25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அழகுக் குறிப்பு

Nov 03, 2024

முன்னோர்கள் பயன்படுத்திய வேப்பிலை

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும்.இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

Nov 01, 2024

முக அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகள் மறைய

உளுந்து மாவு,உருளைக்கிழங்கு சாறு,தேன்  வீட்டில் உள்ள இந்த  3 பொருட்களை பயன்படுத்தி கரும்புள்ளியை நீக்கலாம்.முதலில், உருளைக்கிழங்கு சாற்றை உளுந்து மாவுடன் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.அதில் அரை சிறிதளவு தேன் கலந்து கொள்ளவும். இந்த மூன்றையும் நன்கு கலந்து பிரஷ் மூலம் முகத்தில் தடவவும்.இந்த பேஸ் பேக்கை முகத்தில் சுமார் 10 நிமிடங்கள் தடவவும்.இதற்குப் பிறகு, தண்ணீர் மற்றும் பருத்தி உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும். இதன் மூலம் உங்கள் முகத்தில் உடனடி பளபளப்பைக் காணலாம். உங்கள் சருமமும்ஆரோக்கியமாக இருக்கும்.

Oct 31, 2024

பாலுண்ணி மறைய

சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

Oct 30, 2024

தலை முடி அடர்த்தியாக வளர

 50 கிராம் மாதுளம் பழ தோலின் பொடியை, ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இதோடு, தலா, இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து, 'பேஸ்ட்' பக்குவத்திற்கு தயார் செய்யவும். இதை முடியில் தேய்ப்பதற்கு முதல் நாள் இரவு, தலையில் தேவையான அளவு எண்ணெய் வைத்து கொள்வது நல்லது.காலையில், தலைமுடி மற்றும் வேர் கால்களில் நன்றாக தேய்த்து, 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், சீகைக்காய் தேய்த்து தலைமுடியை அலசவு இந்த ஹேர் பேக்கை மாதத்தில் மூன்று மு செய்து வந்தால்,தலைமுடி அடர்த்தியாக வளரும்; பேன் மற்றும் பொடுகு தொல்லையும் மறையும்.

Oct 20, 2024

முகத்தில் கருப்பு தழும்புகள், கருவளையம் மறைய

 உருளைக்கிழங்கை சாறு எடுத்து முகத்தில் பூசி வர, சீக்கிரம் கரும்புள்ளிகள் பரு தழும்புகள் மறையும். கேரட் சீவும் கட்டையில் சிறியதாக பகுதியில் உருளைக்கிழங்கை சீவி உள்ளங்கையில் வைத்து அழுத்தி பிழிந்தால், நன்றாக சாறு வரும் .ஒரு கிண்ணத்தில் பிழிந்து எடுத்து எளிதில் பூசி கொள்ள கருவளையம் , கரும்புள்ளி மறையும்.

Oct 10, 2024

கேசப் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகள்...

பெண்களுக்கு அதிக முடி உதிர்வால் ஏற்படும் பொடுகு, இளநரை, முடி உதிர்தல், ஊட்டச்சத்தின்மை , வழுக்கைப் பிரச்னைக்குத் தீர்வாக, இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை மிதமாகச்சூடுபடுத்தி அதில் ஒரு  டீஸ்பூன் லவங்கப்பட்டை பவுடர், ஒரு டேபின்ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் ஆக்கி, தலையில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் கழித்து அலசலாம்

Oct 04, 2024

அன்னாசி பழத்தின் சாறு 

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு . வகிக்கின்றன.சிறிது ஜாதிக்காயுடன் அன்னாசிப்பழ சாறை கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் மின்னும். சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.சிலருக்கு முகத்தில் நீர் கோத்துவீங்கிப் போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு  அருமருந்து.

Oct 02, 2024

முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய்

முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தலையில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை. சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். 

Sep 18, 2024

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க குங்குமப்பூ

கோடைகாலம் வந்துவிட்டால் அதிகப்படியான வெப்பம் சுட்டெரித்து,பெண்கள், ஆண்கள் என இரு பாலருக்கும் சரும பாதிப்பு  பிரச்சனைகள் ஏற்படும்.  .காலநிலை மாற்றத்தின் காரணமாக சரும பாதிப்பும் அடிக்கடி ஏற்படும். அந்தவகையில் வெயிற் காலத்தில் சருமத்தை  பாதுகாக்கதேன் மற்றும் தயிருடன் குங்குமப்பூ சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் மெதுவாக தடவி,15,20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.குங்குமப்பூவை இரவு முழுவதும் ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்து, முக டோனராகப் பயன்படுத்தலாம். இது முகத்தில் ஏற்படும் துளைகளை தடுக்கும்.குங்குமப்பூ கலந்த எண்ணெயை பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து மெதுவாக சருமத்தில் மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தில் இரத்தம் ஓட்டம் சீராக இருக்கும்.

Sep 17, 2024

கழுத்தை சுற்றிலும் உள்ள கருமை நீங்க ….

சிலருக்கு முகத்தை காட்டிலும் கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். வெயில், நகை அலர்ஜி, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு கழுத்தில் கருமை உண்டாகும்.இதற்கு சரியான பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். இயற்கை பொருட்கள் கொண்டு எப்படி கருமையை போக்கலாம் .பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.கற்றாழை ஜெல்லில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்கு கலந்து, கழுத்துப்பகுதியில் ஸ்க்ரப் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.கடலை மாவுடன், கால் டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்ந்து கெட்டியாக பேஸ்ட் போல கலந்து, கருமையான இடத்தில் நன்கு தடலி காய்ந்தவுடன் தேய்த்து கழுவவும்.பாசிப்பயிறு மாவு உடன் தயிரை கலந்து கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 26 27

AD's



More News