25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 20, 2025

உலகின் உயரமான ரயில்வே வளைவு செனாப் பாலம் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்தார்.

செனாப் பாலம் பிரதமர் மோடி செதுக்கும் பாரதத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல். உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலம். நீளம்: 1.3 கி.மீ. உயரம்: 359 மீ (ஈபிள் கோபுரத்தை விட 35 மீ உயரம்) எஃகு வெல்டிங்: 600 கி.மீ.க்கு மேல், இது ஜம்மு முதல் டெல்லி வரையிலான ரயில் பாதையின் நீளத்தை விட அதிகம்.உலகின் உயரமான ரயில்வே வளைவு செனாப் பாலம் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்தார்.

Jun 20, 2025

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள், குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

Jun 18, 2025

இந்தியாவில் பலருக்கு அவர்களைப் பற்றி தெரியாது.

மின்னஞ்சல் எந்த அமெரிக்கராலும் கண்டுபிடிக்கப்படவில்லை, மாறாக 1978ஆம்  ஆண்டு 14 வயது இந்திய சிறுவன் சிவா அய்யாதுரையால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நம் இந்தியாவில் பலருக்கு அவரைப் பற்றித் தெரியாது என்பதுதான் சோகமான விஷயம் அவருக்கு ஒரு லைக் கொடுங்கள்.

Jun 18, 2025

பழுப்பு மலை அணில்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களிலுள்ள 'காவிரிக்கரைக் காடுகளிலும் மலைக்காடுகளி லும் பழுப்பு மலை அணில்கள் காணப்படுகின்றன.இவற்றுக்குநரையணில்கள்என்றபெயரும்உண்டு.மலையாளத்தில்மலையண்ணான், சாம்பலண்ணான்,புள்ளியண்ணா ன் என்ற பெயர்களாலும், கன்னடத்தில் பெட்ட அல்லுமா என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலுள்ள பிற மலை அனில்களுடன் ஒப்பிடும் போது இது சிறிய இனமாகும்.இந்த அணில்களின் முதுகுப்புறம் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கும் இடையிடையே முடிகள் நரைத்தாற்போல காணப்படும். அடிப்பகுதி கோழி முட்டை போன்ற மங்கலான வெளிர் நிறத்தில் இருக்கும். காதுகள், பின்னந்தலை, நடுமுதுகு வரை அடர் பழுப்பாகவும் கறுப்பாகவும் காட்சியளிக்கும். இவற்றின் மூக்குப்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் தென் படும்.காதுகள் சிறியதாகவும், வட்டமாகவும் காணப்படும். வால் எஞ்சிய உடற்பகுதியைக் காட்டிலும் நீளமாக அமைந்திருக்கும். இதன் முடி நரை முடிபோலவும், சாம் பல் நிற முடி போலவும் பளிச்சிடும். இவற்றின்அகலமான பாதங்களும், நன்கு வளர்ந்த நகங்களும் மரங்களை பிடித்து ஏறுவதற்கு உதவியாக உள்ளன. கை,கால்களில் நன்கு வளர்ந்த நான்கு விரல்களையும், ஒரு சிறு கட்டைவிரலையும் கொண்டிருக்கின்றன.பழுப்பு மலை அணில்கள் புளிய இலைக்கொழுந்துகளையும், வாகை மரங்களின் கொழுந்து, பூந்தூள், மரப்பட்டை ஆகியவற்றையும் உட்கொள்கின்றன. இவற்றை தவிர பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், முட்டைகள் போன்றவற்றையும் தின்னும்.இந்த அணில்களின் பார்வைத்திறன் கூர்மையானது. அதனால் கொன்றுண்ணிகள் வருவதை அறிந்து தப் பித்து விடுகின்றன. இவற்றின் ஓசை சத்தமாக ஒலிக்கும் கொக்கரிப்புப் போல இருக்கும். காலையிலும் மாலையி லும் அதை கேட்கலாம். இவை அருகிலுள்ள மற்ற அணில்களை தொடர்புகொள்ள மெலிதாக ஒலி எழுப்புகின்றன.

Jun 17, 2025

பச்சை நிறக் கோடு கொண்ட500 ரூபாய் நோட்டைஎடுக்காதீர்கள்,

 காந்திஜிக்கு அருகில் பச்சை நிறக் கோடு கொண்ட 500 ரூபாய் நோட்டை எடுக்காதீர்கள், ஏனென்றால் அது போலியானது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் பச்சை நிறக் கோடு உள்ள குறிப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தியை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்..

Jun 17, 2025

விமானத்தின் 'கருப்பு பெட்டி'

விமானத்தின் பின்பகுதியில் 'கருப்பு பெட்டி' (பிளாக் பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். இதில் 'பிளைட் டேட்டா ரிகார்டர்', 'காக்பிட் வாய்ஸ்' என இரு பகுதி இருக்கும். ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரென் இதை கண்டுபிடித்தார். இது கருப்பு நிறத்தில் இருக் காது. எளிதில் தெரியும் விதமாக ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். விமானம் புறப்பட்டது முதல் தரையிறங்கும் வரையிலான புள்ளி விவரங்கள், கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் பேசியது இதில் பதிவாகியிருக்கும். இது 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங் கும். துருப்பிடிக்காத இரும்பு அல்லது டைட்டா னியம் உலோகத்தால் ஆன நினைவுத்திறன்பகுதி (மெமரி) இருக்கும். 25 மணி நேர தகவல்களை பதிவு செய்யும். பேட்டரி 6 ஆண்டு நீடித்திருக் கும். 30 நாட்களுக்கு ரேடியோ சிக்னல் வரும். நீரில் 20 ஆயிரம் அடி ஆழத்திலும் வேலை செய்யும்.ஆமதாபாதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் 'கருப்பு பெட்டி' கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால், விரைவில்உண்மை காரணம் தெரிய வரும்.

