25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 03, 2025

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025)

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில்  நடைபெற்ற தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர்  திரு.முகமது இர்பான், I A S., அவர்கள் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.ஒரு மாணவனின் இயல்பான திறமையை வெளிக் கொணர்வதுதான் கல்வி, செயல்கள் அடிப்படையில் தான் கற்கின்ற கல்வியை மாணவன் எவ்வாறு பயன்படுத்திகிறான் என்ற கற்றல் அடைவை ஆய்வு செய்வதற்கே இந்தப் புதிய ஆய்வு உத்தி கையாளப்பட்டு வருகிறது.ஏற்கனவே எண்ணும் எழுத்தும் என்ற திட்டமும், திறன் வகுப்பறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. மாணவரின் கற்றல் அடைவு சோதிக்கப்படுகின்ற போதுதான் தான் கல்வியில் எந்த நிலையில் அவன் இருக்கிறான் என்பது தெளிவாகிறது. இதை அறிந்து கொண்டு மாணவன் கற்றல் குறைபாடு எத் திறனில் இருக்கிறது அதற்கேற்ப மாணவனுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் கவனம் கொடுக்கப்பட்டு, முழுத் திறமையுள்ள மாணவனாக  மாற்றுவதுதான் இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம்.ஏறத்தாழ 2 முதல் 3 மாதங்களாக SLAS க்கான முழு அறிக்கை பெறப்பட்டவுடன் இதற்கான ஆய்வுக்கூட்டம் பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தை சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  அதனடிப்படையில் இந்த ஆய்வுக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் உள்ளன. எங்கெல்லாம் உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றது. எங்கெல்லாம் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  மேலும் இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாநில அளவிலான அடைவுத் தேர்வு முடிவுகள் மூலம் நீங்களும் எப்படி பணியாற்றலாம் என்பது அறிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கான கூட்டம் தான் இது. ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு இன்று 26 வது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.பள்ளிக்கல்வித்துறை என்பது மிகவும் முக்கியமான துறை. தலைமையாசிரியர்களாக நீங்கள் முதலில் தங்களுக்கான பொறுப்புகளை புரிந்து அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு தங்களுக்கான நிறை, குறைகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு குழந்தைகள் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று நினைக்காமல், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் முழுமையான அந்த வகுப்பிற்கான கற்றல் அடைவு பெற்று அந்த குழந்தைகள் அடுத்த வகுப்பிற்கு செல்வதை உறுதி செய்யவதே முக்கியம்.பள்ளி குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியம். அதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் உயர் கல்விக்கு சேர்ந்தால் போதும் என்ற நிலை மாறி தற்போது தலைசிறந்த கல்லூரிகளில் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை பெரும் வகையில் நமது பள்ளி மாணவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் பாடத்தோடு வாழ்க்கைக்கான அறத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களை கற்றல் அடைவு அடைந்திருக்கிறோமா என்று நீங்களே பரிசோதித்து கொள்ள வேண்டும்.எட்டாம் வகுப்பு வரை நீங்கள் கற்றல் கற்பித்தலை சிறப்பாக செய்தீர்கள் என்றால் அதற்குப் பின்பான கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு எழுதாகி விடுகிறது. ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். படிப்பு என்பது ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய ஆயுதம். அந்த வகையில் நம் நாட்டை, சமூகத்தை காக்கக் கூடிய ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்.தலைமை ஆசிரியர்கள் மாநில கல்வி கொள்கை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களான இரண்டாம் பெற்றோர்களை நம்பித்தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். தேர்ச்சி மட்டும் இல்லாமல் புரிதலோடு கற்றுக்கொள்ள அவருக்கு சொல்லி தர வேண்டும். அதற்கான பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து இருக்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1468 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 981 அரசு பள்ளிகள், 453 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள்  29,353 இந்த SLAS தேர்வில் கலந்து கொண்டனர்.இதில் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் வகுப்பில் மாநில அளவில் 16 வது இடத்தினையும், ஐந்தாம் வகுப்பில் 11 வது இடத்தையும், எட்டாம் வகுப்பில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தரப்பட்டியலில்; விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 58.5 சதவீதம் பெற்று 18 வது இடத்தை பெற்றுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சவால்கள் உள்ளது. அந்த சவால்களை கடந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக்கூட்டமானது உங்களை ஊக்குவித்து, அடுத்த முறை இந்த மாவட்டத்திற்கு   ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்று பாராட்டுகின்ற நிலைக்கு வருவதற்காக தான் நடத்தப்படுகிறது. சிறப்பாக செயல்பட்டிருக்கின்ற பள்ளிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேப்போல் அனைத்து பள்ளிகளும் முதல் இடத்தை பெறுவதற்கு தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தின் SLAS அறிக்கை பெறப்பட்டுள்ளது. உதாரணமாக 9 இலட்சத்து 80 ஆயிரத்து 340 குழந்தைகளின் அறிக்கையானது 3 ஆம் வகுப்பு. 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்பு என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருமிருந்து பெறப்பட்டுள்ளது.நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்கின்ற பொழுதுதான் நமது மாவட்டத்திற்கு பெருமை. மாநில அளவில் நமது மாவட்டம் 18 ஆவது இடத்தில் இருக்கின்றோம். அதனை உயர்த்துவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த அறிக்கை என்பது ஒவ்வொரு பள்ளிகளுக்குமானது. எனவே அந்தந்த பாட ஆசிரியர்கள் அனைத்து சூழ்நிலையும் புரிந்து கொண்டு முன்னேறுவதற்கு செயல்பட வேண்டும்.SLAS அறிக்கை குறித்த கருத்து பற்றி நாம் அனைவரும் உள்வாங்கி கொள்ளவேண்டும். தலைமையாசிரியர் என்பவர்கள் கப்பலின் தலைவர் போன்று ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்றவுடன் அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும் உங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். ஆகவே, SLAS அறிக்கையினை முன்னேற்றுவதற்கு அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.இக்கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.நரேஷ், இணை இயக்குநர்(தொடக்கக் கல்வி) திரு.சுவாமிநாதன், இணை இயக்குநர்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) திரு.வை.குமார், முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன்குமார், முதல்வர்(மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி) திருமதி செல்வி, விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாந்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Sep 03, 2025

