விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி, சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (17.03.2026)சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு, மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கலையரங்க உரிமையாளர்கள், உணவகம் தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணம் கடன் கொடுப்பவர்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுடனான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தலைமையில் (16.03.2026) நடைபெற்றது.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி 23.04.2026 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அச்சக உரிமையாளர்கள்மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 127 ஏன் கீழ் தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தேர்தல் சமயங்களில் அடிக்கப்படும் அனைத்து போஸ்டர் துண்டு பிரசுரம், பேனர் போன்றவை எவையாயினும் அது எந்த அச்சகத்தால் அடிக்கப்பட்டது என்ற விபரம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் நகல் ஒன்றுடன் ஒரு உறுதி மொழி படிவத்துடன் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை அனுப்பி வைத்திட வேண்டும்.அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் ஆகியன நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் அதுவும் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பிரசுரமாகவே கருதப்படும்.அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டு பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். மேற்படி எண்ணிக்கையினை கூட்டியோ அல்லது குறைத்தோ காட்டக் கூடாதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127 மீறி செயல்படும் எந்த ஒரு அச்சு உரிமையாளர் மீதும் ஆறு மாதம் மற்றும் இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் அச்சக உரிமையும் ரத்து செய்யப்படும்.திருமண மண்டபங்கள்தேர்தல் காலங்களில் முன்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசியல் சார்பானவை மற்றும் சார்பற்றவை என பிரித்துக்கொள்ள வேண்டும். அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் எனில் காவல்துறை மற்றும் பிற அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.நிகழ்ச்சி நடத்துவதற்கு பெறப்படும் உண்மையான கட்டண தொகை தெரிவிக்கப்பட வேண்டும். கூட்டியோ அல்லது குறைத்தோ தெரிவிக்க கூடாது.அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கும். காவல்துறையினருக்கும் தெரிவித்திடல் வேண்டும். தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக விநியோக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறான இனங்கள் எதுவும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட வேண்டும்.திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்றவை தயாரிக்க அனுமதிக்க கூடாது. திருமண மண்டபங்களை வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசு பொருட்களை சேரித்து வைக்கும் குடோனாக பயன்படுத்திட அனுமதி இல்லை.தங்கும் விடுதிகள்தங்கும் விடுதிகளில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ பதுக்கும் விதத்தில் செயல்படுவோரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்திடல் வேண்டும்.மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர்எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கிடுவதற்கு முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா என அறிந்து கொள்ள வேண்டும்.வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுத்திடக் கூடாது. வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தருவதோ அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவதோ கூடாது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைளும் வெளிப்படை தன்மையுடனும் உரிய விதிமுறைகளின் படியும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இனங்களும் அதற்குரிய பதிவேட்டில் சரியாக பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம், தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம்/தொழில் செய்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், வங்கி அனைத்து திருமண மண்டபங்கள், அச்சக, தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகுதொழில் புரிவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (16.03.2026) சட்டமன்றத் தேர்தல்-2026 தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் செலவுகளை கண்காணிப்பது தொடர்பான அனைத்து வங்கியாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தேர்தல் வேட்பாளர்களுக்கு வங்கி கணக்கு திறப்பதற்கும் காசோலை புத்தகங்கள் வழங்குவதற்கும் சுமூகமான நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரூ.10 இலட்சத்திற்கு மேல் சந்தேகத்திற்குரிய வங்கி பணப்பறிமாற்றம் நடைபெற்றால் தகவல் தெரிவிக்கும்படியும், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் பணப்பரிமாற்றம் செய்யும்படியும், பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களில் உள்ள பணியாளர்களுக்கு அவர்களுடைய அமைப்புகள் / நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை கண்டிப்பாக எடுத்துச் செல்லும்படியும், வேட்பாளர் வங்கி கணக்கில் நடைபெறும் அனைத்து பணப்பறிமாற்றத்தினை கண்காணிக்கும்படியும், தேர்தல் பணிக்காக பணப்பறிவர்த்தனைகளை கண்காணிக்க போதுமான அலுவலர்களை நியமிக்கவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பணப்பறிமாற்றம் நடைபெற்றால் உடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்(16.03.2026) இந்திய தேர்தல் ஆணையத்தால், சட்டமன்றத்தேர்தல்-2026 க்கான, அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன,த.கா.ப, அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S ., அவர்கள் தலைமையில் (16.03.2026) செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் 30.03.2026. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026. வேட்பு மனுக்கள் பரிசீலனை நாள் 07.04.2026. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026. வாக்குப் பதிவு நாள் 23.04.2026. வாக்குகளை எண்ணும் நாள் 04.05.2026. தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் நாள் 06.05.2026 ஆகும்.