25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 12, 2025

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம்,  எஸ்.கொடிக்குளம், ஜெயகாந்தன் நகரில் தமிழர் பாரம்பரித்தை உணர்த்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை -2025- தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், (11.01.2025) அன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கலந்துகொண்டார்.பொது மக்களுடன் இணைந்து பழங்குடியினர் பகுதிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடும் இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்ததற்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.இந்த பகுதிக்கு நான் ஏற்கனவே மூன்று முறை வருகை தந்துள்ளேன் இது நான்காவது முறையா வந்துள்ளேன். முதல் முறை வருகை தந்த போது இங்கே நியாயவிலை கடையில் பொருள் கொண்டு வந்து, வண்டியில் வழங்க கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.நமது மாவட்டத்தில் இக்கிராமத்தோடு சேர்த்து மூன்று கிராமங்களில் தொலைபேசி சமிக்கை ஒரு மாத காலத்திற்குள்  விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொங்கல் திருநாள் என்பது மிக முக்கியமான ஒரு பண்டிகை.  தமிழர்களின் பண்பாட்டு மரபில் பொங்கல் பண்டிகை தான் பிற பண்டிகைகளை விட முக்கியமானது.  பண்டிகைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடுகிறார்கள். இப்படி மதப் பண்டிகைகள், சமூக பண்டிகைகள் நிறைவாக இருக்க கூடிய நமது பண்பாட்டுச் சூழலில் ஜாதி, மதம் இவற்றை எல்லாவற்றையும் கடந்து அனைவரும் ஒற்றுமையாக ஒரு இனமாக ஒற்றுமையாக கொண்டாடக்கூடிய பண்டிகை என்பது தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை தான்.அத்தகைய தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் அனைவரும் இணைந்து கொண்டாடுவது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது அதைவிட முக்கியம் இந்த பண்டிகை தான் இயற்கையோடு இணைந்து கொண்டாடுகிறோம்.  நமக்கு  அடிப்படை தேவையாக இருப்பது உணவு. அந்த உணவை வழங்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்களுடைய உழைப்பை போற்றுவதற்கும், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய கால்நடைகளின் உழைப்பையும் அந்த உயிரினத்தையும்  போற்றுவதற்கும், பசுமையை போற்றுவதற்கும்,  பல்லுயிர் வகைகள் என்று பேசக்கூடிய மிக முக்கியமான ஒரு பொருளை நாம் நீண்ட காலமாக நம்முடைய பண்பாட்டு மரபில் வைத்திருக்கிறோம். அவற்றை கொண்டாடுவதற்கும், பேசுவதற்கும் மிக முக்கியமான நாள் தான் இந்த தமிழர் திருநாள் தைத்திங்கள் பொங்கல் பண்டிகை.அந்த பொங்கல் பண்டிகையை நமது ஜெயந்தி நகர் பழங்குடியினர் கிராமப் பகுதிகளில் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது இங்கே குடியிருக்க கூடிய அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடிப்படை வசதிகள் மற்றும் சாலைகள் வசதிகள்  மிக விரைந்து செயல்படுத்தப்படும் என்பதையும் உங்களுக்கு தெரிவித்து, குழந்தைகளை நிச்சயமாக நீங்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,அதைவிட முக்கியம் ஒரு ஆறாம் வகுப்பு மேல் இருக்கக் கூடிய மாணவ மாணவிகளை குழந்தைகளை எல்லாம் நீங்கள் விடுதியில் சேர்ந்து படிக்க வைப்பதற்குரிய வாய்ப்புகளையும் நீங்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இங்கே மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்படுகிறது. அனைவரும் சேர்ந்து  குழுக்களிலும் இணைந்து புதிய தொழில்களையும் தொடங்கி நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று இந்த நாளில் வாழ்த்தி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன், அரசு  அலுவலர்கள் மற்றும் ஜெயந்தி நகர்  பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Jan 12, 2025