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது .

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் - 3644 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 02/2025, நாள் 21.08.2025 அன்று  வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விருதுநகர் சார்பாக  இலவசப் பயிற்சி வகுப்புகள் 03.09.2025 (புதன் கிழமை) அன்று தொடங்கப்படவுள்ளது. இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சி  வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/dsWChcUm8coEtMZr8  என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.மேலும், விவரங்களுக்கு  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது அலுவலகத்திற்கு வந்து நேரடியாகவோ தொடர்புகொள்ளலாம்.    எனவே, TNUSRB – PC EXAM 2025  தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 03, 2025

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

தமிழ் வளர்ச்சித் துறையின்  2021-2022ஆம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிவிப்பிற்கிணங்க, 10.09.2025 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 11.09.2025 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும்   நடத்தப்பெறவுள்ளன.  அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக்   கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும்  அனுப்பப்படும் .பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு 1. வாய்மையே வெல்லும்  ,2. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ,  3. காஞ்சித் தலைவன்,  4. அண்ணாவின் தமிழ்வளம்          ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. எழுத்தாளராக அண்ணா, 2. தமிழும் அண்ணாவும், 3. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்,  4.அண்ணாவின் மேடைத்தமிழ் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு   பள்ளி மாணவர்களுக்கு  1. தந்தை பெரியாரின் சமூக  நீதிச்  சிந்தனைகள் ,   2.   பெரியாரும்  பெண்  விடுதலையும்,   3.  வைக்கம் வீரர்,   4.  சுயமரியாதை இயக்கம் ,ஆகிய தலைப்புகளிலும்                  கல்லூரி மாணவர்களுக்கு   1. தன்மானப் பேரொளி, 2.தெற்காசியாவின் சாக்ரடீஸ், 3.சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. தொண்டு செய்த பழுத்த பழம், ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன. பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- ,  இரண்டாம்பரிசு ரூ.3000/- ,  மூன்றாம் பரிசு ரூ.2000/-  என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும்,  தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு  பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு  ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு   ரூ.2000/-  என்ற வீதத்திலும்  வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 03, 2025

தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025-அன்று நடைபெறவுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 'தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள எழு(7) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத "இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம்: இயல் 6-ல் முத்தொள்ளாயிரம்: மற்றும் இயல் 7-ல் அக்கறை" ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.2025-2026-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக் /CBSE / ICSE / உட்பட) மாணவர்கள், 11:10:2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை  பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய 04.09.2025 அன்றே கடைசி நாளாகும் எனஅரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர், சென்னை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 02, 2025

சேத்தூர் பேரூராட்சியில் தலைமை நீரேற்று நிலையங்களுக்கு 24 மணி நேர மும்முனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பினை அமைச்சர் அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட துணை மின் நிலையத்தில் (01.09.2025) தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் 2023-2024 ஆம் ஆண்டு இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் சேத்தூர் பேரூராட்சிக்கு தலைமை நீரேற்று நிலையங்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் இணைப்பினை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரியத்துணை தலைவர் திரு.இராசா அருண்மொழி ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள், 179 தெருக்கள் உள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் சுமார் 22,036 மக்கள் தொகை உள்ளது.சேத்தூர் பேரூராட்சி குடிநீர் ஆதாரங்களான வாழவந்தான் கண்மாய் அருகில் இரண்டு திறந்த வெளிக்கிணறு மற்றும் 12 போர்வெல்கள் அமைந்துள்ளது. பிராக்குடி ஆற்றுப்பாதையில் இரண்டு திறந்த வெளிக்கிணறு, அய்யனார்கோவில் பாதையில் உள்ள சேகரிப்புக்கிணறு ஆகியவற்றில் 12 போர்வெல்கள் அமைந்துள்ளது.மேற்படி குடிநீர் ஆதாரங்களில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கான 25 மின் இணைப்புகளுக்கு தற்பொழுது 110/11 கே.வி சேத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து வெளிச்செல்லும் 11 கே.வி சேத்தூர் ஊரக மின் பாதை மற்றும் 11 கே.வி தேவதானம் ஊரக மின்பாதை ஆகியவற்றில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.மிகுந்த வறட்சி காலங்களில் தண்ணீர் தேவை அதிகமாக இருப்பதால், தினசரி 12 முதல் 14 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதாலும், இதர நேரங்களில் இருமுனை மின்சாரம் மட்டுமே கிடைப்பதாலும் போதிய நீராதாரங்கள் இருந்த போதிலும், சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை இருந்ததால் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் 110/11 கே.வி சேத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து தனி மின்பாதை அமைத்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் வகையில் மதிப்பீடு அனுமதி பெறப்பட்டு, சேத்தூர் பேரூராட்சி மூலம் ரூ.2.99 கோடி மதிப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டு, சேத்தூர் பகுதியில் 229 மின்கம்பங்கள், 30 கி.மீ மின்பாதை மற்றும் 13 மின்மாற்றிகள் அமைத்து தனி மின்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி மின்பாதைக்காக சேத்தூர் துணை மின் நிலையத்தில் 11 கே.வி வாட்டர் ஒர்க்ஸ் என்ற பெயரில் புதிய மின்னூட்டி நிறுவப்பட்டு, மின்பாதை அதில் இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சேத்தூர் பேரூராட்சிகளின் குடிநீர் ஆதாரங்களான 23 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடக்கப்பெற்று சுமார் 22,036 பயனாளிகள் குடிநீர் பெற்று பயனடைவார்கள் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர்(தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்) திருமதி ப.லதா, சேத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.பாலசுப்பிரமணியன், முன்னாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார், சேத்தூர் செயல் அலுவலர், சேத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் திருமதி காளீஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 02, 2025

