விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் மையமான விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (VSVNPC) வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் (17.04.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.வாக்கு எண்ணிக்கை கால அட்டவணைஇந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் அனைத்தும் 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று இந்த மையத்தில் எண்ணப்பட உள்ளன.வாக்கு எண்ணிக்கை மைய ஏற்பாடுகள்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இந்த ஒரே மையத்தில் நடைபெற உள்ளது.ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படும் அறைகள் (Counting Halls) தயார் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு அறையிலும் தேவையான எண்ணிக்கையிலான மேசைகள் மற்றும் தடுப்புக் கம்பிகள் (Barricades) அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் தபால் வாக்குகள் எண்ணுவதற்குத் தேவையான பிரத்யேக வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மைய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புவாக்கு எண்ணிக்கை மையத்தில் தொகுதி வாரியாக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் (Counting Halls) குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக வைக்கப்படும் இருப்பறைகள் (Strong Rooms) மற்றும் அவற்றிற்கான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பார்வையிடப்பட்டது.வாக்குச்சாவடி முகவர்களுக்கான பிரத்யேக அறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் (Parking) ஆகியவற்றைத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அமைக்க அறிவுறுத்தப்பட்டது.பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள்வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையற்ற மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவக் குழுவினரின் தயார் நிலையில் வைத்திருக்கவும், மூன்றடுக்கு பாதுகாப்பு முறை மற்றும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் 24 மணி நேரக் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்விதத் தொய்வுமின்றி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.ஊடக மையம் (Media Center) தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஏதுவாக, உரிய வசதிகளுடன் கூடிய ஊடக மையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.செய்தியாளர்கள் தடையின்றிப் பணியாற்றத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் SVEEP (Systematic Voters' Education and Electoral Participation) ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே நேரடியாக விளக்க கூட்டம் நடத்துதல், விழிப்புணர்வு பேரணி, துண்டுப்பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதி மொழி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் மூலமாகவும், தொலைகாட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், மாவட்டத்தின் 7-சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு குறைவான வாக்குப்பதிவு பதிவான பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தனிக்கவம் செலுத்தி, அங்குள்ள பொதுமக்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைவான வாக்குப்பதிவு பதிவான பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களின் இல்லங்களுக்கே களப்பணியாளர்கள் நேரடியாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தும், “என் வாக்கு, என் குரல்”, “100 சதவீதம் வாக்களிக்க தயாராகுவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை(Stickers) ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.ஊர்வலம்:தொடர்ந்து, அப்பகுதிகளில்”ஜனநாயகத்தின் கூர்மையான ஆயுதம் நம் வாக்குரிமை, அதனை மழுங்காமல் காப்பது நம் கடமை” மற்றும் “100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி, வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.கையெழுத்து இயக்கம்:மேலும், "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.உறுதிமொழி:"இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையுள்ள குடிமகனாகிய நான், நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவேன் என்றும், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது வாக்கினை நேர்மையாகப் பதிவு செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்." என்ற உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இறுதி நிகழ்வாக, வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கணிணி அறையில்,(17.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா, I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S, அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S, அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா,I A S., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு மற்றும் பாதூப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2001 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 130 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 130 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அதன்படி, 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 10 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 11 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 34 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 26 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 40 தேர்தல் நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 157 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாக்குச்சாவடி மையங்களை கண்காணித்திட மையத்திற்கு ஒரு நுண்பார்வையாளர் என 130 நபர்களுடன், 20 சதவீதம் இருப்புடன் மொத்தம் 157 நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் (16.04.2026) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026 முன்னிட்டு, தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU), விவிபேட் (VVPAT) இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை தேர்தல் பொதுப்பார்வையாளர் (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்) திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit), கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU), விவிபேட் (VVPAT) இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.அதன்படி, 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 644 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 349 விவிபேட் இயந்திரங்கள், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 369 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 400 விவிபேட் இயந்திரங்கள்,204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 698 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 378 விவிபேட் இயந்திரங்கள், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 345 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 374 விவிபேட் இயந்திரங்கள், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 337 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 365 விவிபேட் இயந்திரங்கள், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 648 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 351 விவிபேட் இயந்திரங்கள், 208- திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 700 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்,என ஆக மொத்தம் 3741 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2396 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 2596 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நாளில் (23.04.2026) அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்த வழிவகை செய்யும் வகையில், அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தின் 7- சட்டமன்ற தொகுதிகளில் வருகின்ற 17.04.2026, 18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய நாட்களில், காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்களுக்கும், 20.04.2026, 21.04.2026 மற்றும் 22.04.2026 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் கீழ்க்கண்ட விவரப்படி தபால் வாக்குகளை செலுத்த தபால் வாக்கு மையம் (Postal Voting Centre) அமைக்கப்பட்டுள்ளது.202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், இராஜபாளையத்திலும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், திருவில்லிபுத்தூரிலும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், சாத்தூரிலும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை உதவி ஆட்சியர் அலுவலகம், சிவகாசியிலும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகரிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டையிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், திருச்சுழியிலும் செலுத்தலாம்.