Jun 17, 2025

டி.வி.பழுதாகாமல் இருக்க…

ரேடியோ டேப்ரிகார்டரை கலர் டி.வி.யின் மீது வைக்கக் கூடாது. ஸ்பீக்கரின் காந்தம் டி.வி.யில் கலர்ப் புள்ளிகள் தோன்றச் செய்யும்.டி.வி. மேல் நட் ஸ்குரூ போன்றவற்றை வைக்கக் கூடாது. அவைத் தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் டி.வி. பழுதடையும்.டி.வி.யை துணி அல்லது அதற்குரிய கவரால் மூடும் போது டிவி.யின் பின் பகுதி திறந்த படி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.டி.வி.யின் பிரதான பகுதியே பிக்சர் டியூப் தான். முறையாகப் பராமரிக்கும் பட்சத்தில் பிக்சர் டியூப் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். டி.வி.யும் அடிக்கடி பழுதாகாது.டெலி விஷன் நிலையத்துக்கு அருகில் வீடு  இருந்தால் இன்டோர் ஆன்டனாவே (Indoor Antenna) போதும். அதிக தூரத்தில் இருந்தால் அவுட்டோர் ஆன்டனா அவசியம்.

Jun 16, 2025

உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவை மயில்கள்.

பறவைகளில் மிக அழகானது மயில். முருகப்பெருமானின் வாகனமாக போற்றப்படுகிறது. பொதுவாக, பறவைகளில் பெண் இனங்கள்தான் அழகாக தோன்றும். ஆனால், மயில் இனத்தில் ஆண் மயில்கள்தான் அழகாக தோன்றுகிறது. மயில்கள் தெற்காசிய நாடுகளில் பரவி காணப்படும் மிகப்பெரிய பறவை இனம். இவற்றின் அழகை கண்டு, ஐரோப்பிய செல்வந்தர்கள் வளர்ப்பு பறவைகளாக தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மயில்கள், வளர்ப்பு பறவைகளாக மாறின. எகிப்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட மயில்களின் அழகில் மயங்கிய எகிப்தியர்கள் அதனை மாயப் பறவை என்று புகழ்ந்தனர். மயில்கள் நல்ல நல்ல அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் என்று நம்பினர். மயில்கள் தோகையை விரிக்கும் அழகிய நிகழ்வை வெளிநாடுகளில் வியந்து ரசிக்கிற மக்கள் ஏராளம். மயில்கள் கோழி இனத்தை சேர்ந்த பறவைகள் என்றாலும், கோழிகளை விட புத்திசாலித்தனமும், மனிதர்களோடு எளிதாக பழகும் தன்மையும் கொண்டிருக்கின்றன.ஒரு காலத்தில், மயில் இறைச்சியை அதிக அளவில் உணவாக சாப்பிட்ட ஐரோப்பியர்கள், மயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று, மயில் இறைச்சியை விட்டுவிட்டு ,வான்கோழி இறைச்சிக்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பெருமைமிகு பறவை இனமான மயில்கள், உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவைகள் என்பதில் சந்தேகமில்லை. 

Jun 16, 2025

BILL GATES

BILL GATES ஒரு ஓட்டலில் சாப்பிட்டு முடித்த பின்பு ஓட்டல் சர்வருக்கு5 டாலர் டிப்ஸ் கொடுத்தார். அதை அந்த நபர் வாங்கிக் கொண்டு  சிரித்தார். அதைப் பார்த்த BILL GATES ஏன் என்று கேட்டார்.உங்கள் மகள் எனக்கு 500 டாலர் டிப்ஸ் கொடுத்தார். ஆனால் நீங்கள் இந்த உலகத்தில் மிகப்பெரிய பணக்காரர். எனக்கு 5 டாலர் தருகிறீர்கள். அதான் சிரித்தேன் என்றார். அதற்கு BILL GATES அவள் உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் மகள். நான் சாதாரண விறகு வெட்டுபவர் மகன் என்றார்.

Jun 16, 2025

காலை உணவு 'பிரேக் பாஸ்ட்'

காலை உணவை 'பிரேக் பாஸ்ட்' என்கிறோம்.பிரேக் (Break) என்றால் உடைப்பது.பாஸ்ட் (Fast) என்றால் உண்ணாவிரதம். முதல் நாள் இரவு உணவிற்குப் பின்பு மறுநாள் காலை உணவு சாப்பிடும் வரை தொடரும்.உண்ணாவிரதத்தை உடைப்பதே 'பிரேக் பாஸ்ட்' என்று அழைக்கப்படுகிறது. இந்த காலை உணவை குழந்தைகளும் பெரியவர்களும் தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும். 

1 2 ... 97 98 99 100 101 102 103 ... 128 129

AD's



More News