25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Feb 05, 2026

இளம் இந்திய அணி 'யூத்' உலக கோப்பை கிரிக்கெட்டில், 10 வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.

இந்தியா 10வது முறையாக உலககோப்பை தொடரின் (19 வயது) பைனலுக்கு  முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி. சி., உலக கோப்பை (50 ஓவர் )கிரிக்கெட் 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், நேற்று ஹராரேயில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 310/4 ரன் எடுத்தது. இந்திய அணி 41.1 ஓவரில் 311/3 ரன் எடுத்து வெற்றி பெற்று, 10 வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. 

Feb 05, 2026

இந்தியாவின் ஹிதேஷ், பிரீத்தி, பிரியா உள்ளிட் டோர் எலைட் குத்துச் சண்டை முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

ஸ்பெயினில்எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர்  ஸ்பெயினில்  21 நாடுகளை சேர்ந்த, 214 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில்  5-0 என, கஜகஸ்தானின் அலியாஸ்கர் சிம்பத்தை  வென்றார். பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் பிராச்சி 5-0, என ஸ்பெயினின் வனேசா மோரெல் ரமிரெசை வென்றார். கனடாவின் அலெசியாவை இந்திய வீராங்கனை பிரியா (60 கிலோ) 5-0 என, தோற்கடித்தார். ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா 5-0 என, நெதர்லாந்தின் பின் பாசை வென்றார் . இந்தியாவின் சச்சின் (60 கிலோ), அபினாஷ் (65), தீபக் (70), ஆகாஷ் (75), அன்குஷ் (80) மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

Feb 05, 2026

சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடரில் இந்தியாவின் சுஜீத் பைனலுக்கு முன்னேறினார்.

சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடர் குரோஷியாவின் ஜாக் ரெப் நகரில்நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் சுஜீத், பிரான்சின் காம்ஜத்தை 65 கிலோ பிரிவில் காலிறுதியில் 10-0 என வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் சுஜீத், அமெரிக்காவின் ஜோசப் கிறிஸ்டோபர் மோதினர். சுஜீத் 11-0 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத், 61 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடந்தன. முதல் போட் டியில் தோற்ற அமன், அடுத்த போட்டியில் ஈரானின் ரேஜாவை 12-2 என வென்றார்.

Feb 04, 2026

நட்பு கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி.

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் ஆஸ்திரேலியாவில்,, 2026, மார்ச் 1-26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது.இந்திய அணி தகுதிச்சுற்றில், முதன் முறையாக தகுதி பெற்று , முதல் போட்டியில் வியட் நாமை (மார்ச் 4, இடம் பெர்த்) சந்திக்க உள்ளது. தற்போது, இத்தொடருக்கு தயாராகும் வகையில் துருக்கி சென்றுள்ள இந்திய பெண்கள் அணி நட்பு கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி இரண்டாவது போட்டியில் ரஷ்யாவின் ஜிவெஸ்டா பெர்ம் அணியை சந்திக்க உள்ளது. 

Feb 04, 2026

சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில், 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர் சென்னையில்,பிப்ரவரி 10-15 2026,இல் நடக்க உள்ளது.

சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில், 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர் 2021 முதல் நடத்தப்படுகிறது. இத்தொடர் 2023, 2024 ஆண்டு கோவாவில் இருமுறை நடந்தது. முதன் முறையாக கடந்த ஆண்டு (2025)  சென்னையில் நடந்தது.இரண்டாவது ஆண்டாக, 'ஸ்டார் கன்டெண்டர்' தொடர், சென்னையில் வரும் பிப் 10-15 ல் நடக்க உள்ளது. மொத்த பரிசுத் தொகை, ரூ.2.90 கோடி. இந்திய சார்பில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில், 23 பேர், பிரதான சுற்றில் பங்கேற்கின்றனர்.

Feb 04, 2026

பெண்கள் பிரிமியர் லீக் பைனலுக்கு, டில்லி அணி தொடர்ந்து நான்காவது முறையாக முன்னேறியது.

 பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் இந்தியாவில், நடக் கிறது.லீக் சுற்றில் பெங்களூரு அணி, 8ல் 6 வெற்றி பெற்ற பட்டியலில் முதலிடம் பெற்று, நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. வதோதராவில் நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப் பட்டியலில் 2, 3வது இடம் பிடித்த குஜராத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா 'பீல்டிங்' தேர்வு செய்தார். குஜராத் அணி 20 ஓவரில் 168/7 ரன் எடுத்தது. டில்லி அணி 15.4 ஓவரில் 169/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. பெங்களூரு, டில்லி அணிகள் நாளை நடக்கும் பைனலில், மோத உள்ளன. 

Feb 04, 2026

இங்கிலாந்து யூத் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு முன்னேறியது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை(50 ஓவர்)16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில்நடக்கிறது. நேற்று புலவாயோவில் நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 277/7 ரன் எடுத்தது.  ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.

Feb 04, 2026

குளிர்கால ஒலிம்பிக் போட்டி.

இத்தாலியின் மிலன் கோர் டினோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி (பிப்ரவரி 6-22), 22,000 சதுர கி.மீ., பரப்பளவில் நடக்க உள்ளது. பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்."ஒலிம்பிக் போட்டிக்கானதிட்டங்களில் விரைவில் மாற்றங்களை எதிர் பார்க்கலாம். குளிர்கால ஒலிம்பிக், இளம் தலைமுறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்," என்று,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரி கூ றினார். 

Feb 03, 2026

இந்தியாவின் குகேஷ் டாடா ஸ்டீல் செஸ் தொடரில் 8வது இடம் பிடித்தார்.

டாடா ஸ்டீல் செஸ் தொடரின்88வது சீசன் நெதர்லாந்தில், மாஸ்டர்ஸ் பிரிவு13வது சுற்றில், இந்தியாவின் குகேஷ்(வெள்ளை), ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் (கருப்பு) மோதினர். இப் போட்டி 57வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ், இந்தியாவின்  குகேஷ்,  தலா 6.5 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்தனர். பிரக்ஞானந்தா (5.5) 11வது இடம் பிடித்தார். அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் தலா 4.5 புள்ளிகளுடன் 12வது இடத்தை பிடித்தனர். 

Feb 03, 2026

புரோ மல்யுத்த லீக் தொடரில் ஹரியானா தண்டர்ஸ் அணியினர் கோப்பை வென்றனர்.

புரோ மல்யுத்த லீக்5வது சீசன் இந்தியாவில் நடந்தது.6 அணிகள் பங்கேற்றன.உ.பி.,யில் உள்ள நொய்டாவில் நடந்த பைனலில் ஹரியானா தண்டர்ஸ், டில்லி டங்கல் அணிகள் மோதின.டில்லி அணி, முதல்7 போட்டி முடிவில்4ல் வென்று  ஹரியானாவை(3) முந்தியது.8வது போட்டியில் ஹரியானா வெற்றி பெற, ஸ்கோர் 4-4 என ஆனது. முடிவில் ஹரியானா 5-4 என ' வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. ரூ.1.5 கோடி பரிசு பெற்றது. 

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 170 171

AD's



More News