காஷ்மீரைசேர்ந்தஇந்தியாவின்இளம்அட்டிகாமிர்,11. ஆண்கள்ஆதிக்கம்செலுத்தும்கார்பந்தயத்தில்,'சிங்கப்பெண்ணாக' சீறுகிறார் . இவர், 'பார்முலா-1' பயிற்சி அகாடமிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை. டபியுள். எஸ்.கே., சூப்பர் மாஸ்டர் கார்ட் ரேசில், இத்தாலி, லா கன்காவில்நடந்த ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் (49.76 வினாடி) இவர், 2வது இடம் பெற்று சாதித்தார்.இவரது 'கார்ட்' பைனலுக்கு முந்தைய சுற்றில் ,தொழில்நுட்ப பிரச்னையால் 'ஸ்டார்ட்' ஆக வில்லை. பைனலுக்கான பட்டியலில் 18வது இடத்திற்கு பின்தங்கினார். "அறிமுக வீராங்கனையாக தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. பந்தயத்தின் போது, கார்ட்டில் பிரச்னை ஏற்படுவது சகஜம்," என்று அட்டிகா மிர் கூறினார்.
அகில இந்திய கால் பந்து கூட்டமைப்பு சார் பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2014 முதல் இந்தி யன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர்நடத்தப்படுகிறது. இதன் 15 ஆண்டு ஒப்பந்தம் 2025, டிச.8ல் முடிந்தது.ஒப்பந்தம் புதுப்பிக்கப் படாத நிலையில், 12வது சீசன் நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசின் - தலையீட்டின் பேரில் ஐ.எஸ்.எல்., தொடர்வரும் பிப்.14ல் துவங்குகிறது. இதற்கான உத்தேச அட்டவணை வெளியானது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்க , 91 போட்டிகள்உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை தலா மோதும்.ஐ.எஸ்.எல்., தொடரில் பிப். 19ல் இருமுறை கோப்பை வென்ற சென்னை அணி (2015, 2017-18). தனது முதல் போட்டியில் மும்பைஅணியைஎதிர்கொள்கிறது.சென்னையில் 7 போட்டியில் பங்கேற்க உள்ளது.
இந்தியாவில் பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்த லீக் போட்டியில், குஜராத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. டில்லி அணி 20 ஓவரில் 171/8 ரன் மட்டும் எடுத்தது. குஜராத் அணி 20 ஓவரில் 174/9 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், நேற்று 'சூப்பர்-6' போட்டிகள் துவங்கின. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, ஜிம்பாப்வேயை சந்தித்தது. ஜிம்பாப்வே, 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணி 37.4 ஓவரில் 148 ரன்னுக்கு தோற்றது. இந்திய அணி 50 ஓவரில் 352/8 ரன் குவித்தது. பட்டியலில் இந்தியா (6 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.
இந்தியாவின் ரந்தீர் சிங் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவரான இவர் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார். உஸ்பெகிஸ்தானில் நேற்று நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கத்தாரைச் சேர்ந்த ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல்தானி புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, 2028-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் தொடருவார்.ஷேக் ஜோவான் கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி உரிமத்தை கத்தாருக்கு பெறுவதே அவரது இலக்காகும்.
டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜானிக் சினெர் 6–1, 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான லூசியானோ டார்டேரியை வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார். உலகதரவரிசையில் 6-வது இடம் வகிக்கும், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஜெசிகா பெகுலா (அமெ ரிக்கா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வென்றனர். மேடிசன் கீசை அமெரிக்கா). டபுள் பால்ட் (6 முறை)மற்றும் பந்தை வலுவாக வெளியே அடிக்கும் தவறுகளை ( 28 முறை) அதிகமாக செய்தது மேடிசனுக்கு பின்னடைவாக அமைந்தது. 4 அமெரிக்க மங்கைகள் பெகுலா, அனிசிமோவா, கோகோ காப், இவா ஜோவிச் கால் இறுதியை அடைந்துள்ளனர். 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் 4 அமெரிக்க வீராங்கனைகள் கால் இறுதிக்கு வந்துள்ளனர்.
20 ஓவர் கிரிக் கெட் போட்டி ,5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் (டபிள்யூ.பி.எல்.) குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 16-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர் கொண்டது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. நாட்சிவெர் 100 ரன்களுடன் (57 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. 15ரன்கள் வித்தியாசத்தில்மும்பை அணி வெற்றி பெற்றது.
நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் ,டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் ,13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8-வது சுற்று நடந்தன. இந்தியாவின் குகேஷ் 41-வது நகர்த்தலில் விளாடிமிர் பெடோசீவை (சுலோவேனியா) தோற்கடித்தார். முந்தைய 2 ஆட்டங்களில் தோற்றிருந்த குகேஷ் வெற்றிப பாதைக்கு திரும்பினார்.தமிழகத்தின் பிரக்ஞானந்தா - துருக்கியின் யாஜிஸ் கான் எர்டோக்மஸ் இடையிலான ஆட்டமும், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி-அரவிந்த் சிதம்பரம் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.8 சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்து சத்தோரோவ் 5% புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜவோகிர் சிந்தாராவ் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.4-வது இடத்தை குகேஷ் 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி) பகிர்ந்துள்ளார்.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில், பெண்கள்ஒற்றை யர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, பெலாரசின் சபலென்கா, 55வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொட போவாவை எதிர்கொண்டார். . 2 மணி நேரம், 4 நிமி டம் நீடித்த இப்போட்டியின் முடிவில் சபலென்கா 7-6, 7-6 என வெற்றி பெற்றார். உலகின் 'நம்பர்-1’ வீரர், ஸ்பெயினின் அல்காரஸ், 32வது இடத்திலுள்ள பிரான்சின் மவுடெட் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் மோதினர். 2 மணி நேரம், 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அல்காரஸ், 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் , இந்தியாவந்துள்ள நியூசிலாந்து அணி பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது.நேற்று இரண்டாவது போட்டி, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவ ரில் 208/6 ரன் எடுத்தது, இந்திய அணி 15.2 ஓவரில் 209/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.