25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 21, 2026

விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 முன்னேற்பாடுகள்.

விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 முன்னேற்பாடுகள்: தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S. அவர்கள் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் துறைப் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.பங்கேற்ற தேர்தல் பார்வையாளர்கள்:இக்கூட்டத்தில் பின்வரும் பார்வையாளர்கள் கலந்துகொண்டு தொகுதி வாரியான கண்காணிப்புப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்: தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்:  * திரு. உதயன் மிஷ்ரா, I A S. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் தொகுதிகள்).   * திரு. அனுப்குமார் யாதவ், I A S,(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகள்).   * திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S . (திருச்சுழி தொகுதி). தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்:   * திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் தொகுதிகள்).   * திரு. அனில்குமார், இ.வ.ப. (சாத்தூர் மற்றும் சிவகாசி தொகுதிகள்).   * திரு. நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகள்).   * திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (திருச்சுழி தொகுதி). ஒருங்கிணைந்த காவல் துறைப் பார்வையாளர்:  மாவட்டத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. அவர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள்.ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுதல், தேர்தல் பிரச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பின்வரும் அம்சங்கள் விவாதிக்கப்பட்டன:வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள்: வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) தயார் நிலை மற்றும் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் (FLC) குறித்து ஆய்வு செய்யப்பட்டது. செலவினக் கண்காணிப்பு: வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள், விளம்பரங்களுக்கான முன்-அனுமதி (MCMC) மற்றும் பறக்கும் படைகளின் செயல்பாடுகள் குறித்து செலவினப் பார்வையாளர்கள் விளக்கினர்.பாதுகாப்பு நடவடிக்கைகள்: பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்து காவல் துறைப் பார்வையாளர் ஆலோசனைகளை வழங்கினார்.சிறப்பு வசதிகள்: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு நடைமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மாவட்டத் தேர்தல் அலுவலரின் வேண்டுகோள்:நேர்மையான, அமைதியான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அந்தந்த தொகுதிக்குரிய தேர்தல் பார்வையாளர்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ROs), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (AROs) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Mar 21, 2026

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மூத்த வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள விருட்சம் மகளிர் முதியோர் இல்லத்தில் இன்று(20.03.2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த வாக்காளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார். சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த குடிமக்களாகிய உங்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தற்போது வாக்களிப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் மூத்த குடிமக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். மூத்த குடிமக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்த போது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை, பயன்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14,97,417 வாக்காளர்களில், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,018 வாக்காளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,304 வாக்காளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,019 வாக்காளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 809 வாக்காளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1,,089 வாக்காளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1432 வாக்காளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 1,134 வாக்காளர்களும் என மொத்தம் 7,805 மூத்த வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.அதன்படி, அனைத்து மூத்த வாக்காளர்களும் தங்களது தேர்தல் பங்கேற்பினைத் தொடர்வதன் மூலம் இந்திய ஜனநாயகத்தில் இளம் தலைமுறையினரின் நேர்மறையான பங்களிப்பிற்கு முன்மாதிரியாக திகழும் இந்த மூத்த வாக்காளர்களை பெருமைப்படுத்தும் விதமாக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மூத்த வாக்காளர்களுக்கு, ”என் வாக்கு, என் குரல்” ”என் வாக்கு, என் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையினை அணிவித்து கௌரவப்படுத்தினார்.தொடர்ந்து, 100 சதவீதம் வாக்கினை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தில் நிலையான நம்பிக்கை கொண்டு, நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதம், இனம், சாதி, சமூகம் மொழி அல்லது எந்த தூண்டுதலாலும் பாதிக்கப்படாமல் வாக்களிக்கவும் இதன் மூலம் உறுதியளிக்கிறோம் என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மூத்த வாக்காளர்கள் ஏற்றுக்  கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.திலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மூத்த வாக்காளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 21, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 23.04.2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்ற பின்னர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதற்கென, மனுப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Mar 21, 2026

சட்டமன்ற பொது தேர்தல், 2026 நடைபெறுவதையொட்டி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் வருகை.

எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள் எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும்  தேர்தல் பொது பார்வையாளர்களாக  இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும்,  செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களையும், ஒருங்கிணைந்த காவல் பார்வையாளராக இந்திய காவல் பணி அலுவலரையும்  நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது.அதன்படி, தேர்தல் பொதுப்பார்வையாளர்களாக 202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு.உதயன் மிஷ்ரா, I A S., அவர்களும் (9489985870), 206- விருதுநகர் மற்றும் 207- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.அனுப்குமார் யாதவ், I A S., அவர்களும்(9489985872), 208- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.சஞ்சீவ் ஶ்ரீவாஸ்தவா, I A S ., அவர்களும்(9489985873) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் செலவின பார்வையாளர்களாக 202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு.சுக்செயின் சிங்,இ.வ.ப., அவர்களும்(9489985874), 204- சாத்தூர் மற்றும் 205- சிவகாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.அனில்குமார்,இ.வ.ப., அவர்களும்(9489985875), 206- விருதுநகர் மற்றும் 207- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப., அவர்களும்(9488985876), 208- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.வாக்மரே ஜெய்,இ.வ.ப., அவர்களும்(9488985877) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் திரு.அகிலேஷ் குமார் சௌராசியா,இ.கா.ப., அவர்களை (9488985878) ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.ஆதலால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான தேர்தல் பணிகள் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், தொடர்புடைய சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களின் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வாயிலாகவோ, நேரிலோ தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Mar 19, 2026

விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் சட்டமன்றத் தேர்தல்- 2026 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக  அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி  வைத்தார். சட்டமன்றத் தேர்தல்- 2026 நடைபெறயுள்ளதை யொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி,  விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி  வைத்தார். இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,  வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கியும், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Mar 19, 2026

திருச்சுழியில் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்   (18.03.2026) சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு, மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.1. மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு செல்லக்கூடிய வழிகள் மற்றும் மாற்று வழிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.2. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் இருப்பின் அவற்றினை சரிசெய்யும் பொருட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து சரிசெய்யப்பட வேண்டும்.3. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.4. வாக்குச்சாவடி பகுதிகளில் கட்சி கொடிகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் இருப்பின் அவற்றினை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.5. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் போது மண்டல அலுவலர்கள் தகுந்த பயிற்சியினை அளித்திட வேண்டும்.6. வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.7. தேர்தல் நாளுக்கு முந்தைய தினம் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் எடுத்துச் செல்லப்படும் படிவங்கள் மற்றும் தேர்தல் நாளன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் எண்ணிக்கையினை விடுபடாமல் எடுத்துச் செல்லப்பட வேண்டும். 8. சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரமா என்பதை சரிபார்த்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.9. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.10. வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதேனும் ஏற்படின் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்குத்  தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Mar 19, 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் - பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகள் ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, பந்தல்குடியில் (18.03.2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த நான்கு முக்கியக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.அதன்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள் (Flying Squads) வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு குழுவிற்கு 7 நபர்கள் வீதம் மொத்தம் 441 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதேபோல், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 63 நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டு, அவற்றில் 441 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.மேலும், வீடியோ பதிவுகள் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோகண்காணிப்புக்குழுக்கள்(VideoSurveillanceTeams)அமைக்கப்பட்டு,இதில்மொத்தம்21நபர்கள்இடம்பெற்றுள்ளனர்.இக்குழுக்கள் பதிவு செய்யும் காட்சிகளை ஆய்வு செய்ய, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோ பார்வையிடல் குழுக்கள் (Video Viewing Teams) அமைக்கப்பட்டு, அதில் 14 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.அதன்படி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, பந்தல்குடியில் இன்று (18.03.2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கோ, நோயாளிகளுக்கோ அல்லது அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோருக்கோ தேவையற்ற சிரமங்கள் இருக்கக்கூடாது. அதே சமயம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நியாயமாகவும், தூய்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் கண்காணிப்புக் குழுக்களின் பங்கு மிக முக்கியமானது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Mar 18, 2026

வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (17.03.2026) சட்டமன்றத் தேர்தல்- 2026 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சட்டமன்றத் தேர்தல்- 2026 தமிழகத்தில் ஏப்ரல்-23 அன்று நடைபெறவுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல், இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில்,  பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வரை சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் தவறாமல் நேர்மையாகவும் நியாயமாகவும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்,  தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 18, 2026

தேர்தல் புகார்களை உடனுக்குடன் கையாளுதல் -பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கு அறிவுறுத்தல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை நிலைநாட்டவும், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், பறக்கும் படை (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கான (Static Surveillance Teams) cVIGIL செயலி  தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இப்பயிற்சியின் வகுப்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை எவ்விதத் தாமதமுமின்றி கையாள்வது குறித்து இணை இயக்குநர்/ மாவட்ட தகவலியல் அலுவலர் திரு.வெ.பிரபாகரன் அவர்கள் வழிகாட்டுதல்களை வழங்கினார்.அதன்படி, cVIGIL செயலி புகார்கள்:பறக்கும் படையினர் தங்களின் கள ஆய்வுகளை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் ESMS (Election Seizure Management System) என்ற மென்பொருளில் பதிவேற்றம் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.பொதுமக்களிடமிருந்து cVIGIL செயலி வழியாக வரும் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். புகார் பெறப்பட்ட 100 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, அதன் முடிவை செயலியில் பதிவேற்ற வேண்டும்.தேர்தல் கட்டுப்பாட்டு அறை (Control Room): மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பகிரப்படும் தகவல்கள் மற்றும் வாட்ஸ்அப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தொலைபேசி வாயிலாக வரும் புகார்கள்: 1950 போன்ற கட்டணமில்லா எண்கள் மற்றும் இதர தொலைபேசி வாயிலாகப் பெறப்படும் புகார்களின் உண்மைத்தன்மையை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும்.குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்கள்:1. நேரடி ஆய்வு: புகார் வந்தவுடன் ஜி.பி.எஸ் (GPS) பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் விரைந்து செயல்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்றடைய வேண்டும்.2. வீடியோ பதிவு: சோதனையின் போது நடைபெறும் நிகழ்வுகள், பறிமுதல் செய்யப்படும் பணம் அல்லது பொருட்கள் என அனைத்தையும் எவ்வித விடுபடலும் இன்றி வீடியோ பதிவு (Video Graphing) செய்ய வேண்டும்.3. ஆவணப் பராமரிப்பு: பறிமுதல் செய்யப்படும் பொருட்களுக்கு உரிய படிவங்களை வழங்கி, அவற்றைக் கருவூலத்தில் ஒப்படைக்கும் வரை சட்டப்படியான நடைமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும்.4. பொதுமக்களுடன் கனிவான அணுகுமுறை: வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கோ, நோயாளிகளுக்கோ அல்லது அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோருக்கோ தேவையற்ற சிரமங்கள் இருக்கக்கூடாது. அதே சமயம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நியாயமாகவும், தூய்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் கண்காணிப்புக் குழுக்களின் பங்கு மிக முக்கியமானது.தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள்  போன்றவற்றை விநியோகம் செய்வதைத் தடுப்பதில் இக்குழுக்களின் பங்கு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ளவும், அதே சமயம் சோதனையைத் துல்லியமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Mar 18, 2026

இராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மோட்டார் சைக்கிள் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்  மாவட்டம், இராஜபாளையத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்- 2026 முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணி  (17.03.2026) நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி,  இராஜபாளையத்தில், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து காந்தி சிலை, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு சாலை, மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள பத்மா மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், இரயில் நிலையம் பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் நிலையம் வழியாக மீண்டும்  வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வரை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட  இருசக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, நகராட்சித்துறை, கூட்டுறவுத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,  வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும்.  ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஆர்.அமர்நாத் அவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள், உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 140 141

AD's



More News