தினமும் முகத்தில் சோப்பு போடுவதற்கு பதிலாக, ஆவாரம் பூ பொடி, மஞ்சள் பொடி சேர்த்து, முகத்தில் தேய்த்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள்,கரும்புள்ளிகள், மருக்கள், கரும் திட்டுக்கள் நிரந்தரமாக நீங்கும். முகம் அழகு பெறும்.
பொடுகு பிரச்சனையை அடியோடு விரட்டி ஆரோக்கியமான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் தேவையான பொருட்கள் - வேப்பிலை -1 கைப்பிடி |இஞ்சி - 3"அளவு | எலுமிச்சை - 1 | மிதமான ஷேம்பு - 2 ஸ்பூன்செய்முறை முதலில்இஞ்சி, எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சுத்தமான பாத்திரம் ஒன்றில் சேர்க்கவும்.பின் இதனுடன் வேப்பிலை மற்றும் 2 கப் அளவு நீர் சேர்த்து 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அடுப்பில் இருந்து இறக்கவும். நன்கு ஆறியதும், வடிகட்டி - திப்பைகளை நீக்கி தனி ஒரு கோப்பையில் சேர்க்கவும். பின் இதனுடன் ஷேம்பு சேர்த்து கலக்கி இந்த பேக்கினை கூந்தலுக்கு அப்ளை செய்து 45 நிமிடங்கள் வரை உலர விடவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி கூந்தலை அலசவும்.இயற்கை எண்ணெயை தக்க வைக்கும் இந்த மாஸ்க் ஆனது, கூந்தல் வறட்சி பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவி செய்கிறது.ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட எலுமிச்சை, வேப்பிலை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மாஸ்க், பொடுகு பிரச்சனையை போக்குகிறது.தலைமுடி வேர் கால்களை பலபடுத்தி, கூந்தல் உதிர்வை தடுக்கும் இந்த மாஸ்க் ஆனது, அடர்த்தியான கூந்தல் பெற உதவி செய்கிறது.
கூந்தல் உதிர்வை தடுத்து உறுதியான, பளபளப்பான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் ஒன்றினை முட்டை, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலவையில் தயார் செய்யதேவையான பொருட்கள் - முட்டை - 2| தேங்காய் எண்ணெய் -1 ஸ்பூன் | ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்செய்முறை முதலில் எடுத்துக்கொண்ட முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை பிரித்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.பின் இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் நன்கு ஒரு முறை கரைத்துக்கொள்ளவும்.இறுதியாக இதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு ஒரு முறை கரைத்துக்கொள்ள கூந்தல் ஆரோக்கியம் காக்கும் ஹேர் மாஸ்க் தயார் தயார் செய்த இந்த ஹேர் மாஸ்க்கினை, கூந்தலுக்கு அப்ளை செய்து 30 - 35 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் முட்டையின் வெள்ளை கரு பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மாஸ்க், கூந்தல் சேதங்களை தடுக்க உதவுகிறது.கூந்தல், உச்சந்தலையில் இயற்கை எண்ணெயை தக்க வைக்கும் பண்பு கொண்ட இந்த ஹேர் மாஸ்க், கூந்தல் வறட்சியை போக்கி மிருதுவான கூந்தல் பெற உதவி செய்கிறது!கூந்தல் வறட்சியை போக்குவதோடு, கூந்தலின் இயற்கை நிறத்தை மீட்டு தரும் தன்மை கொண்ட இந்த ஹேர் மாஸ்க் ஆனது, பளபளக்கும் கூந்தல் பெற உதவி செய்கிறது.
கொழுப்பு இழப்பு ஷேக் செய்ய, முதலில், 2 ஸ்பூன் சியா விதைகள் அல்லது சப்ஜா விதைகளை இரவில் ஊற வைக்கவும். 1-வாழைப்பழம், 2-பாதாம், 2 அக்ரூட் பருப்புகள், 10 முதல் 12 மக்கானா,விதைகளை நீக்கிய 2 பேரீச்சம்பழங்கள்,1 டீஸ்பூன் எள்,1 டீஸ்பூன் ஆளி விதை, 1 தேக்கரண்டி பூசணி விதைகள்,1 தேக்கரண்டி ஊறவைத்த கொண்டைக்கடலை, 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை.இவை அனைத்தையும் ஸ்கிம்ட் பாலில் கலக்கவும். இப்போது அதில் இரவு ஊறவைத்த விதைகளை கலந்து பருகவும். தினமும் காலை இந்த ஷேக்கை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு, குறைந்தது2 லிட்டர் தண்ணீரை சிறிய இடைவெளி விட்டு அவ்வப்போது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், ஒரு மாதத்தில், உங்கள் இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைந்து, எடையும் குறைந்தது 4 கிலோ குறையும்.
