25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 16, 2025

உறுதியான கட்டுமானத்திற்குகடற் பஞ்சுகளின் எலும்புக் கூடு .

நாம் கட்டடத்தில் பயன்படுத்தும் சாதாரண பொருட்களையே சற்று மாற்றி வடிவமைத்தால் வலிமையை அதிகரிக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி., பல்கலை கண்டறிந்துள்ளது.பொதுவாக மனித இனம் இயற்கையில் உள்ள விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து அவற்றை தமக்குத் தகுந்தாற் போல் பயன்படுத்தி வருகிறது.ஆர். எம்.ஐ.டி., பல்கலை விஞ்ஞானிகள் வீனஸ் ப்ளவர் பாஸ் கெட்' எனும் ஒரு வகை கடற்பஞ்சுகளின் எலும்புக் கூட்டை ஆராய்ந்த னர். அதில் இருக்கும் பின்னல் மாதிரியானஅமைப்பால் தான் இந்தக் கடற்பஞ்சு இவ்வளவு வலிமையுடன் இருக்கிறது என்பதை உணர்ந்தனர்.இவற்றின்மீதுஎப்பேர்ப்பட்டவிசையைச்செலுத்தினாலும்அவற்றைச்சரிசமமாகப்பிரித்துவிடுவதால்இவைஉருமாறாமல், நிலைகுலையாமல் இருக்கின்றன என்பது ஆய்வில் தெரிந்தது.எனவே,தெர்மோ பிளாஸ்டிக் பாலியுரி தேன் எனும் ஒருவகை நெகிழியை 3 டி பிரின் டிங் முறையில் கடற் பஞ்சுகளின் எலும்புக் கூட்டின் அதே வடிவில் உருவாக்கினார்கள்.இது மற்ற வடிவங்களை விட வலிமையுடன் இருந்தது. இதேபோல் இரும்புக் கம்பிகளை வடிவமைத்து அவற்றைக் கட்டடங்களில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதே வடிவமைப்பில் மருத்துவ, விளை யாட்டு, பாதுகாப்புக் கருவிகளை உருவாக்க முடியும்.

Jul 14, 2025

பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது நெல்லிக்காய்.

தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவைதான் நெல்லிக்காயின் பூர்வீகம். இது பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது.நெல்லிக்காயில் நட்சத்திர நெல்லிக்காய் என்ற ஒரு வகை உண்டு. பார்ப்பதற்கு நட்சத்திரம் போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் இந்தப் பெயரால் குறிப்பிடப்படுகிறது. இது அரை நெல்லிக்காய் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகளவு நெல்லிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 மில்லி கிராம் வைட்டமின் தேவைப்படுகிறது. பெரிய நெல்லிக்காயில் ஏறத்தாழ 600 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. உடலில் உள்ள சூட்டைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும் தன்மையும் நெல்லிக்காய்க்கு உண்டு. 

Jul 12, 2025

 'பெர்ப்ளெக்சிட்டி' 'கூகுள்' க்கு போட்டியாக … 

இணையத்தில்பலதேடுதல், இயந்திரங்கள் வந்து விட்டாலும் கூகுள்தான்கோலோச்சிநிற்கிறது.அதற்குபோட்டியாக, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) என்றொரு அந்த தேடுதல் இயந்திரம் வந்திருக்கிறது. 2022ல் துவக்கப்பட்ட இது, செயற்கை நுண்ணறிவு வாயிலாக இயங்குகிறது. நிகழ்நேர பதில்களை வழங்குவதன் வாயிலாக, கூகுள்- க்கு ஒரு தீவிர சவாலாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. Nvidia மற்றும் Amazon நிறுவனர் ஜெப் பெசோஸ் போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவுடன், இந்த ஸ்டார்ட்அப் விரைவாக உலகளவில் பெரும் புகழ் பெற்று வருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், தகவல்களைக் கண்டுபிடித்து மக்களுக்கு தரும் முறை சிறிது வித்தியாசமாக இருப்பதே. நீங்கள் ஏதாவது இணையத்தில் தேடினால், பல இணைப்புகளைக் காட்டும் நிலையில், Perplexity  ஆனது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன், உரையாடல் வடிவில் துல்லியமான பதில்களை வழங்குகிறது. எந்த கேள்வியைக் கேட்டாலும்,  இணையத்தில் அது தேடி, அணுகக்கூடிய, உரையாடல் பாணியிலான மற்றும் சரி பார்க்கக்கூடிய பதிலைக் கொடுக்கிறது. இதனால், உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தைச் சேமிக்கிறது.  

Jul 12, 2025

கட்டுப்படியாகாத ஸ்டார்லிங்க் கட்டணம்..! 

ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவைக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, "எங்களுக்கு ஜியோ, ஏர்டெல் சேவை போதும்" என்று பலர் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்டார்லிங்க் சேவை பெற வேண்டுமானால் அதற்கான டிவைஸ் வாங்க வேண்டும் என்றும், அதன் விலை 33 ஆயிரம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், இதுதான் குறைந்த விலை என்றும் கூறப்படுகிறது.  ஏற்கனவே ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் எந்த விதமான டிவைஸ் கட்டணமும் பெறாமல் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற கட்டணத்தை வைத்திருக்கும் நிலையில், 33 ஆயிரம் ரூபாய் டிவைஸ் மற்றும் 3000 ரூபாய் குறைந்தபட்ச ரீசார்ஜ் என்பது நமக்கு கட்டுப்படியாகாது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்புத் துறையின் கடும் போட்டிக்கு இடையே இவ்வளவு பெரிய கட்டணத்துடன் அறிமுகமாகும் ஸ்டார்லிங்க், பொதுமக்களின் ஆதரவைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Jul 12, 2025

புற்றுநோய்க்கு காரணமாகும் சிவப்பு இறைச்சி.

மனித இனத்தை அச்சுறுத்தும் அபாயகரமான குடல் புற்றுநோய். உலகஅள வில் குடல் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம். இதைத் தடுப்பதற்கான வழிகளை விஞ் ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள என்.சி.சி.எஸ். எனும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. குடல் புற்றுநோயை அதிகப் படுத்துவதில் டெலோமெரேஸ் (Telomerase) என்னும் ஒரு நொதிக்கு முக்கியமான பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதியைச் செயலிழக்கச் செய்யஎஸ்பி 2509 என்னும் ஒருமூலக் கூற்றைப்பயன்படுத்த முடியும். இந்தக்  கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பெரிய புரட்சியாக இருக் கும் என்று கூறப்படுகிறது.இது ஒரு பக்கம் இருக்க டெலோ மெரேஸ் நொதிக்கும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது.சிவப்பு இறைச்சியை அளவுக்கு அதிகமாக உண்பது குடல் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கும் என்று ஆய்வாளர்கள் கண் டறிந்திருக்கிறார்கள்.ஆடு, பன்றி, மாடு உள் ளிட்டவற்றின் இறைச்சி சிவப்பு இறைச்சி என்று பொதுவாக அழைக் கப்படுகிறது. இதை அதிக அளவில் உண்பதால் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இறைச்சியில் இருக்கும் இரும்புச் சத்து உடலுக்கு நல்லது தான்  என்றாலும் கூட, அளவை மீறும் போது இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரும்புச் சத்து தான் டெலோமெரேஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி புற்றுநோயை வேகப்ப டுத்துகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.எனவே காய்கறி, பழங்கள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொண்டு சிவப்பு இறைச்சிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Jul 11, 2025

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்.

மொபைல் எண்களை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், தொலைத்தொடர்புத் துறை சில புதிய இணைய பாதுகாப்பு விதிகளை முன்மொழிந்துள்ளது. ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட இந்த வரைவு விதிகள், தொலைபேசி எண்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய ஒரு புதிய தளத்தை உருவாக்கும் திட்டத்தை விவரிக்கின்றன. UPI போன்ற பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் அடையாளத்திற்கு மொபைல் எண்களை பயன்படுத்தும் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களும் இந்த தளத்துடன் இணைக்கப்படும். இந்த அமைப்பு "MNV தளம்" (Mobile Number Validation platform) என்று அழைக்கப்படும். இதன்மூலம், அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள், ஒரு மொபைல் எண் அங்கீகரிக்கப்பட்ட தரவுத்தளத்தில் இருக்கிறதா என்பதை சரிபார்க்க முடியும்.புதிய விதிகளின்படி, மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம், தொலைத்தொடர்பு தரவுத்தளத்தில் ஒரு மொபைல் எண்ணின் நிலையை சரிபார்க்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் ரூ.1.50 கட்டணம் வசூலிக்கப்படும். பிற நிறுவனங்கள் இதே சரிபார்ப்புக்கு ரூ.3 செலுத்த வேண்டும் என்றும் திருத்தங்கள் தெரிவிக்கின்றன.இந்த சரிபார்ப்புக் கட்டணத்தை யார் இறுதியாக செலுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், பயனர்கள் தான் இந்தக் கட்டணத்தை செலுத்த நேரிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.இதன்மூலம், மோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபடும் எண்களை கண்டறிய முடியும். மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட எந்த ஒரு எண்ணும் 90 நாட்களுக்கு செயலிழக்கப்படும். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, அந்த எண்ணின் வரலாறு தானாகவே அழிக்கப்படும். இதனால், அதே எண்ணை மீண்டும் பெறும் நபர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Jul 09, 2025

இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..! காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.

இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சீனா திடீரென மின்சார கார் உற்பத்திக்கு தேவையான காந்தங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.மின்கார் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும் அரிய உலோகமான காந்தங்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா இந்த உலோகங்களில் 90% அளவை சீனாவிலிருந்து பெறுகிறது.திடீரென சீனா இந்த காந்தங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது டாடா, மஹிந்திரா, மாருதி சுசுகி போன்ற நிறுவனங்களின் உற்பத்தி செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.சீனாவின் இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள், அமெரிக்காவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையாக கூறப்படுகிறது. ஆனால் அதன் தாக்கம் இந்தியாவின் கார் உற்பத்தி வளர்ச்சிக்கே இடையூறாக உள்ளது. பிற நாடுகளிலிருந்து காந்தங்களை பெற முயற்சி செய்தாலும், அதன் செலவு அதிகமாகும். இதனால் உற்பத்தி மொத்த செலவிலும் உயர்வை ஏற்படுத்தும்.தற்போது சீனாவுடன் இந்திய உறவுகள் சீராக இல்லாததால், பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால், இந்திய வாகனத் துறை நிறுவனங்கள் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளன. 

