25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 27, 2026

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது .

Tதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, “கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள்–2026 (LEARN TO SWIM)” ஏப்ரல் 2026 முதல் ஜூன் 2026 வரையிலான விடுமுறைக் காலத்தில், மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சலை ஒரு அத்தியாவசிய வாழ்வியல் திறனாக உருவாக்கும் நோக்கில், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களிலும் 'நீந்தக் கற்றுக்கொள்' பயிற்சி வகுப்பை நடத்திடுவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் 5 தொகுதிகளாக நடத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளுக்கான முதல் தொகுதியானது 01.04.2026 முதல் 16.04.2026 வரையிலும், இரண்டாம் தொகுதி 17.04.2026 முதல் 02.05.2026 வரையிலும், மூன்றாம் தொகுதி 03.05.2026 முதல் 16.05.2026 வரையிலும், நான்காம் தொகுதியானது 17.05.2026 முதல் 31.05.2026 வரையிலும், ஐந்தாம் தொகுதியானது 02.06.2026 முதல் 14.06.2026 வரையிலும்  நடைபெற உள்ளது.   நீச்சல் கற்றல் பயிற்சிக்கான காலை நேர வகுப்புகள் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலும், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை நேர வகுப்புகள் மதியம் 3.30 மணி முதல் 4.30 வரையிலும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.1770/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும்  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் மேற்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கலாகிறது.மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் நீச்சல் பயிற்றுநர் திரு. சுப்ரமணியன் அவர்களை 9751393412 என்ற அலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S .,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 26, 2026

கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள (Randomization) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சியர் , அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் (25.03.2026), மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள (Randomization) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்தத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சீரற்ற (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.அதன்படி, மாவட்டத்தில் உள்ள: * 202-இராஜபாளையம்: 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு 322 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 349 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். *203-திருவில்லிபுத்தூர்: 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 400 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். * 204-சாத்தூர்: 291 வாக்குச்சாவடி மையங்களுக்கு 349 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 378 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். * 205-சிவகாசி: 288 வாக்குச்சாவடி மையங்களுக்கு 345 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 374 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். *206-விருதுநகர்: 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு 337 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 365 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.  *207-அருப்புக்கோட்டை: 270 வாக்குச்சாவடி மையங்களுக்கு 324 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 351 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். *208-திருச்சுழி: 292 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 2,596 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பாதுகாப்பறையில் இருந்து இன்று (25.03.2026) அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு, தகுந்த காவல்துறை பாதுகாப்புடன் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.அதனடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பின்வரும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறைகளில் வைக்கப்படவுள்ளன: *இராஜபாளையம்: இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். * திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம். * சாத்தூர்: சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம். * சிவகாசி: சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. * விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி. * அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம். * திருச்சுழி: காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.இந்த இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு மற்றும் 24 மணி நேர சிசிடிவி (CCTV) கண்காணிப்பில் வைக்கப்படும். பின்னர், தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் இந்த இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா. ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு. சீனிவாசன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 26, 2026

சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026-னை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை  (25.03.2026) சிவகாசி சார் ஆட்சியர் திரு. முகமது இஃர்பான்,I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார். சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி, 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கைகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களிடையேயும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரணிகள், கையெழுத்து இயக்கம் மற்றும் ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியைச் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, "வாக்களிப்பது நமது உரிமை", "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்" மற்றும் "ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. செந்தில், மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கப் (உரிமைத் திட்டம்) பணியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Mar 26, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இராஜபாளையம், விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில்,  (25.032026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் தேர்தல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து நடத்தி  வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், இராஜபாளையத்தில் உள்ள  பஞ்சு ஆலைகள், விருதுநகரில் உள்ள பேப்பர் கேப்ஸ் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

Mar 25, 2026

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU) மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கணினி  அறையில் (24.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர்) மற்றும் திரு.அனுப்குமார் யாதவ்,I A S., அவர்கள்(206-விருதுநகர் மற்றும் 207-அருப்புக்கோட்டை) மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் (First Randomization) பணிகள் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு 322 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 349 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369  வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 400 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும்,204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள  291 வாக்குச்சாவடி மையங்களுக்கு  349 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  378 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள  288 வாக்குச்சாவடி மையங்களுக்கு  345 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  374 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும்,          206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள  281 வாக்குச்சாவடி மையங்களுக்கு  337 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  365 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள  270 வாக்குச்சாவடி மையங்களுக்கு  324 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும்  351 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள  292 வாக்குச்சாவடி மையங்களுக்கு  350 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்களும், என மொத்தம் மாவட்டத்தில்  உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள்(BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள்(CU)  மற்றும் 2,596 விவிபேட்(VVPAT) எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 24, 2026

சட்டமன்ற பொது  தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்படும் .

விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கணினி  அறையில் (23.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S ., அவர்கள்(202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர்) மற்றும் திரு.அனுப்குமார் யாதவ்,I A S., அவர்கள்(206-விருதுநகர் மற்றும் 207-அருப்புக்கோட்டை) ஆகியோர் முன்னிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை-1, நிலை -2, நிலை -3 அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில்(Randomization) சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் -23 ந்தேதி நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2001 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடக்கூடிய வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-1, நிலை -2, நிலை -3 என மொத்தம் 9604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில் 1292 அலுவலர்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களில் 1480 அலுவலர்களும், சாத்தூர்  சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களில் 1396 அலுவலர்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் 1392 அலுவலர்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 1348 அலுவலர்களும், அருப்புக்கோட்டை  சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் 1296 அலுவலர்களும், திருச்சுழி  சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்களில் 1400 அலுவலர்களும் என மொத்தம் 7  சட்டமன்ற தொகுதிளில்  2001 வாக்குச்சாவடி மையங்களில் 9604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 24, 2026

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது அமைக்கப்பட்டுள்ளது.

