25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அழகுக் குறிப்பு

Aug 06, 2024

பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று இருக்க...

.தினந்தோறும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், பருக்கள் வராமல் தடுக்கும்.சந்தன பௌடருடன் சிறிது பன்னீர் சேர்த்து கலந்து பருவின்  மேல் வைத்து உலர்ந்தவுடன் கழுவி வாருங்கள்.சில நாட்களிலேயே பரு மறைந்துவிடும்.இரவில் நன்றாகத் தூங்க வேண்டும் சரியாகத் தூங்காவிட்டால் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம்.கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் தவிர்ப்பது, பருக்கள் வராமல் தடுக்கும். தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயைக் குறைத்தாலே பருக்களும் குறைந்துவிடும்.ஜாதிக்காயை உரசி பருக்கள் மேல்தொடர்ந்து நான்கு நாட்கள் தடவி வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று ஆகிவிடும்.

May 28, 2024

சுருள்முடியினை நேராக்கும் இயற்கை வழி Straightening.

சுருள் சுருளாக இருக்கும் தலைமுடியினை நேராக்க இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்கள் கொண்டு செய்யலாம்.ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு ஸ்பூன் பால் மற்றும் போதுமான அளவு சேம்பு சேர்த்து கூந்தலுக்கு ஸ்ப்ரே அடிப்பது போல் பயன்படுத்தி பின்னர் தலைக்கு குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.இரண்டு முட்டையுடன் போதுமான அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கூந்தலுக்கு தடவி சுமார் 20 நிமிடங்கள் உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்துவிட நல்ல மாற்றம் தெரியும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கும் நிலையில் இந்த வாழைப்பழத்தை கூந்தலுக்கு ஹேர் பேக் போல் பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், முட்டை ஒன்றை சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தவும். 30 நிமிடங்கள் விட்டு, குளிர்ந்த நீரில் குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.கால் காப் அரிசி மாவுடன் முட்டை ஒன்று, முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, கூந்தலுக்கு பன்படுத்தவும். ஒரு மணி நேரத்திற்கு பின் கூந்தலை சுத்தம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் கற்றாழை ஜெல்லினை மிதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து அரைத்து கூந்தலுக்கு பயன்படுத்தவும். பின், 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவிடவும்.ஒரு ஸ்பூன் தேங்காய் பாலுக்கு கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு என கலந்து கூந்தலுக்கு ஸ்ப்ரே போல் பயன்படுத்தவும் பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க நல்ல பலன் கிடைக்கும்2 ஸ்பூன் தயிருக்கு 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் வாழைப்பழ திப்பை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

May 27, 2024

பொடுகு, பேன், ஈறு தொல்லை நீங்க

நாம் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் தலைகாணி உறை மற்றும் சீப்பு ஆகியவை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.ஒரு சிலருக்கு தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதால் பொடுகு பேன் ஈறு ஆகியவை வந்துவிடும். பொடுகு என்பது மற்றொரு தலையில் இருந்து இன்னொரு தலைக்கு தொற்றிக் கொள்ளும் ஒரு பூஞ்சை தொற்று. தேவையான பொருட்கள்:வேப்பிலை ஒரு கைப்பிடி,செம்பருத்திப்பூ நான்கு,வெந்தயம் ஒருஸ்பூன்,இஞ்சி ஒரு துண்டு.செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து போட்டுக் கொள்ளவும். வேப்பம் பூ இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.மிகவும் நல்லது. பின் அந்த தண்ணீரில் நான்கு ஐந்து செம்பருத்திப் பூவை போட்டுக் கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட்டு அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு நன்கு சூடு ஆற்றிக் கொள்ளவும். இதை பஞ்சில்நனைத்துவேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடவும்.அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு தலையைக் கழுவி விடவும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு, பேன், ஈறு ஆகியவை நிச்சயமாக நீங்கிவிடும்.

May 23, 2024

பாத வெடிப்புகளை போக்க

முகத்தை பராமரிப்பதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அதே போல் பாதங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் கள பாதங்களை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.எலுமிச்சம் பழத் தோல் கொண்டு பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, கிருமிகளை அழிக்கிறது. இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.தினமும் இரவில் படுக்கும் முன், ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் ஷாம்பு போட்டு, கால்களை 5 முதல் 10 நிமிடம் வைத்து பின் பிரஷ் மூலம் சுத்தம் செய்யவும்.பின் ஒரு காட்டன் டவலால் பாத ஈரங்களை துடைத்து, நல்லெண்ணெயை சிறிது சூடாக்கி, பாதங்களில் தடவலாம். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்யலாம்.மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் பாத வெடிப்புகள் நீங்கும்.உருளைக்கிழங்கை உலர்த்தி மாவு போல் அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதங்கள் பளபளக்கும்.பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமென்றால், பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் 5 நிமிடம் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

May 22, 2024

நரைமுடிக்கு  இயற்கை ஹேர் பேக்

இயற்கை ஹேர் பேக் மூலம் நரைமுடியை எளிதாக கருப்பாக மாற்றலாம். ஒரு கப் நீரில்2 ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி கொள்ளவும். ஒரு கைப்பிடி மருதாணி இலை, மிளகு15, கிராம்பு5, காபி தூள் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு2 ஸ்பூன் மற்றும் டீ தூள் நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதை தலைக்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசலாம். இதை வாரத்திற்கு 2 முறை செய்தால் பலன் கிடைக்கும் .