Jul 09, 2025

தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் நோக்குடன், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு உரிமம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பி.டி.ஐ. மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் செய்தி பிரிவுகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.இந்த உரிமத்தைப் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், ஏர்டெலின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் சேட்டிலைட் பிரிவு மட்டுமே இதற்கான அனுமதியுடன் செயல்பட்டுவந்தன. புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில், விண்ணப்பித்த 15 முதல் 20 நாட்களில் சோதனை அலைக்கற்றை (trial spectrum) ஸ்டார்லிங்கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உரிமத்தை நாடி காத்திருந்த ஸ்டார்லிங்கிற்கு இது ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறதுஇந்த அங்கீகாரத்துடன், இந்தியாவிலேயே விரைவில் அதிவேக செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையை ஸ்டார்லிங்க் ஆரம்பிக்கலாம். நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கையை தொழில்நுட்பத் துறையினர் வரவேற்கின்றனர். 

Jul 08, 2025

பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

இந்நிலையில் பெட்ரோல், டீசல் கார்களின் அடுத்தக்கட்டமாக எலெக்ட்ரானிக் கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் சீன கார் நிறுவனங்களோ ஒருபடி மேலே போய் எலெக்ட்ரானிக் கார்களை பறக்கும் கார்களாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன.  விமானங்கள் பறக்கும் தொலைவுக்கு அல்லாமல் பூமி பரப்பிலிருந்து சில கிலோ மீட்டர் Low Altitiudeல் பறக்கும்படி இந்த கார்களின் திறன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் கார் தயாரிப்பு போட்டியில் சீனாவை சேர்ந்த செர்ரி என்ற நிறுவனம் தனது ப்ரோட்டோடைப் eVTOL பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த கார் மாடல் வெற்றிகரமாக பறந்து நிரூபணமான நிலையில், பறக்கும் கார்களுக்கான அனுமதி கோரி சீன அரசிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.வரும் அக்டோபர் மாதத்தில் செர்ரி நிறுவனம் தனது பறக்கும்  eVTOL கார்களை கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் போக்குவரத்துக்கான அடுத்தக்கட்டமாக இந்த பறக்கும் கார்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்ற தொல்லைகளை இது வெகுவாக குறைப்பதுடன், சாலையில் செல்லும் கார்களை விட விரைவாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியும் என்கிறார்கள்.

Jul 07, 2025

துணியிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.

அன்றாடம் பயன் படுத்தும் அத்தியா வசியப் பொருட்களில் ஒன்று காகிதம். காகித உற்பத்திக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின் றன.இதற்கு மாற்றாகக் கரும்புச் சக்கை உள்ளிட்ட கழிவுப் பொருட்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது.மற்றொரு பக்கம் பயன் படுத்தப்பட்ட உடைகள் மறுசுழற்சி செய்யப்படா மல் பெரும்பாலும் நிலத் தில் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின் றன. இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இப்படி வீணாக்கப்படுகின்ற துணிகளில் இருந்து பேப்பர் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.முதலில், பருத்தித் துணிகள் சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. பிறகு சில வேதிப்பொருட்கள் இவற்றுடன் கலக்கப்படுகின்றன.இதனால் துணியிலிருந்து பருத்தி இழைகள் தனியாகப் பிரிகின்றன. பிரியும் பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்துமுடிச்சு விழுந்து விடாத படி தனியாகச் சேகரிக்கப் படுகின்றன.இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதும் இவற்றை நேரடியாகக் காகித் உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். இந்த காகிதங்கள் எழுது வதற்குப் பயன்படுபவை அல்ல. மாறாகப் பொட்ட லம் கட்டுவதற்கு (பேக்கே ஜிங்) பயனுள்ளவையாக இருக்கும்.இந்த வகையான காகிதங்கள் நல்ல அடர்த்தியானவை, எளிதில் கிழியாது. எனவே, பேக்கேஜிங்கில் உபயோகமாகும். அட் டைப் பெட்டிகள் செய்யவும் பயன்படுத்த முடியும். இந்த செயல்முறை வருங் காலத்தில் இன்னும் மேம் படுத்தப்படும். அப்போது வீணாகக் கொட்டப்படும் துணிக்கழிவுகள் முழுவதும் காகிதங்களாக மாற்றப்படும்.துணிகளில் உள்ள இழைகள் ஒட்டாமல் கிடைப்பதற்கு சில நொதிகள் உதவும். அவற்றைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

1 2 ... 94 95 96 97 98 99 100 ... 128 129

AD's



More News