பள்ளி /கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

தமிழ் வளர்ச்சித்துறை மூலம்  ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறும். பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2024-25ஆம் ஆண்டுக்கான  பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 21.01.2025  அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 22.01.2025 அன்றும் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில்  நடத்தப்பெற உள்ளன.பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் /அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து  அரசு/ தனியார் /அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/  மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்  பங்கேற்கலாம்.ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி ஃ கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்  ஒப்பத்துடனும், கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடன் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல்  முலமாகவோ,  மின்னஞ்சல் -(tamilvalar.vnr@tn.gov.in)  முலமாகவோ 20.01.2025   க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.போட்டிக்கான தலைப்புகள் முன்னதாக அறிவிக்கப்படமாட்டா. போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  பரிசுகள் வழங்கவுள்ளார்.   பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  முதல் பரிசு ரூ.10000-,  இரண்டாம்பரிசு ரூ.7000- ,  மூன்றாம் பரிசு ரூ.5000-  என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள்  வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில்  முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தொடர் வண்டிக் கட்டணம் பயணப்படியாக வழங்கப்பெறும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000- இரண்டாம் பரிசாகரூ.12,000- மூன்றாம் பரிசாக ரூ.10,000- வழங்கப்பெறும். மேற்காணும் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 12, 2025

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (11.01.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாகவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.நமது மாவட்டம் முன்னேற விளையும்   மாவட்டமாக இருப்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.மனித வளர்ச்சி குறியீடு என்பது  அங்கு இருக்கக்கூடிய மக்களின் தனிநபர்  வருமானம் ஒவ்வொரு நபரும் எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனர்  என்பதை பொறுத்தும், அவர்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவு  செய்வதுதான் வளர்ச்சி என கூறுகின்றனர்.மேலும், நமது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் எடுத்து பார்த்தால்,  நமது மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.இன்னும் பல மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் வளர்ச்சி வேறுபாடு  அந்தந்த மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மூலமாகவும், வேலை வாய்ப்புகள் மூலமாகவும் தான் தெரிகிறது.ஒரு நிர்வாகத்தில் கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் திறன் மட்டும் தான் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும், அதில் முக்கியமானதாக தனது செயல்பாடுகளை தொடர்ந்து கால நேரத்தோடு செய்வதால் அது வளர்ச்சிக்கும்,முன்னேற்றத்திற்கும் நம் மக்களை முன்னேற்றமடைய செய்யும்,அந்தந்த வட்டாரங்களில் அடிப்படை வசதிகளை முறையாக சென்றடைய செய்ய வேண்டும் அப்பொழுதுதான் தான் நமது மாவட்டமும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.எனவே, அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் நேரடியாக சென்று சேர்வதற்கு அரசின் விதிமுறைக்கு உட்பட்டு  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வழங்கினார்.  இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வெண்ணிலா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு. அரவிந்த் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 12, 2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாராத) 1 பணியிடமும், சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாராத) பணிக்கு ஒரு மாத தொகுப்பூதியம் ரூ.27804- வழங்கப்படும். இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் /உளவியல் / மனநல மருத்துவம்/ சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு பெற்று இருக்க வேண்டும் (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல் / குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநல மருத்துவம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு பெற்று இருக்கவேண்டும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலத்துறையில் திட்ட உருவாக்கம் /செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விருதுநகர் சிறப்பு சிறார் காவல் பிரிவின் சமூகப்பணியாளர் பணிக்கு ஒரு மாத தொகுப்பூதியம் ரூ.18536- வழங்கப்படும். இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/ சமூகவியல்/ சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் மற்றும் கணினி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.மேற்கண்ட பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass port Size)  “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர்- 626003. தொலைபேசி எண். 04562-293946” என்ற முகவரிக்கு 27.01.2025 மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 12, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு, சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.  அதன்அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-NDA)  அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படைபடிப்பு (Air Cargo Introductory+ DGR)  சரக்கு ஏற்றுமதி மற்றும்இறக்குமதி அடிப்படை படிப்பு (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு (Foundation in Travel and Tourism)  போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான காலஅளவு ஆறுமாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000-த்தை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.இப்பயிற்சியினை வெற்றிதரமாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Transport Association-Canda மூலம் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தனியார் விமானநிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India) சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000-முதல் ரூ.22,000-வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000-முதல் ரூ.70,000-ஊதிய உயர்வு பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களான Indigo, Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange  போன்றவைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com  மூலம் பதிவு செய்யலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