மேற்படி, தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அறிவிப்பு வெளியான நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, எதிர்வரும் தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தேர்தல் நடத்தை விதிகளின்படி, மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சிப் பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக்கூடாது. கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும் நேர்வில், அவ்விளம்பரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விளம்பரம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை உபயோகிக்கவும் முடியும்.தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்குமாறும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடைசெய்து ஆணையிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,97,417 உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,28,539, பெண் வாக்காளர்கள் 7,68,632, இதர வாக்காளர்கள் 246 ஆக மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்.அதில், 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1,03,236 ஆண்களும், 1,08,951 பெண்களும், 33 இதர பிரிவினரும் என மொத்தம் 2,12,220 வாக்காளர்களும், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,08,109 ஆண்களும், 1,14,218 பெண்களும், 40 இதர பிரிவினரும் என மொத்தம் 2,22,367 வாக்காளர்களும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,10,693 ஆண்களும், 1,17,207 பெண்களும், 63 இதர பிரிவினரும் என மொத்தம் 2,27,963 வாக்காளர்களும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 1,09,420 ஆண்களும், 1,16,013 பெண்களும், 28 இதர பிரிவினரும் என மொத்தம் 2,25,461 வாக்காளர்களும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 96,436 ஆண்களும், 1,02,141 பெண்களும், 39 இதர பிரிவினரும் என மொத்தம் 1,98,616 வாக்காளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,00,000 ஆண்களும், 1,06,468 பெண்களும், 29 இதர பிரிவினரும் என மொத்தம் 2,06,497 வாக்காளர்களும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,00,645 ஆண்களும், 1,036,34 பெண்களும், 14 இதர பிரிவினரும் என மொத்தம் 2,04,293 வாக்காளர்களும், என ஆக மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 7,28,539 ஆண்களும், 7,68,632 பெண்களும், 246 இதர பிரிவினரும் என ஆக மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 14,97,417 வாக்காளர்களில், 45 வாக்காளர்கள் 100 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 12,336 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும், 246 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களாகவும், 7,805 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 3,367 வாக்காளர்கள் Service Voters-ஆகவும் உள்ளனர். மேலும், 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்தம் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் 63 பறக்கும் படை குழுக்களும், 63 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.இத்தேர்தல் பணியில் 9.600 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள C-Vigil App செயலியிலும் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை deo.virudhunagar26@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 1800 425 2166, 04562-294067, 04562-294068, 04562-294069, 04562-294070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் 24 மணி நேரமும் இயங்கி வரும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்- 2026-க்கான அறிவிப்பை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S.,அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கபட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் சுவர் விளம்பரம் வரைதல், சுவரொட்டிகள், காகிதங்கள் ஒட்டுதல் அல்லது கட் அவுட்கள் கட்டுதல், பேனர்கள், தட்டிகள் வைத்தல் எதையும் செய்யக் கூடாது.தனியார் இடங்களில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் தனியார் சுவர்களில் உரிமையாளர்களின் அனுமதியுடன் கூட சுவர் விளம்பரங்கள் செய்யக் கூடாது. கிராமப் புறங்களில் தனியார் சுவர்களில் உரிமையாளர்களின் அனுமதியையும், உரிய அரசு அலுவலரின் முன் அனுமதியையும் பெற்ற பின்னரே சுவர் விளம்பரம் செய்திடலாம். இத்தகைய விளம்பரங்கள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.அரசுக்கு சொந்தமான அரங்குகள்/கூட்ட அரங்குகள் உள்ளாட்சி அதிகாரத்திற்குட்பட்ட இடங்கள், கூட்டுறவுத் துறை இடங்களில் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. கல்வித்துறை நிறுவனங்கள் / மைதானங்கள் நடவடிக்கைகள் ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை.உரிய அனுமதி பெறாமல் வணிக நோக்கிலான வாகனங்களில் கொடிகள், ஸ்டிக்கர்கள் ஒட்டி விளம்பரம் செய்யக் கூடாது. வாகனத்தின் வெளிப்புற அமைப்பை மாற்றுதல் மற்றும் ஒலி பெருக்கி பொருத்துதல் ஆகிய செயல்கள் மோட்டார் வாகன சட்டத்தின் சரத்துகள் படியும், உள்ளுர் சட்டங்கள் / விதிகளின்படியும் தான் இருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு உரிய அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னரே "வீடியோ ரதம்" போன்ற மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும்.பிரச்சார கூட்டங்கள் / ஊர்வலங்கள் / தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெற கோரும் அரசியல் கட்சிகள் / அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், தங்களது மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidha.eci.gov.in/login/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் தாக்கல் செய்திட வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வது கூடாது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரச்சாரங்கள், கூட்டங்கள் நடத்த வேண்டும். தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் இடம் நேரம் குறித்து உரிய முன் அனுமதியும் பெறப்பட வேண்டும்.பொது மக்கள் தேர்தல் குறித்து புகார் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா எண் 1800 425 2166 மற்றும் 04562 -294067, 04562 -294068, 04562-294069, 04562 -294070 ஆகிய தொலைப்பேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார்களை தெரிவிக்க, cVIGIL என்ற பிரத்யேக புதிய செயலியை அறிமுகப்படுத்தி பயன்பாட்டில் உள்ளது. இச்செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் புகார்களை பதிவு செய்யலாம். தேர்தல் தொடர்பாக தெரிவிக்கும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எனவே, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து நடத்தை விதிகளை பின்பற்றி எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நேர்மையான, அமைதியான, முற்றிலும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (15.03.2026) திறந்து வைத்து பார்வையிட்டார்.விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பிரத்தியேகமாக 24 X 7 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதற்கான கட்டணமில்லா எண்: 1800 425 2166 மற்றும் தொலைபேசி எண்: 04562 -294067, 04562 -294068, 04562-294069, 04562 -294070 ஆகும்.எனவே, பொதுமக்கள் விருதுநகர் மாவட்டத்தில் தேர்த்ல் நடத்தை விதிமீறல்கள்(வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குதல், பணம் பதுக்கி வைத்தல் போன்ற விதிமீறல்கள்) ஏதுமிருப்பின் மேற்படி கட்டணமில்லா எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.மேலும், தகவல் தெரிவிக்கும் நபர் பற்றிய விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S ., உட்பட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை (Model Code of Conduct) முறையாக அமல்படுத்தவும், பணப் புழக்கம் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கவும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளன.மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த நான்கு முக்கியக் குழுக்கள் பணியமர்த்தப்பட உள்ளன.அதன்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள் (Flying Squads) வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு குழுவிற்கு 7 நபர்கள் வீதம் மொத்தம் 441 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.அதேபோல், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 63 நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டு, அவற்றில் 441 நபர்கள் பணியாற்ற உள்ளனர்.மேலும், வீடியோ பதிவுகள் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் (Video Surveillance Teams) அமைக்கப்படும். இதில் மொத்தம் 21 நபர்கள் இடம்பெறுவர்.இக்குழுக்கள் பதிவு செய்யும் காட்சிகளை ஆய்வு செய்ய, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோ பார்வையிடல் குழுக்கள் (Video Viewing Teams) அமைக்கப்பட்டு, அதில் 14 நபர்கள் பணியாற்றுவார்கள்.மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ₹50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.மேலும், விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் (15.03.2026) இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் 72 மணி நேரத்திற்குள் அமுல்படுத்தப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், அரசு வளாகம், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும். பொது வளாகம் / கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலகங்கள், மின்கம்பங்கள் உள்ளாட்சிக்குட்பட்ட கட்டிடங்கள் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும். தனியார் வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க /அகற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, அனைத்து அரசு வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் செலவில் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.பொது வளாகம் / கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலகங்கள், மின் கம்பங்கள், உள்ளாட்சிகளுக்குட்பட்ட கட்டிடங்கள் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையினரால் அழிக்க / அகற்றப்பட வேண்டும். தனியார் வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.அனைத்து அரசு அலுவலங்களிலும் கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மூடி மறைத்தல் / அகற்றுதல் வேண்டும். சம்பந்தப்பட்ட சட்மன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறையினர், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்காணும் அறிவுரைகளின்படி, தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையத்தின் உரிய காலக்கெடுவிற்குள் பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S ., உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு கிராமத்தில் (15.03.2026), எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S ., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி, வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று நடைபெற்ற இப்பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை வழங்கிப் பேசினார். இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்."வாக்களிப்பது நமது உரிமை", "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்" மற்றும் "ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியில், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், "வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களித்துத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். நேர்மையான, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (14.03.2026) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் தலைமையில், 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.96 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்களையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.2.25 இலட்சம் திருமண உதவித்தொகைகளையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று 37 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,08,000/- வீதம் மொத்தம் ரூ.39.96 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயமும் மற்றும் மொத்தம் ரூ.2.25 இலட்சம் திருமண உதவித்தொகைகளையும் என ஆக மொத்தம் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.21 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2025-2026 ஆம் நிதி ஆண்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 360 நபர்களுக்கு ரூ.3.89 கோடி மதிப்பிட்டில் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு ரூ.8,75,000/- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைகள் மற்றும் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசுக்கு அனைவரும் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில், உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.