25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 05, 2025

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் சார்ந்த பயிற்சி வகுப்பு.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04.09.2025)  தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் சார்ந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள்  தொடங்கி வைத்து, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்.தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்துவதற்காக புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு(IEDP)திட்டத்தை 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான சட்டசபை அறிவிப்பில், இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை(TNYIEDP) அறிவித்தார். அதன்படி இத்திட்டம் 16.07.2025 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நிமிர்ந்து நில் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தின் நோக்கம் 5 ஆண்டுகளில் 10,000 மாணவர்களை தொழில்முனைவோர்களாக (Student Entrepreneurs) உருவாக்குவது, அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத்திறன் வளர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, இ-காமர்ஸ் மற்றும் உற்பத்தித் துறை போன்ற துறைகளில் பயிற்சி அளிப்பது ஆகும். இத்திட்டத்தின் கீழ் ரூ.19.57 கோடி மாணவர் தொழில்முனைவோர்களுக்கும், ரூ.2 கோடி அடுக்கு-1 மற்றும் அடுக்கு-2 (Tier-2 and Tier-3) நகரங்களிலுள்ள 9,000 இளைஞர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு முயற்சி உணர்வை ஏற்படுத்துதல், தொழில்முனைவோர் திறன், புதுமை சிந்தனை வழங்கல், திட்ட முன்வைப்பு, பயிற்சி, கையேடு, வழிகாட்டுதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது நிமிர்ந்து நில் திட்டத்தை மையக்கல்லூரி மற்றும் உறுப்பு கல்லூரி நிறுவனங்கள் (Hub and Spoke ) முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமானது மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் நிமிர்ந்து நில் திட்டத்தை செயல்படுத்துவார்கள். மற்ற உயர் கல்வி நிறுவனங்கள் உறுப்புக்கல்லூரிகளாக செயல்படுவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் மைய கல்லூரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிமிர்ந்து நில் திட்டத்தை கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்படுத்தும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் குறிப்பாக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி(Entrepreneurship Development Programme), கட்டண பயிற்சி(paid Programmes), பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்(School Innovation Development Project), தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி(TNYIEDP), புத்தாக்க பற்று சீட்டு திட்டம்  மற்றும் Innovation Voucher Programme A&B, அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Facilitating Centre), தொழில் முனைதல் மற்றும் புத்தகத்திற்கான சான்றிதழ் படிப்பு (Certificate Programme in Entrepreneurship and Development) உட்பட பல்வேறு செயல்பாடுகளை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.நிமிர்ந்து நில் என்ற திட்டமானது மாணவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் மாணவர்கள் சமுதாயத்தில் அல்லது வேறு தொழில்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை மாதிரி வடிவம் கொண்டு விளக்கம் பட்சத்தில் அந்த யோசனைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு ஐடியேசன் கேம்ப்(ideation Camp) இரண்டு நாள் பயிற்சியும், பூட் கேம்ப்(Boot Camp) மூன்று நாள் பயிற்சியும் வழங்கப்படும். இறுதியாக சென்னையில் நடைபெறக்கூடிய இறுதி சுற்றில் வெற்றி பெறும் 30 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படும்.மேலும், வெற்றி பெற்ற மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வளர் தொழில் மையங்களோடு (Incubation Centre) அவர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தி வசதிகள் செய்து தரப்படும்.எனவே, இப்பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக் கொண்டு இத்திட்டத்தின் நோக்கம் குறித்து அறிந்து மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.  இப்பயிற்சி வகுப்பில், தமிழ்நாடு இளைஞர் கண்டுபிடிப்பு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள் குறித்தும், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும், இந்த புதுமையான நவீன உலகில் மாணவர்கள் தொழில்முனைவோராக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்கு கல்லூரிகளின் பங்களிப்பு குறித்தும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 40 க்கும் மேற்பட்ட கல்லூரி  முதலவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.            

Sep 05, 2025

அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள்  (04.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் துலுக்கன்குறிச்சி ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளின் தரம், சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர்,சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சியில் செயல்பட்டு வரும், நியாய விலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு, அரிசி, பருப்புகள் மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்து, அங்கு பயன்பெறும் பொதுமக்களிடம் கலந்துரையாடி, பொது விநியோகத்திட்டத்தின் மூலம் கிடைக்க பெறும் சேவைகள், அதில் உள்ள குறைகளை கேட்டறிந்து, எடை கற்களின் அளவு முறைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம்  ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும்,சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பேப்பர் கப் (காகித பை) தயாரிக்கும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின்  கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கும் வகையில் புதிய  மாணவர்கள் சேர்க்கைக்கானமுகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்வதில் உள்ள குறைகளை கேட்டறிந்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, போது, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்  திருமதி கி.திலகம், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 05, 2025

சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில், (04.09.2025) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “தரணி போற்றும் தமிழ்நாடு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 05, 2025

சுற்றுலா சார்ந்த தொழில் புரிவோருக்கான விருதுகளுக்கு   விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு தொடர்பாக, சட்டப்பேரவையில்  சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலக சுற்றுலாத்தினத்தன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் தங்கும் விடுதிகள் உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு 2025ம் ஆண்டிற்கான மொத்தம் 45 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்படவுள்ளது. விருது வழங்கப்படும் வகைப்பாடுகள் 1. சிறந்த உள்வரும் பயண முகவர் 2. சிறந்த உள்நாட்டு பயண முகவர் 3. சிறந்த பயண பங்குதாரர் 4. சிறந்த விமான நிறுவன பங்குதாரர் 5. சிறந்த தங்கும் விடுதி 6. சிறந்த உணவகம் 7. சிறந்த (Niche) சுற்றுலாத்தலம் 8. சிறந்த சாகச சுற்றுலா மற்றும் கேம்பிங் சைட் அமைப்பாளர்கள் 9. சிறந்த (MICE) சுற்றுலா அமைப்பாளர்கள் 10. சிறந்த சமூக ஊடகவியலாளர் (Special Media Influencer) 11. சிறந்த சுற்றுலா வழிகாட்டி 12. சிறந்த சுற்றுலா விளம்பரங்கள் 13. சிறந்த சுற்றுலா மேம்பாட்டு வெளியீட்டுகள் 14. சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மேற்கண்டபடி விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.tntourismawardscom என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2025.  மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்களுக்கு சென்னையில் நடைபெறும் உலக சுற்றுலா தினவிழா (27-09-2025) அன்று வழங்கப்படும் எனவும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ) விருதுநகர் அவர்களை 73977-15688 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 04, 2025

திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (03.09.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மறவர் பெருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு,  தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு  கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சென்னிலைக்குடி ஊராட்சியில் புதிதாக தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் ரூ.6.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை  நேரில் சென்று பார்வையிட்டு, கட்டுமான பணிகள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 04, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, நரிக்குடி மற்றும் காரியாபட்டி ஊராட்சிகளில் (03.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் (03.09.2025) சிவகாசி மாநகராட்சி மலையம்மன் திருமண மண்டபம், இராஜபாளையம் நகராட்சி மரக்கண்ணு செட்டியார் நினைவு திருமண மண்டம், திருச்சுழி வட்டம், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காரியாபட்டி வட்டம் டி.வேப்பங்குளம், அருப்புக்கோட்டை வட்டம் பாலவநத்தம் சமுதாயக்கூடம், நரிக்குடி வட்டம் வேலாயூரணி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.அதன்படி, திருச்சுழி வட்டம், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நரிக்குடி வட்டம் வேலாயூரணி மற்றும் காரியாபட்டி வட்டம் டி.வேப்பங்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், காரியாபட்டி அமலா உயர்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெறவுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், விவசாயிகளுக்கு விதைப்பைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Sep 04, 2025

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், எதிர்வரும் 11.09.2025 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (03.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிபந்தனைகள் குறித்து  தெரிவிக்கையில்:-1. அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.  வாடகை வாகனங்கள் (T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில் (Open type) செல்ல அனுமதி இல்லை..  இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE), சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.2. சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள்; வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 08.09.2025-ஆம் தேதிக்கு முன்பாக விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்து வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass) பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.  வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.  3. சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்றுவர வேண்டும். புதிதாக வேறு வழித்தடத்தில் சென்றுவர அனுமதியில்லை.4. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது.5. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது.  வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.6. வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.7. வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.8. சட்டம் ஒழுங்கை கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்திய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.9. பரமக்குடி நகருக்குள் சந்தைப்பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது.10. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது.11. அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 08.00 மணிக்குள் புறப்பட வேண்டும்.12. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி  ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.  மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை   பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது.13. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.14. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும்.15. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்,  மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.16. நடைபயணமாக அஞ்சலி செலுத்த செல்லக்கூடாது.  17. ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.  நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.18. செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது.   செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும்  அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும்  அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.19. மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக பேனர் மற்றும் கட்அவுட்கள் வைக்கக் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே  வைக்க வேண்டும்.   அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்அவுட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும்.  மேலும் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி இல்லை20. அலங்கார ஊர்தி அணிவகுப்பு மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை21. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும்  பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.  நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி கிடையாது.22. பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2025 ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்.23. அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் (Registered Political Parties) தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.  இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.09.2025-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.மேற்கூறிய விதிமுறைகளை மீறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்களின் மீதும், அமைப்புகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தெரிவித்தார்.

Sep 04, 2025

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT ,IIM, IIIT NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில்  பயிலும்  மாணவ, மாணவிகள் 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT ,IIM, IIIT NIT  மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities)  பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை (BC,MBC,DNC) சார்ந்த மாணவ / மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.        மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2025-26ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh  and Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள், கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5 /மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5 / மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள  மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ  விண்ணப்பத்தை  பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.மத்திய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள், இக்கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் , இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவராகிறார். மேலும் 2025-26-ம் நிதியாண்டிற்கான புதியது (FRESH)  மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் (with BONAFIDE  Certificate )  தகுதியான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு இனத்தவருக்கு பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கும்,  மிகப் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும்  சீர்மரபினர்  வகுப்பு     இனத்தவருக்கு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கும், பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 30.09.2025 மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 31.10.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.மேலும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ/ மாணவியர்கள், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்.044-29515942., மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கும்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை -5, தொலைபேசி எண்.94454-77817, மின்னஞ்சல் முகவரி, mbcdnciitschloarship@gmail.com,  என்ற முகவரிக்கும்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 04, 2025

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் 2025ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி தேசியதொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 08.09.2025 அன்று நடைபெற உள்ளது .

விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 08.09.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.  மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கைமுகாமில் அரசு/ பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.                         மேலும் ITI - இல் உள்ள தொழிற்பிரிவுகளான 1) Fitter 2) Machinist 3) MMV 4) R&AC5) Electrician 6) Turner 7) Welder 8) Wireman 9) Surveyor 10) COPA மற்றும் இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இதுநாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் தொழிற் நிறுவனங்களின் நிலைக்கு ஏற்ப மாதந்திர உதவித்தொகையாக ரூ.7700/- முதல் ரூ.13500/-வரை வழங்கப்படும்.  மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificates - NAC) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 04, 2025

நபிகள் நாயகம் பிறந்த நாளான (மிலாடி நபி) 05.09.2025 அன்று ஒரு நாள் மட்டும் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி,  நபிகள் நாயகம் பிறந்த நாளான (மிலாடி நபி)  05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று  தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்  அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது  The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 78 79 80 81 82 83 84 ... 140 141

AD's



More News