25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Feb 07, 2026

ஐ.சி.சி., உலக கோப்பை ‘உலக' சாம்பியன் ஆறாவது கோப்பை வென்ற இளம் இந்தியா. 

.19 வயதுக்கு உட் பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், ஹராரேயில் நேற்று நடந்த பைனலில் இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ்மாத்ரே, பேட்டிங் தேர்வு செய்தார் 50 ஓவரில் 411/9 ரன் குவித்தது இந்திய அணி. .40.2 ஓவரில் 311 ரன் னுக்கு ஆல் அவுட்டானதுஇங்கிலாந்து அணி. வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 175 ரன்  குவித்து சாதனை. 10 முறை பைனலில் உலக கோப்பை (19 வயதுக்கு உட் பட்ட) தொடரில் விளையாடிய இந்திய அணி ஆறாவது முறையாக (2000, 2008, 2012, 2018, 2022, 2026) சாம்பியன் ஆனது. 

Feb 07, 2026

இந்தியாவின் நீலம், ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த தொடரில், வெள்ளி வென்றார்.

சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங் கிங்' தொடர் குரோஷியாவின் ஜாக் ரெப் நகரில், நேற்று பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் நீலம், ஜப்பானின் ஹாருனா  50 கிலோ பிரிவு பைனலில் மோதினர். இதில் நீலம் 2-5 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என  இத்தொடரில் இந்தியா 7 பதக்கம் இதுவரை வென்றுள்ளது. 

Feb 07, 2026

பிரிமியர் லீக் பெண்கள் கிரிக்கெட் பெங்களூரு அணி 2வது முறையாக வெற்றி.

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் பைனலில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா (87), ஜார்ஜியா (79) கைகொடுக்க பெங்களூரு அணி (204/4, 19.4 ໑) 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை (203/4) குஜராத்மாநிலம் வதோதராவில் வென்றது. பெங்களூரு அணி 2வது முறையாக (2024, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் ஸ்மிருதி, ஆட்ட நாயகி விருதை வென்றார்.ஸ்மிருதி மந்தனா, பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம்,  கடந்த ஆண்டு (நவ. 23) நடக்க இருந்த திருமணம் ரத்தானது. இந்த சோகத்தில் இருந்து மீண்ட ஸ்மிருதி, பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பை வென்று தந்தார்."களத்திற்கு, வெளியே கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் அணியை சிறப்பாக வழிநடத்தியஸ்மிருதி மந்தனாவுக்கு இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது என பெங்களூரு அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல்கூறினார். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்," என்றார். 

Feb 07, 2026

இந்தியாவின் பிரீத்தி, ஜடுமணி சிங் ,எலைட் குத்துச்சண்டை அரையிறுதிக்கு முன்னேறினர்.

 ஸ்பெயினில், எலைட் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஸ்பெயினில்,  . பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவார், ஸ்பெயினின் மரியாவைவீழ்த்தினார். இந்தியாவின் நீத்து (51 கிலோ), கனடாவின் மெக்கென்சிரைட்டை தோற்கடித்தார். இந்தியாவின் பூனம் (54 கிலோ), பிரியா (60), பிரஞ்சல் (65), காஜல் (65)  பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் வெற்றிபெற்றனர். 12 வீராங்கனைகள், 7 வீரர்கள் என, மொத்தம் 19 பேர் அரையிறுதிக்கு இந்தியா சார்பில் முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்தனர்

Feb 06, 2026

பெண்கள் பிரிமியர் லீக் பைனலில், டில்லி அணி 20 ஓவரில் 203 ரன் எடுத்தது .

பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் வதோதராவில்உள்ள கோடாம்பி மைதானத்தில் நேற்று நடந்த 4வது சீசனுக்கான பைனலில், டில்லி, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.டில்லி அணி 20 ஓவரில் 4 விக் கெட்டுக்கு 203 ரன் எடுத்தது. 

Feb 06, 2026

டி-20' உலக கோப்பை தொடர்  2026 பிப்ரவரி 7-ம் தேதிஆரம்பமாகிறது.

நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.'ஏ': இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா'பி': ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வேசி": இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்'டி' ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, யு.ஏ.இ., டி - 20' உலக கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 120 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 27.48 கோடி பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ.14.65 கோடி பெறும். கடந்த 2024ல் பார்படாசில் நடந்த 'டி-20' உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, கோப்பை வென்றது, 'டி-20' போட்டியில் ஒரே ஓவரில்போட்டியின் முடிவு திசை மாறும்.இதை உணர்ந்து இந்திய அணி கவனமாக செயல்பட்டால், 140 கோடி மக்களின் கோப்பை கனவை நனவாக்கலாம். சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறை யாக கோப்பை வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறது.

Feb 06, 2026

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இறுதிசுற்றில் இந்தியாவின் சம்ரத் ராணா-சுருச்சி சிங் ஜோடி 479.6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ் தானின் நிஜினா சைட்குலோவா-முகமது கமலோவ் ஜோடி 481.3 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. சீனதைபேயின் செங் யென் சிங்-ஹிக் சியாங் சென் கூட்டணி 412.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது.பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகாசாஹல்(237.9 புள்ளி)தங்கப்பதக்கமும், வன்ஷிகா சவுத்ரி (236.7 புள்ளி) வெள்ளிப்பதக்க மும் வென்றனர். இந்தோனேசியாவின் ஆசிபாரிஹாததுல் வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன் இளையோர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷி புர்வா (234.8 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், சாஹிக் கோக்லா (233) வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். பெண்கள் ஜூனியர் மற்றும் இளையோர்அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கப்பதக் கத்தை வென்றது. முடிவில் இந்தியா 10 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் தொடருகிறது. உஸ்பெ கிஸ்தான் 3 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 

Feb 05, 2026

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப்தொடரில் இந்திய அணி தங்கம் வென்றது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் டில்லியில் பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரி வில், ஈஷா சிங், மனு பாகர், சுருச்சி அடங்கிய இந்திய அணி, 1726.53 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றது. இந்தியாவின் ராணா சாம்ராட், ஷர்வன் குமார், வருண் தோமர் அடங்கிய இந்திய அணி, ஆண்களுக்கான 10 மீ., 'ஏர்பிஸ்டல்' பிரிவில் 1732.52 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றனர்.'தனி நபர் பிரிவு 10மீ., 'ஏர் பிஸ்டல்' பைனலில் இந்தியாவின் ராணா சாம்ராட், 220.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். இந்தியவீரர் ஷர்வன் குமார் (198.6) 4வது இடம் பிடித்தார்.

Feb 05, 2026

இந்திய ஆண், பெண்கள் அணிகள்,ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் முதல் போட்டியில் ,வெற்றி பெற்றன.

ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் ,இந்திய பெண்கள் அணி 'ஒய்' பிரிவில் தாய்லாந்து, மியான்மருடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்தியா, மியான்மரை எதிர்கொண்டது. முதலில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா  21-13, 21-16 மியான்மரின் துஸ்ஹரை வென்றார்.இந்தியாவின்  ரக்சித்தா ஸ்ரீ, சிர்பூவைஇரண்டாவது ஒற்றையர் போட்டியில் 21–12, 21-6 என வென்றார். மாளவிகா, லின் டினை ,21-9, 21-12 என வென்றார்.கடைசியாக நடந்த ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என ஜியா வெய்யை வென்று ,முடிவில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. 

Feb 05, 2026

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 6 புள்ளியுடன் பட்டியலில்இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது.

19 வயதுக்குஉட்பட்டஅணிகளுக்கானதெற்காசியகால்பந்துசாம்பியன்ஷிப்தொடர் நேபாளத்தில்இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என நான்கு அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, அடுத்து வங்க தேசத்திடம் தோற்றது,  மூன்றாவது, கடைசி போட்டியில் பூடானை எதிர்கொண்டஇந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.3 போட்டியில் 2ல் வென்ற இந்தியா (1 தோல்வி), 6 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது. மீண்டும் பிப். 7 ல் மீண்டும் வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.

1 2 ... 54 55 56 57 58 59 60 ... 170 171

AD's



More News