May 21, 2024

தேங்காய் பால் - பாதாம் பேஸ் பேக்!

முகத்தில் உள்ள சுருக்கங்களை விரட்டி, இளைமை தோற்றத்தை மீட்டு தரும்,தேங்காய்பால், பாதாம், எலுமிச்சை சாறு பயன்படுத்தி ஒரு பேஸ் பேக்,செய்முறை –  ஒரு  கோப்பையில் போதுமான அளவு தண்ணீருடன் பாதாம் சேர்த்து 8 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.பின் இந்த பாதாமை மட்டும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து பால் பவுடரையும் சேர்த்து அரைத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள இளமையை மீட்டு தரும் பேஸ்பேக் தயார்.முறையாக தயார் செய்த இந்த பேக்கினை முகம் ,கழுத்து பகுதிக்கு தடவி 25 - 30 நிமிடங்களுக்கு உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்துவிடவும்.பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய் பால், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.  இந்த பேக் சரும வறட்சிபிரச்சனையை போக்குகிறது.பாதாம்பயன்படுத்திதயார்செய்யப்படும்இந்தபேக்ஆனது, சருமம்தளர்வடைவதைதடுக்கிறது.சருமத்தில்காணப்படும்சுருக்கங்கள், மென் கோடுகளை மறைக்கிறது.பால்பவுடர், தேங்காய்பால்உள்ளிட்டபொருட்கள்கொண்டுதயார்செய்யப்படும்இந்தபேக்கொலாஜென்தட்டுப்பாட்டைதடுத்து, பொலிவான , மிருதுவான சருமம் பெற உதவுகிறது.

May 20, 2024

 சருமத்துக்கு நன்மைகளை தரும் ஐஸ்கட்டி 

  சருமத்திற்கு ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் இறந்த செல்கள் நீங்கும் அதேநேரம் புதிய திசுக்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, சருமம் பொலிவாக மாறும்.ஐஸ் கட்டியின் அழற்சி எதிர்ப்பு பண்பு, சரும தடிப்புகள் மற்றும் சரும கொப்புளங்களை குறைக்கிறது. அந்த வகையில் பருக்கள் மற்றும் பருக்களின் தழும்புகளை மறைக்கிறது.தூக்கமின்மை காரணமாக வீக்கமடையும் கண்கள் மற்றும் கண்விழி (உஷ்ண) கட்டிகளை கரைக்க இந்த ஐஸ் கட்டிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.சருமத்தின் இறந்த செல்களைவெளியேற்றும் ஐஸ் கட்டியினை வெள்ளரிக்காயுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பயன்படுத்த கருவளையங்கள் மறையும்.ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமம் தளர்வடைவது தடுக்கப்படுவதோடு சருமத்தில் காணப்படும் மென் கோடுகளும் மறையும்.சருமத்தின் pH அளவை மேலாண்மை செய்யும் ஜஸ் கட்டிகளை சருமத்திற்கு தவறாது பயன்படுத்தி வர, சருத்தின் அதிப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சரும வறட்சி பிரச்சனையும் நீங்குகிறது.பாலில் முக்கி எடுத்த ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு மசாஜ் செய்து வர, சருமத்தின் இறந்த செல்களை நீங்குவதோடு, சருமத்தில் காணப்படும் கருந்திட்டுக்களும் மறையும்சிறிதளவு கிரீம் டீ தூளுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் தழும்புகள் மறையும்.

May 19, 2024

வெயிலினால் ஏற்படும் முகம் எரிச்சலை சரி செய்ய தர்ப்பூசணி

தர்ப்பூசணி சாற்றை ஒரு பவுலில் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் வெள்ளரிக்காய் எடுத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிக்கட்டி வெறும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  இதனை ஒரு காட்டன் துணியால் நனைத்து கொண்டு முகத்தில் அப்பளை செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி விடும்.தர்பூசணியை எடுத்து மிக்சி ஜாரில் எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். நீங்கள் வெயிலில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு பிறகு இந்த தர்பூசணி பேஸ்ட்டை முகத்தில் அப்பளை செய்ய வேண்டும். இதனை முகத்தில் ஒரு 15 நிமிடத்திற்கு வைத்து விட்டு அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வெயிலினால் ஏற்படும் முகம் எரிச்சலை சரி செய்ய  முடியும்.

May 16, 2024

சரும நிறம் மாற்றும் ஆவாரம் பூ

பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும்கஸ்தூரிமஞ்சளுடன்ஆவாரம்பூவைசமஅளவுசேர்த்துசிறிதளவுவசம்பும்சேர்த்துஅரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையை தேய்த்துக்குளிப்பதன் மூலம் சருமம் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும். ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்துபயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் ரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும். ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும். ஆவாரம் பூவுடன் சிறுவெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் அழகுபெறும். இதனால் உடல் நிறமும் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும். ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும். ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின்கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளரத் தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்..

May 15, 2024

அலோ வேரா ஜெல் , தயிர் ஹேர் மாஸ்க்

அலோ வேரா ஜெல் முடிக்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை முடிக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கவும் உதவுகிறது. இதற்கு முதலில் கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் வைக்கவும். பிறகு அதனுடன் தயிர் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கலந்து, தலைமுடியில் தடவவும்.இப்போது அதை 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.பின்னர், ஷாம்பு கொண்டு முடியை சுத்தம் செய்யவும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 ... 26 27

AD's



More News