25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Feb 03, 2026

சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம் பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டனில் பெண்களுக்கான பைனலில், உலகின் 'நம்பர் -31' இந்தியாவின் அனாஹத் சிங்17. உலகின்'நம்பர்-10' இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடி28,மோதினர்.அனாஹத்3,0(1210,11-,5,117) என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டில்லியை சேர்ந்த அனாஹத், சீனியர் பிரிவில் தனது 15வது பட்டம் வென்றார்.

Feb 03, 2026

இந்திய வீராங்கனை சவிதா ஹாக்கி உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கூறினார்.

கடந்த2025ல் இந்திய ஹாக்கி அணி, சிறப்பாக செயல் படவில்லை. புரோ லீக் தொடரில்16 போட்டியில்10 புள்ளி மட்டும் பெற்று, வெளியேறியது. உலக கோப்பைக்கு(வரும் ஆக.14,30, பெல்ஜியம், நெதர்லாந்து) நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.ஐதராபாத்தில் நடக்க உள்ள உலக கோப்பை தகுதிச்சுற்றில்,புதிய பயிற்சியாளர் மரிஜ்னே தலைமையில்(மார்ச்8,14) பங்கேற்க உள்ளது.இதில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட  8 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் உலக கோப்பை தொடருக்கு 'டாப்-3' இடம் பெறும் அணிகள் முன்னேறும்.  விளையாட்டில் ஏற்ற, இறக்கம் சகஜம் தான். கடந்த ஆண்டு எங்களுக்கு மோசமாக அமைந்தது. வீராங்கனைகளிடம் போதிய உடற்தகுதி ('பிட்னஸ்') இல்லாதது தான் முக்கிய காரணம். 'பிட்னஸ்' சரியாக இருந்ததால் தான், டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பெற்றோம்.மீண்டும் தற்போது சறுக்கி விட்டோம். உலக கோப்பை தகுதிச்சுற்று மிக முக்கியம் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். இதில் வெற்றி பெற்று, உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்று கோல்கீப்பர் சவிதா 35, கூறினார். 

Feb 03, 2026

'பிபா' சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசனில் ஆர்சனல் அணி,கோப்பை வென்றது .

'பிபா' சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசன், லண்டனில் நடந்த பைனலில் ஆர்சனல் (இங்கிலாந்து), கொரிந்தியன்ஸ்(பிரேசில்) அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி2,2 என சமநிலையில் இருந்தது. ஆர்சனல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Feb 03, 2026

சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் செர்பியாவின் ஜோகோவிச் 3வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஒற்றையர் பிரிவில்,  முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது இடத்தில் நீடிக்கிறார்.ஆஸ்திரேலிய ஓபனல் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4 வது இடத்தில் இருந்து 'நம்பர் -3' இடத்தை கைப்பற்றினார்.

Feb 02, 2026

மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை தேவிகா சிஹாக் 'சாம்பியன்' .

மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து பாங்காக்கில் நேற்று பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை தேவிகா சிஹாக், மலேசியாவின் கோ ஜின் வெய்யை சந்தித்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் தேவிகா 21-8, 6-3 என்று முன்னிலையில் இருந்த போது, 2 முறை ஜூனியர் உலக சாம்பியனான ஜின் வெய் தசைப்பிடிப்பால் பாதியில் விலகினார். இதையடுத்து தேவிகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. தேவிகா பேட்மிண்டன் உலகதரவரிசையில் 63-வது இடத்தில் உள்ளார் .

Feb 02, 2026

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்தொடரில் கார்லஸ் அல்காரஸ் 'சாம்பியன்' .கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

மெல்போர்ன் நகரில் கடந்த2 வாரமாக நடந்து வந்த'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் பெண்கள் பிரிவில் கஜகஸ் தானின் எலினா ரைபகினா வென்றார்.நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரசும் (ஸ்பெயின்), 4-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர் பியா) மோதினர் .ஆட்டத்தின் முடிவில் அல்காரஸ் 2-6,6-2,6-3,7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக வென்றார். அவருக்கு ரூ.26.75 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது. 

Feb 02, 2026

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்று, தொடர் நாயகன் விருது பெற்றார். 

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு எதிரான5வது மற்றும் கடைசி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி5 விக்கெட்டுக்கு271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன்103 ரன்களும்(6 பவுண்டரி,10 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 63 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்து 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய கேப்டன் சூர்யகுமார் (5 ஆட்டத் தில் 3 அரைசதம் உள்பட 242 ரன்) தொடர் நாயகன் விருது பெற்றார்.  

Feb 02, 2026

பயர் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங்.

அமெரிக்காவின் வாஷிங்டனில், பயர் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டனில்பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில், உலகின்'நம்பர்-31' இந்தியாவின் அனாஹத் சிங்,23வது இடத்தில் உள்ள அமெரிக்காவின்3,1 சப்ரினா சோபி மோதினர். இதில் இந்தியாவின் அனாஹத் (11-9, 11-3, 9-11, 11-5) எனக் கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார்.

Feb 02, 2026

பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில், 'எலிமினேட்டர்' போட் டிக்கு தகுதி பெற்ற டில்லி அணி.

வதோதராவில் பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் டில்லி, உ. பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா 'பீல்டிங்' தேர்வு செய்தார். டில்லி அணி 18.4 ஓவ ரில் 126/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உ.பி., அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது,  புள்ளிப் பட்டியலில் 3வது இடம் பிடித்த டில்லி அணி (8 புள்ளி) 'எலிமினேட்டர்' போட்டிக்குள் நுழைந்தது.நாளை நடக்கவுள்ள 'எலிமினேட்டர்' போட்டியில் டில்லி, குஜராத் அணிகள் மோதுகின்றன.

Jan 31, 2026

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி,5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடர்போட்டிகள்.

 5 போட்டிகள் கொண்ட 'டி -20' தொடரில், முதல் மூன்றுதொடரை இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டியில் தோற்றது. இன்று ஐந்தாவது போட்டி, கேரளாவின்திருவனந்தபுரம், கிரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது.இந்திய அணியினர்  ஐந்தாவது 'டி-20' போட்டியில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் ,உள்ளூர் நாயகன் சாம்சனை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். சிலர் 'போட்டோ' எடுக்க முயன்றனர். கேப்டன் சூர்யகுமார், “சேட்டனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். அவருக்கு வழி விடுங்கள்," என கூறினார். 

1 2 ... 56 57 58 59 60 61 62 ... 170 171

AD's



More News