வெயிலில் கருத்து போகும் முகத்தை ஆவாரம் பூ பொலிவடைய செய்யும்.ஆவாரம்பூ பொடியுடன் ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து காய்ச்சாத பசும்பால் கலந்து நைசாக அரைத்து சற்று அதிகமாக பற்று போல முகத்திலும், கழுத்தை சுற்றிலும், தடவி வந்தால் தேமல், கருமை நிறம் போன்றவை மாறி பளிச்சென இருக்கும் . தங்கம் போல் மினுமினுக்க, இயற்கையாக முகம் ஜொலிக்கும்.இந்த பூக்களை நம் சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்தும் போது பூவினும் மென்மையான சருமத்தை பெறலாம்.
தங்க பஸ்பம் என்று சொல்லப்படும் செம்பருத்தி பூவை உள்ளுக்குள் எடுப்பதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெறலாம்.பூ.இலை இரண்டுமே சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. முழுமையான செம்பருத்தி பூவை காய வைத்து பொடித்து கொள்ளவும்.செம்பருத்திபூ பொடி- 3 ஸ்பூன், பாசி பயறு மாவு- 3 ஸ்பூன், பால் தேவைக்கு.இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி ஈரப்பதம் சீராக இருக்கும். சருமம் புத்துணர்ச்சியுடனும், முகத்தில் தனி அழகும் இருக்கும்.
இவை விலை அதிகம் என்றாலும் முகத்திற்கு அதிக பலனைத் தரும். மாசு, மருக்கள் நீங்க குங்குமப் பூவை பயன்படுத்தலாம்.10 குச்சி குங்குமப்பூ எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வருவதால் முகம் பளபளக்கும். கண்களை சுற்றி, உதட்டை சுற்றி, மேலும் முகத்தில் கருமை அதிக மாக இருக்கும் இடங்களில் கூடுதலாக தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து முகத்தை கழுவும் போது முகத்தில் இருக்கும் கருமை மொத்தமும் நீங்கி சிவந்த நிறத்தை பெற்று பளிச்சென இருப்பதை உணரலாம். பக்க விளைவு எதுவும் இல்லாத இந்த பேஸ்டை கழுத்து பகுதிகளிலும் தடவி வரலாம்.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். ஆனால் முகஅழகைகெடுக்கும்விதமாகபருக்கள்,கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்..தேவையான பொருட்கள்சார்க்கோல்- 1 ஸ்பூன்சோள மாவு- 1 ஸ்பூன்தேங்காய் தண்ணீர்- 1 ஸ்பூன்தயாரிக்கும் முறைஒரு பவுலில் சார்க்கோல், கார்ன்ஃப்ளார் மற்றும் தேங்காய் தண்ணீர் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைத் தண்ணீரில் கழுவலாம்.உங்கள் சருமம் வறண்டு இருந்தால் இந்த கலவையில் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.
மென்மையான, அழகான, மருத்துவக்குணம்நிறைந்தபூக்களைக்கொண்டுமுகத்தையும், சருமத்தையும், அழகாக்க முடியும். பூக்களில் வைட்டமின்கள், புரதங்கள், சத்துக்கள் நிறைந்துள்ளன. எளிய முறையில், குறைந்த செலவில், முகத்தின் அழகை பூக்களால் பாதுகாக்கலாம். சருமத்திற்கு அழகுத் தரும் பூக்களை பற்றி அறிந்துக் கொள்வோம்.ரோஜாஇன்றும் அழகு சாதனங்கள் அனைத்திலும், ரோஜாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. ரோஜாவின் நிறம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக தானே இருக்கும்.ரோஜா இதழை பறித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான பேஸ்ட் தயாரிக்க...ரோஜா பொடி _ 4 ஸ்பூன் வெந்தயப் பொடி _2 ஸ்பூன் தயிர் _தேவைக்குஇந்த மூன்றையும் பேஸ்ட் போல குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் இருக்கும் தழும்பு களும், கரும்புள்ளிகளும் நீங்கும். முக்கியமாக கரடு முரடான முகம் பளபளப்பாக பளிச்சென்று இருக்கும். தினமும் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்; ஒரு கப் பாசி பயறு, கால் கப் உளுந்து,4 டேபிள் ஸ்பூன் அரிசி, 1 டீஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு,1 வெங்காயம் நறுக்கியது, 4 பச்சை மிளகாய், பெருங்காயப் பொடி,கொத்தமல்லி ஒரு கை பிடிசெய்முறை: இதை நீங்கள் இரவு செய்வதற்கு முடிவு செய்தால், காலையில் மாவு ரெடி செய்து கொள்ளுங்கள். பாசி பயறு, உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்கவும்.4 மணி நேரம் ஊறியதும் அதை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். அதை4 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, வெங்காயம், கொத்தமல்லி நறுக்கியது ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய் ஊற்றி அடை போல் சுட்டு கொள்ளவும்.