விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், (10.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ரூ.5.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.60 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகளைநிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளை துரிதமாக முடித்து விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இந்நேர்வில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றியகுழுத் தலைவர் திரு.பொன்னுத்தம்பி, திருச்சுழி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சுற்றுலா தினம்- 2025 முன்னிட்டு இவ்வாண்டிற்கான கருப்பொருளான "சுற்றுலாவும் நிலையான மாற்றமும்" (Tourism And Sustaintable Transformation ) என்ற கருத்துருவின் அடிப்படையில் கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற கட்டுரை, குறும்படம்(Short flim), வினாடிவினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார். சுற்றுலாத்துறையின் சார்பாக, விருதுநகர் சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர் மற்றும் வி.வி.வி. கல்லூரி மற்றும் விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமாரா நாடார் கல்லூரி, கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில் மற்றும் எஸ்.எப்.ஆர்.கல்லூரி சிவகாசி வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்து கல்லூரி மாணவ/மாணவர்களுக்கு “சுற்றுலாவும் நிலையான மாற்றமும்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் 26.09.2025 அன்று சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி மற்றும் சாத்தூர் கல்லூரியில் கட்டுரைப்போட்டி, குறும்படப் போட்டி மற்றும் வினாடி-வினாப் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்வின் தொடர்ச்சியாக 27.09.2025 அன்று முக்கிய சுற்றுலாத்தளமானஸ்ரீ நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூரில் சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சுற்றுலா அலுவலர் திரு.ப.முனியப்பன்(மு.கூ.பொ), அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை வெடி விபத்தில்லா தீபாவளியாகக் கொண்டாடும் நோக்கிலும்,வெடிபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் விருதுநகர் மாவட்ட நிருவாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடிபொருள்கள் சில்லறை விற்பனை நிலைய உரிமதாரர்கள் அனைவரும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி செயல்பட்டு, மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், கடைகளின் முன்புறம் பாதுகாப்பு தூரத்திற்குள் ஆபத்தான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வெடிபொருள்களை வெடித்துக் காட்டக்கூடாது எனவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கடைகளின் முன்புறம் தற்காலிக கட்டுமானங்களை அமைக்கக்கூடாது எனவும்,மாவட்ட நிருவாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு வெடிபொருள்கள் இருப்பு வைத்திருத்தல், உரிய தீயணைப்பு சாதனங்கள் இல்லாதிருத்தல், தடை செய்யப்பட்ட வெடிபொருள்களை விற்பனை செய்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் விதிமீறல்கள் ஆய்வின்போது கண்டறியப்படின், தொடர்புடைய வெடிபொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தடையின்மைச் சான்று மற்றும் உரிமம் நிரந்தரமாக இரத்து செய்யப்படுவதுடன், உரிமதாரர் மீதும் அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த 1995 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் விருதுநகர், சிவகங்கை, செங்கல்கபட்டு, மயிலாடுதுறை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 12.10.2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற இருக்கிறது.இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில்; 1,30,437 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 1,137 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள். கோயில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.மேலும் ரயில், பஸ்நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் „நடமாடும் முகாம்… மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான ஜூரம், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும். போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.இம்முகாமில் 4580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடங்குவார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0 - 5 வயது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில்வே ஸ்டேசன், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை 12.10.2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்கி, குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து ஊனம் இல்லாத சமுதாயத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சியில் (09.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஏற்று கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான முதல் தவணைத்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். கலைஞர் கனவு இல்லம் திட்டமானது 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2025 க்குள் தமிழகத்தில் 1 இலட்சம் குடிசையில்லா வீடுகள் ஏற்படுத்துவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு வீட்டுவசதி அலகிற்கும் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் நான்கு தவணைத் தொகைகளாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-2025 ஆம் ஆண்டில் 11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 357 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 243 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 277 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 124 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 321 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 214 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 190 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 164 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 48 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 96 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 200 வீடுகளும் என மொத்தம் 2234 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சியில் வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஏற்று கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான முதல் தவணைத்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.இந்நேர்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், விருதுநகர் மாவட்ட ம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (09.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களின் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடத்தப்பட்டு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டன.