இதுதொடர்பாக, 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.இராஜீவ் காந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00661) அவர்களையும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.பாலமுருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00660) அவர்களையும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.வடிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00662) அவர்களையும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.லட்சம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00663.) அவர்களையும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.இராஜாமணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00667) அவர்களையும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு திரு.செந்திவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00664) அவர்களையும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.கருப்பசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00668) அவர்களையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்/மாவட்டத் தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 23.04.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 18.04.2026 அன்று கீழ்காணும் மையங்களில் இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.202-இராஜபாளையம்:-பி.ஏ.சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி203-திருவில்லிபுத்தூர்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம்204-சாத்தூர்: எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி205-சிவகாசி: எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளி206-விருதுநகர்: கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி207-அருப்புக்கோட்டை: தேவாங்கர் கலைக்கல்லூரி208-திருச்சுழி: சேது தொழில் நுட்ப பயிலகம் எனவே, மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களாக(நிலை 1, 2, 3) நியமிக்கப்பட்டுள்ள அனைத்து 9,604 அலுவலர்களும், தாங்கள் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மையங்களிலேயே 18.04.2026 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.பயிற்சி நடைபெறும் மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக தனியே தபால் வாக்குப்பதிவு சேவை மையம் ஏற்படுத்தப்படும். மேற்படி மையத்தில் படிவம்-12ல் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படும்.அலுவலர்கள் தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து தபால் வாக்குச் சீட்டை பெற்றுக் கொண்டு வாக்குச் சாவடி மையத்தில் தபால் வாக்கு அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் (15.04.2026) பல்வேறு மையங்களில் நடைபெற்றன.காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை, அருப்புக்கோட்டை தொகுதி பொதுப்பார்வையாளர் திரு. ரஞ்சித் குமார் லால், இ.ஆ.ப., மற்றும் திருச்சுழி தொகுதி பொதுப்பார்வையாளர் திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (நிலை 1, 2, 3) ஆகியோருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் விரிவான பயிற்சி அளித்தனர்.தொகுதிவாரியாகப் பங்கேற்ற அலுவலர்களின் விவரம்:202-இராஜபாளையம்:-பி.ஏ.சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி - 1,292 அலுவலர்கள்.203-திருவில்லிபுத்தூர்: கலசலிங்கம் பல்கலைக்கழகம் - 1,480 அலுவலர்கள்.204-சாத்தூர்: எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி - 1,396 அலுவலர்கள்.205-சிவகாசி: எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளி - 1,392 அலுவலர்கள்.206-விருதுநகர்: கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 1,348 அலுவலர்கள்.207-அருப்புக்கோட்டை: தேவாங்கர் கலைக்கல்லூரி - 1,296 அலுவலர்கள்.208-திருச்சுழி: சேது தொழில் நுட்ப பயிலகம் - 1,400 அலுவலர்கள்.ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் மொத்தம் 9,604அலுவலர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், "ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி செயல்பட இந்தப் பயிற்சி மிக அவசியமானது. நுணுக்கமாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை இப்போதே முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று எவ்விதப் பதற்றமுமின்றி அலுவலர்கள் நேர்த்தியாகச் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு ஏற்கெனவே பார்வையாளர்கள் வருகை தந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளராக ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த திரு.நவநீத்குமார்,I A S ., அவர்களுக்கு பதிலாக, புதிய பொதுப் பார்வையாளராக திரு.ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள் (மொபைல் எண் 9489985879) நியமிக்கப்பட்டுள்ளார்.எனவே, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் பார்வையாளரின் தொலைபேசி எண் வாயிலாகத் தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் துணை சீரற்ற மயமாக்கல் (Supplementary Randomization) முறையில் தெரிவு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் (14.04.2026) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கு ஏற்கனவே 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 2,596 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்தத் தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.பொதுவாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா உட்பட 16 பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். தற்போது மாவட்டத்தில் இராஜபாளையம் (22 வேட்பாளர்கள்), சாத்தூர் (22), அருப்புக்கோட்டை (25) மற்றும் திருச்சுழி (23) ஆகிய 4 தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அங்குள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதைக் கணக்கில்கொண்டு, 20 சதவீதக் கூடுதல் ஒதுக்கீட்டுடன் சேர்த்து பின்வருமாறு மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன:202-இராஜபாளையம்* - 322 வாக்குப்பதிவு இயந்திரங்கள்204-சாத்தூர்:*- 349 வாக்குப்பதிவு இயந்திரங்கள்207-அருப்புக்கோட்டை*- 324 வாக்குப்பதிவு இயந்திரங்கள்208-திருச்சுழி:*- 350 வாக்குப்பதிவு இயந்திரங்கள்என மொத்தம் *1,345* வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை சீரற்ற மயமாக்கல் முறையில் இன்று முறைப்படி தெரிவு செய்யப்பட்டன.முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் கூடுதலாக இருந்த 907 இயந்திரங்களுடன், மதுரை மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட 600 இயந்திரங்கள் என மொத்தம் 1,507 இயந்திரங்கள் முதல்நிலைச் சரிபார்ப்பு (FLC) செய்யப்பட்டுத் தயார் நிலையில் இருந்தன.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு. சீனிவாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிவுறுத்தலின்படி, வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நேர்மையான, கண்ணியமான தேர்தலை எதிர்கொள்ளவும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் SVEEP (Systematic Voter’s Education and Electoral Participation) செயல்பாடுகள் மூலம் நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, (13.04.2026) 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில், தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி ரங்கோலி, சிலம்பம் மற்றும் தீப்பொறி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.விழிப்புணர்வு: பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள்: தொடர்ந்து, “வாக்காளர் என்பதை உறுதி செய்வீர்” மற்றும் “என் வாக்கு விற்பனைக்கு அன்று” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் வீதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உறுதிமொழி: நிகழ்ச்சியின் நிறைவாக, "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்பதை வலியுறுத்தி அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.