மாசி பிரம்மோற்ஸவத்தைமுன்னிட்டு ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா நடந் தது. பத்து நாள் நடை பெறும் விழாவில் சுவாமி ,அம்பாள் பல்வேறு அலங் காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று தெப்ப திருவிழாவை முன்னிட்டு காலை முதல் கோயில் பின்புறம் உள்ள மானசரோவர் குளத்தில் இரவு 7:00 மணிக்கு மேல் வாத்தியங்கள் முழங்க மீனாட்சி, சொக்கர் ரதத்தில் கோயிலில் இருந்து எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ராம்கோ குழுமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பத்து நாள் திருவிழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு அலங்காரங்களில்தினமும் சுவாமி காட்சியளித்தார். ஏழாம் நாளான நேற்று மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம்சிறப்பாகநடைபெற்றது.சுவாமியும்அம்மனும்மணக்கோலத்தில்பக்தர்களுக்குகாட்சியளித்தனர்.திருக்கல்யாணம் முடிந்தவுடன் திருமணம் ஆன பெண்கள் புதிய தாலிக்கயிற்றை அணிந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப் பல்லாக்கில் வலம் வந்தனர்.
இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தினத்தை மார்ச் 8 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடினர். பிரசிடன்ட் ஆனந்தி இவ்விழாவில் 20 பெண்களை, அவர்கள் செய்திருக்கின்ற அளப்பறிய செயல்களைப் பாராட்டி, கெளரவப் படுத்தினார்.இராஜபாளையம் டைம்ஸ் எடிட்டர், பப்ளிஸர் ஆன கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வரும் பத்திரிகையை பாராட்டி அனைவரிடமும் அறிமுகப்படுத்தி கௌரவித்தார். அவரவர்கள் துறையில் சாதித்த எல்லா பெண்களையும் அறிமுகப்படுத்தி, சிறப்பித்தார். நகராட்சி தலைவர் பவித்ரா சியாம் சிறப்பாக பேசி ,பெண் முன்னேற வேண்டுமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம், தயக்கம் ,வேண்டவே வேண்டாம் என்றார். டாக்டர் சித்ரா அவர்கள் ,பெண் முன்னேற ஆண்கள் மட்டுமல்ல ,அப்பெண்ணிற்கும் தைரியமும், பின்வாங்கும் குணமும் இல்லாமல், தானாக முன்னேற வேண்டும் என்றார். ஆண்கள் உறுதுணை இருந்தாலும் பெண்கள் உறுதியாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்றார். விருது பெற்ற அனைத்து பெண்களும் சிறப்பாக பேசியது அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது. 5.30 மணிக்கு ஆரம்பித்த விழா 8.45 மணிக்கு நிறைவு பெற்றது. இனிய இரவு விருந்துடன் விழா நிறைவு பெற்றது.
இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, புலி, சிறுத்தை காட்டு எருமை, காட்டு பன் றிகள், மான் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. அதேபோல இங்கு சாம் பல் நிற அணில்களும் உள்ளன. இப்பகுதி முன்பு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அழைக்கப்பட்டும் இப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இருப்பதாலும், உணவுகள் கிடைப்பதாலும் இந்த அணில்கள் இங்கு மட்டுமே காணப்படும். இந்த அரிய வகை சாம்பல் நிற அணில்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. ஆண்டுதோறும் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தற்போது 2 நாட்கள் 41 பீட்டுகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த கணக்கெடுப் பின்போது சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜபாளையம் மேற்கு பகுதியான முடங்கியார் ரோடு செண்பகத்தோப்பு ரோட்டில் ஆறுகள், வனப்ப குதி உள்ளன. இதிலிருந்து நகர்பகுதி தாலுகா அலுவலகம் வரை ஏராளமான குடியிருப்புகள் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.இந்நிலையில் இங்கு அடிக்கடி நடைபெறும் வழிப்பறி, தகராறு, மண் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்கும் விதமாக போலீஸ் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும் என குடி யிருப்பு நல சங்கத்தினர் பல்வேறு சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இதனை அடுத்து இப்பகுதியை கண்காணிக்கும் வகையில் போலீஸ் செக் போஸ்ட் கூண்டினை டி.எஸ்.பி., ப்ரீத்தி ரிப்பன் வெட்டி துவக்கினார்.
2024 நவம்பர் முதல் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை கிலோமீட்டர் 9 துாரம் வனத்துறையினர் மூலம் மலையேற்றம் அழைத்துச் செல்லும் திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்ட மக்களும் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றம் சென்று வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மலையில் அதிகரிக்கதுவங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன.
.மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இயற்கை, வனம், வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வை மக்களி டம் கொண்டு செல்வதில்பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.மதுரையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும். அரசுபஸ் முழுக்கசாம்பல்நிறஅணில்குறித்தஓவியங்கள்சாம்பல்நிறஅணில்கள்குறித்தவிழிப்புணர்வைபஸ்பயணிக்கும்வழித்தடநகரங்களைசேர்ந்தமக்களிடம்ஏற்படுத்தவரையப்பட்டுள்ளது.அரசு பஸ்களில் பல்வேறு வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைபார்த்த மக்களுக்கு, தற்போது சாம்பல் நிற அணில்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை வரவேற்க்கின்றனர்.
ராஜபாளையம் வனத்துறை நீலகிரி வரையாடு திட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், ராஜபாளையம் ராஜூக் கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் வரவேற்றார். தேவராஜன்கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், விவசாயிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பிரசனைகள் ஏற்படுகிறது. மயில்கள், காட்டு பன்றிகள், மான்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது . நகர் பகுதியில் நாய்களின் தொல்லைகளும் அதிகமாகிறது. மான்களின் இனப்பெருக்கம் அதிகரித்து உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதி கரித்துள்ளது.இதற்கு காரணம் இயற்கை சமநிலை மாறி வருவது ஆகும். மான்கள் இனப்பெருக்கம் பெரிய அளவில் நடைபெற்று வருவதற்கு காரணம் புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதுதான். புலிகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் அரசு, வனத்துறை சார்பில் இயற்றப் பட்டுள்ளது.
குற்ற செயல்கள்அதிகம் உள்ள ராஜபாளையம் நகர் மேற்கே குடியிருப்புகள் பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணிக்க போலீஸ் செக் போஸ்ட் . ராஜபாளையம் மேற்கு பகுதியான செண்பகத்தோப்பு ரோடு, முடங்கியார் ரோட்டில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஆறு, வனப்பகுதி அமைந்துள்ளன. சட்ட விரோத செயல்கள் அடிக்கடி நடைபெற்று வந்த இப்பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, மறியல், வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் நடைபெற்று வந்தன.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்னைகளை சரி செய்யவும், போக்குவரத்தை சீராக்கவும் காலதாமதம் ஆனது.முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோடு பிரிவு பகுதியில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க, செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் கூண்டு வைக்கப் பட்டுள்ளது, விரைவில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி நடந்ததுமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மலர், ஐ.எஸ்.டி.இ தமிழ்நாடு செயலாளர் சவுரிராஜன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகை சான்றிதழ்கள் வழங்கினர்.முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ராஜ கருணாகரன், கணிதத் துறை தலைவர் பசரிகொடி, பொது மேலாளர் செல்வராஜ் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் தென்காசி மாவட்டங்களை சேர்த்த 51 பள்ளிகளில் இருந்து 1380 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர்.பேராசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.