25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jan 31, 2026

செர்பியாவின் ஜோகோ விச், ஸ்பெயினின் அல்காரஸ்  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்மெல்போர்னில்,  நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, 'நம்பர்-3' வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 28, மோதினர்.முதலிரண்டு செட் களை அல்காரஸ் 6-4, 7-6 எனக் கைப்பற்றி னார். பின் எழுச்சி கண்ட ஸ்வெரேவ், 'டை பிரேக் கர்' வரை சென்ற அடுத்த இரு செட்களை 7-6, 7-6 என தன்வசப்படுத்தி. 5வது செட்டில் அல்காரஸ் 7-5 என போராடி வென்றார்.தசை பிடிப்பு காயத்தை பொருட்படுத்தால்  ஐந்து மணி நேரம், 27 நிமிடம் நீடித்த போட்டியில், விளையாடிய அல்காரஸ் 6-4, 7-6, 6-7, 6-7, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக  பைனலுக்குள் நுழைந்தார். 

Jan 30, 2026

குகேஷ் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 10வது சுற்றில் வெற்றி பெற்றார்.

டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நெதர்லாந்தில்,. மாஸ்டர்ஸ் பிரிவில்இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம்,அர்ஜூன் எரிகைசி, நெதர் லாந்தின் அனிஷ்கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.இந்தியாவின் குகேஷ், துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்மஸ்  பத்தாவது சுற்றில், விளையாடிய 'நடப்பு உலக சாம் பியன்' குகேஷ் 50வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் குகேஷ், வின்சன்ட் கீமர் (ஜெர்மனி), விளாடிமிர்,  பெடோசீவ் (சுலோவேனியா) தலா 5 புள்ளிகளுடன் 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர் .

Jan 30, 2026

'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் வேலவன் செந்தில்குமார் வெற்றி .

 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர்,அமெரிக்காவின்  வாஷிங்டனில் ,ஆண் களுக்கானமுதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், இங்கிலாந்தின் டாம்வால்ஷ் மோதினர். வேலவன் 3-1 என வெற்றி பெற்றார்.இந்தியாவின் வீர் சோட் ரானி 3-2 என ஹங்கேரியின் பாலாஸ் பர்காஸை மற்றொரு முதல் சுற்றில் வீழ்த்தினார்.

Jan 30, 2026

ஆஸ்திரேலியா ஓபன்  பைனலில் சபலென்கா-ரிபாகினா முன்னேற்றம்.

பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினாஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறினர்.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சப லென்கா, 12வது இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர்.ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 4 வது முறையாக (2023-26) பைனலுக்கு  இத்தொடரில் முன்னேறினார்.

Jan 29, 2026

ஜெசிகா, ரிபாகினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ,போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 5-7, 1-6என்றசெட்கணக்கில்தோல்வியடைந்தார்.காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 7-6 என, சகவீராங்கனைஅமண்டா அனிசிமோவாவை வென்றார்.. இன்று நடக்கும் அரை யிறுதியில் சபலென்கா (பெலாரஸ்) - ஸ்வி டோலினா (உக்ரைன்), ரிபாகினா (கஜகஸ்தான்) -பெகுலா (அமெரிக்கா) மோதுகின்றனர். 

Jan 29, 2026

இந்திய அணி நான்காவது 'டி-20' கிரிக்கெட் போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, பங்கேற்று, முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, தொடரை 3-0 என கைப்பற்றியது. நேற்று விசாகப்பட்டினம் (ஆந்திரா), . ராஜசேகர ரெட்டி மைதானத்தில்நான்காவது போட்டி நடந்தது.நியூசிலாந்து அணி 20 ஓவரில் 215/7 ரன் எடுத்தது. நியூசிலாந்து இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது இந்திய அணி 18.4 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. 

Jan 29, 2026

இந்தோனேஷிய பாட்மின்டனில். , வேகம் 380.1 கி.மீ., ஆக பதிவாகி,  அதிவேகமாக பந்தை 'ஸ்மாஷ்' செய்த வீராங்கனை வரிசையில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட் மின்டன் தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ,உலகத் தரவரிசையில் 'நம் பர்-13' ஆக உள்ள இந்தியவீராங்கனை, ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சீனா வின் யு பெய் செனிடம் தோல்விடையந்தார். அப்போது யு பெய் சென் அடித்த பந்தை, சிந்து திருப்பி அனுப்பினார் ('ஸ்மாஷ்' இதன் வேகம் 380.1 கி.மீ., ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷிய பாட்மின்டனில் அதிவேகமாக பந்தை 'ஸ்மாஷ்' செய்த வீராங்கனை வரிசையில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.

Jan 29, 2026

இந்தியாவின் பிரக்ஞானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 9வது சுற்றில் வெற்றி பெற்றார்.

நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நெதர்லாந்தில், இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம் பரம், அர்ஜுன்எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.  ஒன்பதாவது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞா னந்தா, அரவிந்த் சிதம்பரம் மோதினர். 'நடப்பு சாம்பியன்' பிரக்ஞானந்தா, 84வது நகர்த்தலில் - வெற்றி பெற்றார்.  தலா 4 புள்ளிகளுடன் 9 வது இடத்தை ,இந்தியாவின் அர்ஜுன், குகேஷ், பிரக்ஞானந்தா பகிர்ந்து கொண்டுள்ளனர். அரவிந்த் சிதம்பரம் (2.5 புள்ளி) 14வது இடத்தில் உள்ளார். 

Jan 29, 2026

இந்தியாவின் தருண், மிதுன்மஞ்சுநாத் தாய்லாந்து பாட்மின்டன் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் தாய்லாந்தின் பாங்காக்கில்,. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகத் தரவரிசையில் 61வது இடத்திலுள்ள இந்தியாவின் மிதுன்மஞ்சுநாத், 41வது இடத்திலுள்ள, இத்தொடரின் 'நம்பர் -8' வீரர் என அந்தஸ்து பெற்ற டென்மார்க் கின் மாக்னஸ் ஜோகன்னெசனை சந்தித்தார்.59 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில்  21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்கில் மிதுன் மஞ்சுநாத் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் ('நம்பர் -43'), தாய்லாந்தின் கன்டபனை ('நம்பர்-55') எதிர்கொண்டார். தருண் 22-20, 21-17 என்ற நேர் செட்டில்வெற்றி பெற்றார். 

Jan 28, 2026

விளையாட்டு போட்டிகள் 28 th  Jan 2026

'டாடா ஸ்டீல்' செஸ் தொடர் கோல்கட்டாவில் நடந்த பெண்களுக்கான ரேபிட் பிரிவில் இந்தியாவின் பிரிஸ்டி முகர்ஜீ (2022, 2024, 2026) மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 20,000 பரிசு, கோப்பை கிடைத்தது.ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் , இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வசந்தி, ருமேனியாவின் பிரியானா ஜோடியை இந்தியாவின் ருடுஜா, சீனாவின் ஜெங் ஜோடி 6-4, 6-3 என வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. ஐதராபாத்தில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொட ரில்  இந்தியாவின் விஷ்ணு வர்தன், மணிஷ் சுரேஷ் குமார் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 

1 2 ... 57 58 59 60 61 62 63 ... 170 171

AD's



More News