25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Feb 13, 2026

இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ,ஆசிய துப்பாக்கி சுடுதலில் (50 மீ., 'ரைபிள்-3பி') தங்கம் வென்று, உலக சாதனை.

ஆசிய துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' /'பிஸ்டல்') சாம்பியன்ஷிப் டில்லியில்,.ஆண்களுக் கான 50 மீ., ‘ரைபிள்-3. பொசிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் குமார் (593.34 புள்ளி), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (588.40). அகில் ஷியோரன் (588.32) ‘முதல்-3' இடம் பிடித்தனர். நீரஜ், ஐஸ்வரி பிரதாப் சிங், அகில் அடங்கிய இந்திய அணிகள் பிரிவில் 1769.106 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. ஐஸ்வரி பிரதாப் சிங், தனிநபர் பைனலில் புதிய உலக சாதனையுடன் (362.0 புள்ளி) தங்கத்தை வென்றார்.  நீரஜ் (361.8), அகில் (343.5) இந்திய வீரர்கள் முறையே வெள்ளி, வெண்கலம்  வென்றனர்.  அட்ரியன் (584.26), வேதாந்த் நிதின் வாக் மேர் (580.23), பிரின்ஸ் (577.22) அடங்கியஜூனியர் ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்' = கர்மாகர் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கம்வென்றது. தனிநபர் பிரிவில் அட்ரியன் (353.2) தங்கம், மற்றொரு இந்திய வீரர் மன்வேந்திரா சிங் ஷெகாவத் (338.6) வெண்கலம் வென்றார். 

Feb 13, 2026

டி-20' உலக கோப்பை லீக் போட்டி !

'ஏ' பிரிவு லீக் போட்டியில்இந்தியா, நமீபியா  நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. 'டாஸ்' வென்ற நமீபிய கேப்டன் ஜெரார்டு எராஸ்மஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார் இந்திய அணி 20 ஓவரில் 209/9 ரன் குவித்தது. நமீபிய அணி, 18.2 ஓவரில் 116 ரன்னுக்கு தோல்வி அடைந்தது. 'டி-20' உலக கோப்பை, லீக் போட்டியில் மும்பை, வான் கடே மைதானத்தில்,  நேற்று இத்தாலி, நேபாள அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இத்தாலி, பீல்டிங் தேர்வுசெய்தது. நேபாள அணி 19.3 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இத்தாலி அணி 12.4 ஓவரில் 124/0 ரன் எடுத்து வென்றது. 'பி' பிரிவு லீக் போட்டியில்இலங்கையின் பல்லேகெலேயில் நேற்று இலங்கை, ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஓமன் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது .இலங்கை அணி. 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன் எடுத்தது, ஓமன் அணி  120 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

Feb 13, 2026

விளையாட்டு போட்டிகள் .13TH FEB

ஆசிய கோப்பை கால்பந்து (17 வயது) சவுதிஅரேபியாவில், வரும் மே 5TO22 வரை நடக்கவுள்ளது.மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் "டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் உலக கோப்பைக்கு (கத்தார்) தகுதி பெறும். இந்திய அணி D பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா, வட கொரியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் வரும் பிப். 23-26ல் 'கேலோ இந்தியா ' குளிர்கால விளையாட்டின் 2வது சுற்று நடக்கவுள்ளது.ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில், புனேயில் இந்தியாவின் அன் அன்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட்கணக்கில் சக நாட்டை சேர்ந்த வைஷ்ணவி அத்கர், வைதேகி சவுத்ரி ஜோடியைவென்றது. 

Feb 13, 2026

, 'பிகர் ஸ்கேட்டிங் ஐஸ் டான்ஸ்' பிரான்ஸ் லாரன்ஸ், சிரெரான் ஜோடி தங்கம் வென்றனர்.

குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில், 'பிகர் ஸ்கேட்டிங் ஐஸ்டான்ஸ்' போட்டியில் பிரான்சின் லாரன்ஸ் போர்னியர் பியூட்ரி, குய்லுாம்சிரெரான் ஜோடி (90.18 புள்ளி) தங்கம் வென்றனர்.  அமெரிக்காவின்மேடிசன் சோக், ஈவன் பேட்ஸ் ஜோடி (89.72) வெள்ளி வென்றனர்.  கனடா ஜோடிக்கு வெண்கலம் கிடைத்தது. 