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் (01.09.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ்  ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பேரிடர் அவசர காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.அதன்படி, மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்களும் (எண்ணம்-2) மற்றும் அலைபேசி சமிக்சை அல்லாத பகுதிகளில் பயன்படுத்தத் தக்க வாக்கி டாக்கிகளும் (எண்ணம்-6 ஜோடிகள்) என மொத்தம் ரூ.17 இலட்சம் மதிப்பில் 17 வகையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கொள்முதல் செய்யப்பட்டுள்ள பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் திரு.சந்திரகுமார், தனி வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) திரு.லோகநாதன், உதவி தீயணைப்புத்துறை அலுவலர், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 02, 2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  (01.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், வடக்குநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்த (லேட்) திருமதி எம்.சுகுமாரி என்பவர் பணிக்காலத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் வாரிசுதாரரான மகள் திருமதி மு.தமிழரசி என்பவருக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும்,பின்னர், இராஜபாளையம் வட்டம், சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த  (லேட்) திரு.ஆனந்தகுமார் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான தாயார் திருமதி சமுத்திரம் என்பவருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணையினையும்,இராஜபாளையம் வட்டம், மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) திரு.கருப்பசாமி என்பவர்  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான திருமதி குருவம்மாள் என்பவருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவினையும்,காரியாபட்டி வட்டம், கீழத்துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்)திரு.ராஜேந்திரன் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான திருமதி உடையக்காள் என்பவருக்கு ஓய்வூதியமும் மற்றொரு வாரிசுதாரரான திரு. துரைசாமி என்பவருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பாலாஜி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 02, 2025

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது

தமிழ் வளர்ச்சித் துறையின்  2021-2022ஆம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிவிப்பிற்கிணங்க, 10.09.2025 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 11.09.2025 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும்   நடத்தப்பெறவுள்ளன.  அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக்   கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும்  அனுப்பப்படும் .பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு 1. வாய்மையே வெல்லும்    2. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்  3. காஞ்சித் தலைவன்  4. அண்ணாவின் தமிழ்வளம் ,ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. எழுத்தாளராக அண்ணா 2. தமிழும் அண்ணாவும் 3. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்  4.அண்ணாவின் மேடைத்தமிழ் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு   பள்ளி மாணவர்களுக்கு  1. தந்தை பெரியாரின் சமூக  நீதிச்  சிந்தனைகள்   2.   பெரியாரும்  பெண்  விடுதலையும்   3.  வைக்கம் வீரர்   4.  சுயமரியாதை இயக்கம் ஆகிய தலைப்புகளிலும்                  கல்லூரி மாணவர்களுக்கு   1. தன்மானப் பேரொளி 2.தெற்காசியாவின் சாக்ரடீஸ் 3.சமுதாய விஞ்ஞானி பெரியார் 4. தொண்டு செய்த பழுத்த பழம் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன. பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- ,  இரண்டாம்பரிசு ரூ.3000/- ,  மூன்றாம் பரிசு ரூ.2000/-  என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும்,  தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு  பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு  ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு   ரூ.2000/-  என்ற வீதத்திலும்  வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 02, 2025

தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025-அன்று நடைபெறவுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 'தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது.இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள எழு(7) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத "இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம்: இயல் 6-ல் முத்தொள்ளாயிரம்: மற்றும் இயல் 7-ல் அக்கறை" ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.2025-2026-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக் /CBSE / ICSE / உட்பட) மாணவர்கள், 11:10:2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை  பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய 04.09.2025 அன்றே கடைசி நாளாகும் என அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர், சென்னை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 01, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி வட்டம் திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளியில்  (30.08.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது  02.08.2025 அன்று  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,     நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.    மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சிவகாசி வட்டம், திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில்  நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 79 80 81 82 83 84 85 ... 140 141

AD's



More News