.மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இயற்கை, வனம், வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வை மக்களி டம் கொண்டு செல்வதில்பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.மதுரையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும். அரசுபஸ் முழுக்கசாம்பல்நிறஅணில்குறித்தஓவியங்கள்சாம்பல்நிறஅணில்கள்குறித்தவிழிப்புணர்வைபஸ்பயணிக்கும்வழித்தடநகரங்களைசேர்ந்தமக்களிடம்ஏற்படுத்தவரையப்பட்டுள்ளது.அரசு பஸ்களில் பல்வேறு வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைபார்த்த மக்களுக்கு, தற்போது சாம்பல் நிற அணில்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை வரவேற்க்கின்றனர்.
ராஜபாளையம் வனத்துறை நீலகிரி வரையாடு திட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், ராஜபாளையம் ராஜூக் கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் வரவேற்றார். தேவராஜன்கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், விவசாயிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பிரசனைகள் ஏற்படுகிறது. மயில்கள், காட்டு பன்றிகள், மான்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது . நகர் பகுதியில் நாய்களின் தொல்லைகளும் அதிகமாகிறது. மான்களின் இனப்பெருக்கம் அதிகரித்து உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதி கரித்துள்ளது.இதற்கு காரணம் இயற்கை சமநிலை மாறி வருவது ஆகும். மான்கள் இனப்பெருக்கம் பெரிய அளவில் நடைபெற்று வருவதற்கு காரணம் புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவதுதான். புலிகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் அரசு, வனத்துறை சார்பில் இயற்றப் பட்டுள்ளது.
குற்ற செயல்கள்அதிகம் உள்ள ராஜபாளையம் நகர் மேற்கே குடியிருப்புகள் பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணிக்க போலீஸ் செக் போஸ்ட் . ராஜபாளையம் மேற்கு பகுதியான செண்பகத்தோப்பு ரோடு, முடங்கியார் ரோட்டில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஆறு, வனப்பகுதி அமைந்துள்ளன. சட்ட விரோத செயல்கள் அடிக்கடி நடைபெற்று வந்த இப்பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, மறியல், வனப் பகுதியில் இருந்து வன விலங்குகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் நடைபெற்று வந்தன.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்னைகளை சரி செய்யவும், போக்குவரத்தை சீராக்கவும் காலதாமதம் ஆனது.முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோடு பிரிவு பகுதியில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க, செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் கூண்டு வைக்கப் பட்டுள்ளது, விரைவில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி நடந்ததுமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மலர், ஐ.எஸ்.டி.இ தமிழ்நாடு செயலாளர் சவுரிராஜன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகை சான்றிதழ்கள் வழங்கினர்.முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ராஜ கருணாகரன், கணிதத் துறை தலைவர் பசரிகொடி, பொது மேலாளர் செல்வராஜ் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் தென்காசி மாவட்டங்களை சேர்த்த 51 பள்ளிகளில் இருந்து 1380 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர்.பேராசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு, மாவரசி அம்மன் கோவில் உள்ளிட்ட பிட்டுகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 6-வது மைல் குடி நீர் தேக்கம் நிரம்பியது. அதே போல 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணை யாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் மழைபெய்து வருவதால் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். குடிநீர் இந்த ஆண்டு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நகராட்சி நிர் வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நகராட்சிதலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கல்பனா, ஆணையாளர் நாகராஜன், செயற்பொறியாளர் முகமது செரிப் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புக்கான வாய்ப்புத்தொகை மற்றும் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தலைவர் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.கவுன்சிலர்கள் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக மக்களிடம் தவறான தகவல் பரவுகிறது.. மேலும் சொத்து வரியை ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்துவதால் பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் நெல், கரும்பு விவசாயமும் நடப்பதாலும், இந்தாண்டு பெய்துள்ள மழை விவசாயத்திற்கு உதவியுள்ளது .ஆனால் இந்தாண்டு நவம்பரில் 82.3 மி.மீ., பதிவானது. 2018ல் 81.37 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.தமிழகத்தில் நேற்று வேறு எந்த பகுதியில் பெரிய அளவில் கன மழை இல்லாத சூழலில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில்9.2செ.மீ.,மழையளவு பதிவானதாக பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில்7.2 செ.மீ., மழையும், வத்திராயிருப்பில் 5.1 செ.மீ., மழையும் பதிவானது.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 18 அடி கொள்ளளவு கொண்ட நகராட்சி நீர்த் தேக்கம் நிறைந்து இரண்டாவது நீர்த்தேக்கம் 13 அடியை எட்டி உள்ளதால் மக்கள் சுற்றுபகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததை அடுத்து நீராவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசி அம்மன் கோவில், மலட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.பாதுகாப்பு கருதி, திருக்கார்த்திகைக்கு ஆற்றில் குளிக்க குவிந்த மக்களுக்கு வனத் துறையினர் தடை விதித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், செண்பகத் தோப்பு, சாலியன் தோப்பு, இடையன்குளம் குட்ட தட்டி, திருவண்ணா மலை, பந்தப்பாறை, பிள்ளையார் குளம், தொட்டியபட்டி போன்ற பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.மார்கழி, தை மாதங்களில் பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். இந்தாண்டு நல்ல விளைச்சல் உள்ளது. தற்போது பனங்கிழங்குகள் எடுக்கப்பட்டு கொட்டை கிழங்குகள் 25 கொண்டகட்டு ரூ.150-க்கும் விற்கப்படுகிறது. மற்ற கிழங்குகள் 25 கொண்ட கட்டு ரூ.100-க்கும் விற்கப்படுகிறது என பனங்கிழங்கு வியாபாரிகள் தெரிவித்தனர்.நகரில் பல்வேறு பகுதிகளிலும் பனங்கிழங்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டிச.6ல் தொடங்கி நான்கு நாட்கள் காலை மாலை அபிஷேகம், அலங்காரம் நடந்தது.நேற்று காலை திருக்கல்யாணத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார், வேட்டை வெங்கடேச பெருமாள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தாயார், சுவாமி கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.. ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி லட்சார்ச்சனை,தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர், அறங்காவலர் முரளி வெங்கட்ராமன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.அன்னதானம் நடந்தது