25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 15, 2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்: விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு (Voters Information Slip) வழங்கும் பணிகள் தீவிரம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு (Voters Information Slip) வழங்கும் பணிகள் 12.04.2026 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் விவரம்: விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு: இராஜபாளையம் (202): 2,14,192 ஸ்ரீவில்லிபுத்தூர் (203): 2,24,122 சாத்தூர் (204): 2,29,330 சிவகாசி (205): 2,28,205 விருதுநகர் (206): 2,00,618 அருப்புக்கோட்டை (207): 2,07,750 திருச்சுழி (208): 2,05,301மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள்: 15,09,518வழங்கப்பட்ட தகவல் சீட்டுகளின் விவரம் (13.04.2026 வரை):இன்று வரை தொகுதிகள் வாரியாக வழங்கப்பட்டுள்ள வாக்காளர் தகவல் சீட்டுகளின் விவரம்:இராஜபாளையம்: 2,305 ஸ்ரீவில்லிபுத்தூர்: 413 சாத்தூர்: 604 சிவகாசி:  678 விருதுநகர்: 1,260அருப்புக்கோட்டை:3,991திருச்சுழி: 3,686மொத்தம்: 12,937 வாக்காளர்களுக்குத் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 14,96,581 வாக்காளர்களுக்குத் தகவல் சீட்டுகளை வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று முடிக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 15, 2026

கூட்டுறவுச் சங்கத் தேர்தல்,குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் வாக்களிக்கவோ, போட்டியிடவோ இயலாது மாவட்ட ஆட்சியர் தகவல்.

விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்) அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள், தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். 1988-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின்படி, சங்க உறுப்பினர்கள் நுழைவுப் புத்தகத்தில் உறுப்பினரின் பெயரின் கீழ் குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் எண் பதியப்பட வேண்டும்.இது தொடர்பாகச் சங்கச் செயலாளர் மற்றும் தலைவர் மூலம் ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் நகல்களை வழங்காத உறுப்பினர்களுக்கு, இயற்கை நியதி கோட்பாடுகளின்படி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, கூட்டுறவுத் தேர்தல் விதி 52(7) (ந) (i)-ன் படி தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறுவதை உறுதிசெய்ய, உறுப்பினர்கள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணின் ஒளியச்சு (Xerox) நகல்களைச் சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களைப் பதிவுத் தபாலிலோ அல்லது சங்க வேலை நேரங்களில் நேரிலோ வரும் 30.04.2026-க்குள் கிடைக்குமாறு வழங்க வேண்டும். உறுப்பினர்கள் இந்த விவரங்களை வழங்கத் தவறும்பட்சத்தில், விதி 52(7) (ந)-ன் படி சங்க நிர்வாகக்குழு தேர்தலில் வாக்களிக்கவோ அல்லது வேட்பாளராகப் போட்டியிடவோ தகுதியை இழக்க நேரிடும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 15, 2026

தபால் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் இதுவரை 1,255 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் வீட்டிலிருந்தே தபால் வாக்களிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தபால் வாக்களிக்க மொத்தம் *3,853* வாக்காளர்கள் (2,009 மூத்த குடிமக்கள் மற்றும் 1,844 மாற்றுத்திறனாளிகள்) படிவம் 12D மூலம் விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் வாக்கு சேகரிப்பில், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் *1,255* தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அதன் தொகுதிவாரியான விவரம்:*இராஜபாளையம்:* 149 மூத்த வாக்காளர்கள், 115 மாற்றுத்திறனாளிகள்.*திருவில்லிபுத்தூர்:* 109 மூத்த வாக்காளர்கள், 140 மாற்றுத்திறனாளிகள்.*சாத்தூர்:* 61 மூத்த வாக்காளர்கள், 45 மாற்றுத்திறனாளிகள்.*சிவகாசி:* 74 மூத்த வாக்காளர்கள், 66 மாற்றுத்திறனாளிகள்.*விருதுநகர்:* 63 மூத்த வாக்காளர்கள், 78 மாற்றுத்திறனாளிகள்.*அருப்புக்கோட்டை:* 135 மூத்த வாக்காளர்கள், 98 மாற்றுத்திறனாளிகள்.*திருச்சுழி:* 45 மூத்த வாக்காளர்கள், 77 மாற்றுத்திறனாளிகள்.ஒட்டுமொத்தமாக 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து இதுவரை *636 மூத்த குடிமக்கள்* மற்றும் *619 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,255 பேர்* தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். தபால் வாக்குகளைச் சேகரிக்க, வாக்குப்பதிவு அலுவலர் தலைமையில் நுண்பார்வையாளர் உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட *49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் வரும் 2026 ஏப்ரல் 17-ம் தேதி வரை* விண்ணப்பித்த வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.  படிவம் 12D-இல் விண்ணப்பித்தவர்கள் பின்னர் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது என்பதால், தபால் வாக்குக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட நாட்களில் வீட்டிலேயே இருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் *மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,.* அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Apr 13, 2026

சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் மூலம் விழிப்புணர்வு.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில்  (11.04.2026) பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் (Stickers):          ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், “என் வாக்கு, என் குரல்” என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் (Stickers) வீடு வீடாகச் சென்று ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.உறுதிமொழி ஏற்பு:          தொடர்ந்து, "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Apr 13, 2026

“2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்டத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் அறிவியல் பூர்வமான பயிற்சியை வழங்கும் கோடைகாலப் பயிற்சி முகாமானது நடத்தப்படுகின்றது. இதனடிப்படையில் “2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த கோடைக்கால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் இரண்டு அமர்வுகளாக பயிற்சிகள் வழங்கப்படும்.இப்பயிற்சி முகாமில், குத்துச்சண்டை, டென்னிஸ், வளைகோல்பந்து, யோகா, தடகளம், கபாடி, கையுந்துபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சிகள் வழங்கப்படும். கோடைக்கால பயிற்சி முகாமில்  கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கோடைக்கால பயிற்சி முகாமில் சேர விரும்புவோர் தங்களது பெயர்களை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 13, 2026

208-திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு ஊராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நேர்மையான மற்றும் கண்ணியமான தேர்தலை எதிர்கொள்ளவும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் வாக்களர்களிடையே பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வருகின்றன.விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:          அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யவும், என் வாக்கு விற்பனைக்கு அன்று என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, ரங்கோலி போட்டி, மெஹந்தி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் சட்டமன்றத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாக்காளர்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.துண்டு பிரசுர விழிப்புணர்வு:அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு ஊராட்சியில் உள்ள வாரச்சந்தையில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Apr 13, 2026

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 49 குழுக்கள் அமைக்கப்பட்டு 13.04.2026 முதல் 17.04.2026 வரை வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறவுள்ளனர் - மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கெனவே படிவம் 12D-இல்இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 330 மூத்த வாக்காளர்கள் மற்றும் 240 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும்,திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 357 மூத்த வாக்காளர்கள் மற்றும் 358 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 306 மூத்த வாக்காளர்கள் மற்றும் 214 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 224 மூத்த வாக்காளர்கள் மற்றும் 177 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 318 மூத்த வாக்காளர்கள் மற்றும் 310 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 303 மூத்த வாக்காளர்கள் மற்றும் 252 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 170 மூத்த வாக்காளர்கள் மற்றும் 294 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் என 7 சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2008 மூத்த குடிமக்கள், 1845 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க  விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.மேற்படி வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்குப்பதிவு அலுவலர் தலைமையின் கீழ் நுண்பார்வையாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு 10, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 10, சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 5, சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு 5, விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு 6, அருப்புக்கோட்டை சட்டமன்ற  தொகுதிக்கு 7, திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு 6  என மொத்தம் 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்கள் நாளை 2026 ஏப்ரல் 13 முதல் 17 வரை வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.இந்த வசதியைப் பயன்படுத்தி ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே வாக்குகள் செலுத்தலாம். படிவம் 12D-இல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது.எனவே, தபால் வாக்குக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் வாக்களிக்க ஏதுவாக வீட்டிலேயே இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 13, 2026

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சட்ட மேதையான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் (14.04.2026) அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சமத்துவ உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்  (13.04.2026) அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-14ஆம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது,ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து, அனைவரிடமும் சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் சமூக நீதி நிலவுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு சமத்துவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் சாதி வேறுபாடுகளுக்கெதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். 

Apr 11, 2026

செந்திக்குமார நாடார் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளார் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.அதன்படி, கல்லூரியில் பயிலும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கோலப் போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு   வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர். இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வுஇதன் ஒரு பகுதியாக, இன்று (10.04.2026) செந்திக்குமார நாடார் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், 100 க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் 100% Vote என்ற தேர்தல் வாசகம் வடிவில் நின்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தினர். உறுதிமொழி ஏற்பு:          "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மேலும், மாணவிகள் கைகளில் மெஹந்தி மூலம் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்களை எழுதியும், முகத்தில்  வர்ணம் பூசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு செயல்பாடுகள்:இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாணவர்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக வாக்காளர் விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கையெழுத்து இயக்கம்தொடர்ந்து, எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு அனைவரும் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Apr 11, 2026

ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.முதல் தலைமுறை வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு:இதன் ஒரு பகுதியாக, இன்று (09.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லி ஊராட்சியில், ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில், கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:உறுதிமொழி ஏற்பு: "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.கையெழுத்து இயக்கம்தொடர்ந்து, எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு அனைவரும் கையெழுத்திட்டனர்.இறுதி நிகழ்வாக, மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு சிறப்புரை மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்), வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 140 141

AD's



More News