Feb 12, 2026

உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ தொடர் துபாயில் நடக்கிறது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்42/44/64 பிரிவில் இந்தியா சார்பில் சுமித் அன்டில்துபாயில் பங்கேற்றார். இவர் அதிகபட்சம் 68.26 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப் பற்றினார்.இந்தியாவின் பாக்யஸ்ரீ ,பெண்களுக்கான எப் 33/34 பிரிவு ஈட்டி எறிதலில் (14.13 மீ.,) தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு ஈட்டி எறிதல் வீரர் ரிங்கு ஹூடா (59.46 மீ.னா), எப் 46 பிரிவில் தங்கம் பெற்றார். .பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் (41.64 மீ.,) தன் பங்கிற்கு, தங்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் குருபாஸ்கர சேதுபதி எப் 42 பிரிவில், 53.66 மீ., துாரம் ஈட்டி எறிய, வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்தியாவின் திலிப் காவித், ஆண்களுக்கான 100 மீ., டி 46 பிரிவு ஓட்டத்தில் 10.94 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

Feb 12, 2026

இந்தியாவின் அனிஷ் (25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்') ஆசிய துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார்.

 ஆசிய துப் பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் தொடர் டில்லியில், ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனிஷ் (574.16 புள்ளி), ஆதர்ஷ் சிங் (573.17) முறையே 6, 7வது இடம் பிடித்த னர்.மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (561.9) 16வது இடம் பிடித்தார்.அனிஷ், ஆதர்ஷ் சிங், நீரஜ் குமார் அடங்கிய இந்திய அணி, 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' அணிகள் பிரிவில் ,1708.42 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்துவெள்ளி வென்றது. இந்தியாவின் அனிஷ் (23 புள்ளி)25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். ஆதர்ஷ் சிங் (11) 6வது இடத்தை கைப்பற்றினார். 

Feb 12, 2026

T-20 உலக கோப்பை A,'B,C' பிரிவு லீக் போட்டி.

இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பைதொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.  இதன் 'ஏ' பிரிவில் இன்றுநடக்கும் மோதலில்  இன்று நடப்பு சாம்பியன் ,இந்தியா, நமீபிய அணியை எதிர்கொள்கிறது. டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடக்கிறது..  'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், இலங்கையின் கொழும்புவில் அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த. ஆஸ்திரேலிய அணி  20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு  182 ரன் எடுத்தது அயர்லாந்து அணி 16.5 ஓவரில், 115 ரன்னுக்கு வரிசையாக 2வது தோல்வியை பெற்றது. 'சி' பிரிவு லீக் போட்டியில்  மும்பை, வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பீல்டிங்' தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது, T-20 உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டி.இங்கிலாந்து அணி 18.5 ஓவரில், 166 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது, 

Feb 12, 2026

'டி-20' உலக கோப்பைலீக் போட்டி 12th FEB

நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ,குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் மோதின. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/6 ரன் எடுத்தது, ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 187 ரன்னில் ஆல் அவுட்டாக, போட்டி சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது. இரு அணிக்கும் தலா  ஒரு ஓவர் தரப்பட்டன. போட்டி மீண்டும் 'டை' ஆனதுஐ.சி.சி., விதிப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படும் வரை, 'சூப்பர்  ஓவர்' தொடர்ந்து நடத்தப்படும். இரண்டாவது சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 23/0 ரன் எடுத்தது.ஆப்கானிஸ்தான் அணி 19/0 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

Feb 11, 2026

உலக கோப்பை டி-20' லீக் போட்டி .

 நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் சென்னையில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் மோதின . எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 173/6 ரன் எடுத்தது,  நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 175/0 ரன் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றிபெற்றது. .  'T-20' உலக கோப்பை லீக் போட்டி நேற்று நடந்த கொழும்புவில் யில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 190/9 ரன்  எடுத்து வெற்றி பெற்றது.  அமெரிக்க அணி 20 ஓவரில் முதல் 158/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. நமீபியா, நெதர்லாந்து அணிகள் ,டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின. நமீபிய அணி 20 ஓவரில்  156/8 ரன் எடுத்தது, நெதர்லாந்து அணி 18 ஓவரில் 159/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. 

Feb 11, 2026

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர்..

 புரோ லீக் தொடர் ,சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ,7வது சீசனில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் கோப்பை வெல்லும் அணி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கதகுதி பெறலாம்.  முதல் போட்டியில் இந்திய அணி இன்று பெல்ஜியத்தை எதிர் கொள்கிறது. நாளை அர்ஜென்டினாவுடன் போட்டிநடத்துகிறது. இரண்டாவது  முறையாக  மீண்டும் ரூர்கேலாவில் பிப் 14-ல் பெல்ஜியம், பிப். 15-ல் அர்ஜென்டினாவை சந்திக்கும்,போட்டிகள் நடக்க உள்ளன.   ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில் (இந்திய அணி கேப்டன்), இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்று, இவர்கள்சிறப்பாக செயல் பட்டதுமகிழ்ச்சி தருகிறது.. மீண்டும் தொடர்ந்தால், வெற்றி எளிதாகும்," என்றார். 

1 2 ... 52 53 54 55 56 57 58 ... 170 171

AD's



More News