Jan 12, 2025

விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025  என்ற தலைப்பில்  இசையுடன் கூடிய உணவு திருவிழா 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, நமது விருதுநகரில்  விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025  என்ற தலைப்பில்  உணவு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.மேலும், இந்த உணவுத் திருவிழாவில், உள்ளூர் மற்றும் சர்வதேச உணவுகள், பொழுது போக்கு அம்சமாக பல்வேறு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் மற்றும் யூ - டியூப் பிரபலங்கள்,  சூப்பர் சிங்கர்ஸ் இசை நிகழ்ச்சி,திருவனந்தபுரம் ML ராஜாவின் கீதாஞ்சலி இன்னிசைக் குழு இசை நிகழ்ச்சி, மதுரை மேஸ்ட்ரோ சைமன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், சிலம்பம், நடனம், யோகா,  உள்ளிட்டவை நடைபெற உள்ளது.எனவே, இந்த உணவுத் திருவிழாவில்  பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 10, 2025

12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடன் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, (10.01.2025) விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 அரசு பள்ளிகள் 67 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகளில் என மொத்தம் 251 பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடன் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று,  12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.தற்போது கல்வியாண்டின் முக்கியமான தேர்வு கால கட்டத்தை நோக்கி இருக்கிறோம். எந்த ஒரு போட்டியிலும் இறுதிச்சுற்று என்பது மிக முக்கியம். அதில்தான் சோர்வு, களைப்பு போன்றவை ஏற்படும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் யார் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்கிறார்களோ அவர்களே வெற்றியடைகிறார்கள்.தற்போது எவ்வளவு நேரம் படிக்கிறீர்களோ அதைவிட ஒரு நாளைக்கு சிறிது கூடுதலாக முயற்சி செய்தால், பெறக்கூடிய மதிப்பெண்களும், அதனால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.உங்களுடைய உழைப்பும், கவனமும் தேர்வை நோக்கி இருக்க வேண்டும். அதற்காக எந்தவொரு மனஅழுத்தமும் இல்லாமல், நமக்கான முயற்சிகளை முழுமையாக செய்ய வேண்டும். அதற்கான முடிவுகளுக்கு ஒரு போது கவலைப்படக் கூடாது.நமக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து முன்னேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகள் குறித்து அறிந்து கொண்டு, வாய்ப்புகளுக்காக உழைக்க வேண்டும்.தேர்வு முடிந்து உயர்கல்வியில் என்ன படிப்பு, எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதன் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்விக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் தங்கள் இலக்கு குறித்து பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி தலைசிறந்த கல்லூரிக்கு சென்று உயர்கல்வி பயில வேண்டும். உயர்கல்வியில் விருப்பமான துறையை தேர்வு செய்வதற்கு தேவையான கட்ஆப் மதிபெண்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் முயற்சி செய்ய வேண்டும். தேர்வுகளுக்கு இடையில் கிடைக்கக்கூடிய விடுமுறை தினங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சிறிதளவு மதிப்பெண் வித்தியாசத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை தவறவிட்டவர்கள் உள்ளனர். அதனை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சிறிதளவு யோசித்தால், நாம் பெரிய வாய்ப்புகளை தவறவிட மாட்டோம். இந்த காலகட்டத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு கூடுதலாக முயற்சி செய்து, இலகுவான மனதோடு செயலாற்றி, அடுத்து வரும் உயர்கல்விக்கு திட்டமிட வேண்டும். உயர்கல்வி சேருவதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்க பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். பொதுத்தேர்வில் உங்களால் முடிந்த சிறப்பான பங்களிப்பை அளித்து, எந்தவொரு தேர்வு முடிவு வந்தாலும், அதை வைத்து வாழ்க்கையில் சிறப்பாக செயலாற்ற முடியும். எனவே மாணவர்கள் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Jan 10, 2025

வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025-ஐ முன்னிட்டு தேசிய வாக்காளர் தினமான 25.01.2025 அன்று ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின் படி சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025-ஐ முன்னிட்டு தேசிய வாக்காளர் தினமான 25.01.2025 அன்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் 25.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாநில அளவில் ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது.இதில் 16 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் குழுக்களாகவே மட்டும் கலந்து கொள்ள முடியும். ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் நபர்கள் 20.01.2025 தேதிக்குள் https://virudhunagar.nic.in/nvd-quiz-2025/  என்ற இணைப்பில் பதிவு செய்ய வேண்டும். போட்டி நடைபெறும் நாளான்று பதிவு செய்த நபர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையுன் வர வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.மேலும் இப்போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கேள்வி கேட்கப்படும். போட்டியானது OMR  தாளில் பல சுற்றுகளாகவும், இறுதி சுற்று நேரடி கேள்விகளாக கேட்கப்படும்.எனவே 16 வயதுக்கு மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி போட்டியில் கலந்து கொள்ளலாம் என  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 10, 2025

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திருவள்ளுவர் தினமான 15.01.2025 அன்றும், குடியரசு தினமான 26.01.2025 அன்றும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்    (F.L-1), F.L-2/F.L-3/ F.L-3A /FL-3AA  மற்றும் FL-11  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி திருவள்ளுவர் தினமான 15.01.2025 (புதன் கிழமை) அன்றும், குடியரசு தினமான 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .         மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1) மற்றும் F.L-2/F.L-3/F.L-3A/FL-3AA மற்றும் FL-11  மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின்  மீது The Tamil Nadu Liquor  (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 10, 2025

அனைத்துத்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (10.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், கைத்தறித்துறை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அ.சண்முகசுந்தரம்,I A S, அவர்கள் அனைத்துத்துறை திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது பல்வேறு துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செயல்பாடுகள் தொடர்பாகவும் அறிவுரை வழங்கப்பட்டது.ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.இந்த நிதியாண்டின் இலக்கை ஏய்திட போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலைக்கான உத்தரவு பிரப்பித்தவுடன் எவ்வித காலதாமதம் இன்றி உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும்.வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தாலோ அல்லது வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்களை வைத்து பிரசவம் பார்த்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் கர்ப்பிணி பெண்கள் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணிக்க கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கூட்டுறவுத்துறை தனிநபர் கடன் வழங்க முகாம் நடத்தப்பட வேண்டும்.இராஜபாளையம் வட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் விரைவில் பயனாளிகள் தேர்ந்தெடுத்து குடியிருப்பு வழங்க ஏற்பாடுகள் செய்ய தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமான பணிகளுக்கு வருவாய்த்துறையினர் விரைந்து நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மாதாந்திர ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும் பங்கேற்று துறை ரீதியாக உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் முதற்கட்டமாக பசுமை பரப்பை மேம்படுத்துவதோடு, குழந்தைகளின் ஊட்டச்சத்திற்கு பயன்பெறும் வகையிலும் முருங்கை, நெல்லிக்காய், கொய்யா உள்ளிட்ட பழ மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.மாவட்டத்தில் மகளிர் திட்டம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் தனி நபர் கடன் அதிகம் வழங்குவதன் மூலம் தனியார் மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் பொதுமக்கள் அதிக வட்டியுடன் கடன் பெறுவதை குறைக்கலாம்.அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் நேரடியாக சென்று சேர்வதற்கு அரசின் விதிமுறைக்கு உட்பட்டு  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.இரா.தண்டபாணி, சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.தேவராஜ்,இ.வ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 94 95 96 97 98 99 100 101 102 103

AD's



More News