அதன் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைக் குழுவினரின் நாடகம் மற்றும் பாடல் வழியே, பெண் குழந்தை திருமணம் குறித்தும், இளம் வயது கர்ப்பம் குறித்தும், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச எண்கள் (1098 (ம) 181 ) ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டன. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் கி.திலகம், மாவட்ட சமூக நல அலுவலக களப்பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மையம் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.10.2025) தமிழ்நாடு வனத்துறை மூலம் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வன உயிரின வார விழா- 2025 நிறைவு நிகழ்ச்சி துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை உள்ள நாட்கள் வன உயிரின வாரவிழாவாக வனத்துறையினரால் அனுசரிக்கப்படுகிறது. வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைவதே இதன் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்ட வனத்துறையில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்(திருவில்லிபுத்தூர் கோட்டம்), சமூக காடுகள் கோட்டம் விருதுநகர், வனவியல் விரிவாக்க கோட்டம் விருதுநகர் (இ) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் RF/RL பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் வனஉயிரினப் பாதுகாப்பு பிரதான பணியாக உள்ளது. சமூக காடுகள் கோட்டம் மற்றும் வனவியல் விரிவாக்க கோட்டம் ஆகியவை சாலைகள், அரசு நிலங்கள், தனியார் நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தலை பிரதானமாக கொண்டு செயல்படுகிறது.திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பல அரிய வகை வரையாடு, மான், வனஉயிரினங்கள் உள்ளன. சிறுத்தை, புலிகள், காட்டுமாடு, சாம்பல்நிற அணில்கள், கரடி, யானைகள், மிளா போன்ற வனஉயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தவும் வனத்துறை பல்வேறு பணிகளை செய்து வருகிறது.வன உயிரின வார விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநாடுகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பள்ளி கல்லூரிகளில் வனவிலங்குகள் குறித்த கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி வினா உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வன உயிரின் வார விழாவின் தொடக்கமாக அக்டோபர் 2 ஆம் தேதி அய்யனார் கோவில் மலைவாழ் குடியிருப்பு மக்களிடம் வனங்கள்பற்றியவிழிப்புணர்வுதுணைஇயக்குநர்(திருவில்லிபுத்தூர்மேகமலைபுலிகள்காப்பகம்)அவர்களால்எடுத்துரைக்கப்பட்டது.அதனையடுத்து அக்டோபர் 3 ஆம் தேதி கிழவன்கோவில் கிராமத்தில் தொடங்கி கோவிலார் வரையில் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களால் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது. பின்னர் அக்டோபர் 5 ஆம் தேதி செண்பகத்தோப்பில் உள்ள புத்தாக்க பயிற்சி மையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அணில்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் தேதி சிவகாசியில் உள்ள அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் அக்கல்லூரி மாணவர்களுக்கு வனஉயிரினங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தொடர்ச்சியாக சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் உயிரனையாக்கம் (Bio-Mimicry) கருத்தரங்கு நடத்தப்பட்டது. பின்னர் அக்டோபர் 7 ஆம் தேதி பாப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோபாலபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜீ சின்மயா வித்யாலயா பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.அதன்படி, வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், உதவி வன பாதுகாவலர், வன சர அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், குரண்டி ஊராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டம் செட்டிபட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் (08.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.மேலும், இம்முகாம்களை அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி, காரியாபட்டி வட்டம், குரண்டி ஊராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டம் செட்டிபட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டு, பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், (07.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்களின் முன்னிலையில், அருப்புக்கோட்டை வட்டம் சிதம்பராபுரம்மற்றும் செட்டிக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள வாழை மரங்களை நேரில் சென்று வருவாய் மற்றும் பேரிடர்மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருப்புக்கோட்டைவட்டம், சிதம்பராபுரம் , சின்ன செட்டிக்குறிச்சி மற்றும் பெரிய செட்டிக்குறிச்சி கிராமங்களில் 05.10.2025 மாலை சுமார் 04.00 மணியளவில் பலத்தகாற்றுடன் மழை பெய்ததில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைமரங்களில், சுமார் 27.5 ஏக்கர் பரப்பளவு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனை, தற்பொழுது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் 27.5 ஏக்கர் பரப்பளவு சேதமடைந்துள்ள வாழை மர நிவாரணத்திற்கு அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுமேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதிகளில் பயிர்க் காப்பீடு இல்லாத காரணத்தினால் பயிர்க் காப்பீட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் தோட்டக்கலைத்துறை மூலம் எடுக்கப்படவுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக பலத்த காற்றினால் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இப்பகுதிகளில் கடந்த ஆண்டு சேதமடைந்த பகுதிகளை கண்காணித்து இம்முறை எவ்வித இடர்பாடுகள் ஏற்படாமலிருக்கவும், நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மேல் நடவடிக்கைகள்எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC, & DNT students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம். அதன்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட ( Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 இலட்சம் இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்: 15.10..2025 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நாள்:31.10..2025புதுப்பித்தல்: இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025--26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் ( Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதியது: இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும். மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் காணலாம்.கல்வி நிறுவனங்கள் மாணவ,மாணவியர்கள்விண்ணப்பித்துள்ளவிண்ணப்பங்களைதேசியகல்விஉதவித்தொகை இணையதளத்தில் பரிசீலித்து அடுத்த நிலையில் மாவட்டபிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்குஅனுப்புதல்வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் Login Credential சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை NSP (https://scholarships.gov.in) இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,, அவர்கள் தெரிவித்துள்ளார்.