். இந்த அரிய வகை சாம்பல் நிற அணில்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. ஆண்டுதோறும் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தற்போது 2 நாட்கள் 41 பீட்டுகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த கணக்கெடுப் பின்போது சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Feb 24, 2025

ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு. 

ராஜபாளையம் மேற்கு பகுதியான முடங்கியார் ரோடு செண்பகத்தோப்பு ரோட்டில் ஆறுகள், வனப்ப குதி உள்ளன. இதிலிருந்து நகர்பகுதி தாலுகா அலுவலகம் வரை ஏராளமான குடியிருப்புகள் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.இந்நிலையில் இங்கு அடிக்கடி நடைபெறும் வழிப்பறி, தகராறு, மண் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்கும் விதமாக போலீஸ் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும் என குடி யிருப்பு நல சங்கத்தினர் பல்வேறு சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இதனை அடுத்து இப்பகுதியை கண்காணிக்கும் வகையில் போலீஸ் செக் போஸ்ட் கூண்டினை டி.எஸ்.பி., ப்ரீத்தி ரிப்பன் வெட்டி துவக்கினார். 

Feb 21, 2025

மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன.  

 2024 நவம்பர் முதல் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை கிலோமீட்டர் 9 துாரம் வனத்துறையினர் மூலம் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்ட மக்களும் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றம் சென்று வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மலையில் அதிகரிக்கதுவங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன. 

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 21 22

AD's



More News