2026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம்,  207-அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் சட்டமன்ற தேர்தல்  தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பெற்று உடன் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மேற்படி தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 04566-222700-ஐ தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

Mar 24, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இல் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இடங்களில் உதவ தன்னார்வலர்கள், சாய்வுதளம், சக்கர நாற்காலிகள், காத்திருப்புப் பகுதி, கழிப்பறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையம், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இல் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கி உள்ளது.இந்த வசதிகளை பெறுவதற்காக படிவம் 12டி என்ற படிவத்தில் தங்களது விருப்பத்தை மேற்காணும் வாக்காளர்கள் தெரிவிக்க வேண்டும். மேற்படி படிவத்தை தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மேற்படி வாக்காளர்களின் வீடுகளுக்கே 20.03.2026 முதல் 03.04.2026 வரை நேரில் வந்து வழங்குவார்கள். வாக்குப் பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து 03.04.2026-க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.மேற்கண்டவாறு வீட்டிலேயே இருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் வீட்டிற்கு இரண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள், ஒரு வீடியோகிராபர் நுண்பார்வையாளர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கிய வாக்குப்பதிவு குழுவானது சென்று, வாக்காளரை தபால் வாக்குச்சீட்டில் வாக்களிக்கச் செய்யும். மேற்படி வாக்குப்பதிவின் இரகசியம் காக்கப்படும்.மேற்படி வாக்குப்பதிவு குழு வருகை தரும் தேதி மற்றும் தோராயமான நேரம் குறித்து படிவம் 12டி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் குறுஞ்செய்தி தபால் அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக வாக்காளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படும்.முதல் வருகையின் போது கொடுக்கப்பட்ட முகவரியில் வாக்காளர் இல்லையெனில், வாக்குச் சேகரிக்கும் குழுவானது அவர்களின் இரண்டாவது வருகையின் தேதி மற்றும் நேரத்தை அறிவிப்பார்கள்.இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில், மேற்கொண்டு மறுவருகையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது. தபால் ஓட்டு மூலம் வீட்டில் வாக்களிக்கும் வசதியை விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யும் வாக்காளர்கள், வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச்சாவடியில், வாக்களிக்க இயலாது.மேலும், வாக்குப்பதிவு குழுவின் இரண்டாவது வருகையின் போதும் வீட்டில் இருக்க தவறிய வாக்காளர்களுக்குத் தபால் வாக்குச் சீட்டு (Postal Ballot) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) ஆகிய இரண்டிலும் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதை அறியவும். மேலும் மேற்படி வசதியைப் பெறுவதில் தகவல் ஏதேனும் தேவைப்படின் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 2166 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 24, 2026

சட்டமன்றத் தேர்தல் 2026: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.

விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி, நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் ஆகியோரை நியமித்து ஆணையிட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் விவரம்:ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு: இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்: பொதுப் பார்வையாளராக திரு. உதயன் மிஷ்ரா, I A S.,(9489985870) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (9489985874) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.சாத்தூர் மற்றும் சிவகாசி: இப்பகுதிகளுக்கு பொதுப் பார்வையாளராக திரு. அரவிந்த் குமார், I A S ., (9489985871) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. அனில்குமார், இ.வ.ப. (9489985875) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை: பொதுப் பார்வையாளராக திரு. அனுப்குமார் யாதவ், I A S .,. (9489985872) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (9489985876) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.திருச்சுழி: இத்தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S ., (9489985873) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (9489985877) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி, நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் ஆகியோரை நியமித்து ஆணையிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்: பொதுப் பார்வையாளராக திரு. உதயன் மிஷ்ரா, இ.ஆ.ப. (9489985870) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (9489985874) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.சாத்தூர் மற்றும் சிவகாசி: இப்பகுதிகளுக்கு பொதுப் பார்வையாளராக திரு. அரவிந்த் குமார், இ.ஆ.ப. (9489985871) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. அனில்குமார், இ.வ.ப. (9489985875) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர். விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை: பொதுப் பார்வையாளராக திரு. அனுப்குமார் யாதவ், இ.ஆ.ப. (9489985872) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (9489985876) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.திருச்சுழி: இத்தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, இ.ஆ.ப. (9489985873) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (9489985877) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.காவல் பார்வையாளர் மற்றும் புகார் அளிக்கும் முறை: மாவட்டம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (94899 85878) நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல் பணிகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் வழியாகவோ அல்லது காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை பார்வையாளர்களின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ தெரிவிக்கலாம். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.  மாவட்டம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (94899 85878) நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல் பணிகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் வழியாகவோ அல்லது காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை பார்வையாளர்களின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ தெரிவிக்கலாம். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S . அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 23, 2026

சட்டமன்ற பொது தேர்தல், 2026 நடைபெறுவதையொட்டி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் வருகை.

எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள்எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றதொகுதிகளுக்கும் தேர்தல் பொது பார்வையாளர்களாக இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களையும்,செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களையும், ஒருங்கிணைந்த காவல்பார்வையாளராக இந்திய காவல் பணி அலுவலரையும் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது.மேலும் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (தொடர்பு எண்:94899 85878) அவர்களை ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.ஆதலால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்,விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான தேர்தல் பணிகள் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், தொடர்புடைய சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களின்மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வாயிலாகவும், முகாம் அலுவலகத்தில் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை நேரிலும் தெரிவிக்கலாம்.மேலும் தேர்தல் தொடர்பான தவறான நடவடிக்கைககள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் நேர்வில், புகார் அளித்தவரின் பெயர் மற்றும் இதர விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 31 32 33 34 35 36 37 ... 140 141

AD's



More News