சர்வதேச அரங்கில் இஸ்ரேல் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்தியாவுடனான தங்களின் ஆழமான நட்புறவை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:"மற்ற நாடுகள் இஸ்ரேலைக் குறை கூறும்போது, இந்தியா எங்கள் மீது அளவில்லா அன்பு (Crazy Love) வைத்துள்ளது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவிலிருந்துதான் எனக்கு அதிக அளவிலான பின்தொடர்பவர்கள் (Followers) உள்ளனர்."இந்திய மக்களின் இந்தப் பேராதரவு தங்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செயற்கை நுண்ணறிவு (AI) கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முடித்தவர். 21 வயதில் மைக்ரோசாப்டில் பணியைத் தொடங்கி, பின்னர் பேஸ்புக், யாகூ, ஸ்னாப்சாட் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.சென்னையைச் சேர்ந்த அவர், இனி அமெரிக்கா எதிர்கொள்ளும் ,முக்கிய சவால்களுக்கு தீர்வு காணும் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 29 வயதான லி ஜியு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெறும் ரூ.42,000 செலவில் ஒரு குறும்படத்தை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார்.ரோபோ மற்றும் மேனிக்வின் இடையேயான காதலை மையமாகக் கொண்டு 3.5 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தை அவர் 10 நாட்களில் உருவாக்கியுள்ளார். இந்த படைப்பின் வெற்றியால், தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.
நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு அரிய வரலாற்றுச் சொத்து ஒப்படைப்பு.பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பல ஆண்டுகளாக நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த வரலாற்றுப் பொக்கிஷம், மீண்டும் தாயகத்தை அடைகிறது.தமிழர் வரலாற்றின் அரிய சான்று.சோழப் பேரரசின் ஆட்சி முறை, பொருளாதாரம், சமூக வாழ்க்கை மற்றும் நிர்வாக அமைப்பு குறித்த முக்கிய தகவல்களை இந்த செப்பேடுகள் பதிவு செய்துள்ளன. தமிழர் நாகரிகத்தின் செழுமையையும், சோழர்களின் ஆட்சித் திறனையும் வெளிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாக இவை கருதப்படுகின்றன.பண்பாடு மற்றும் மொழியின் பெருமை.தமிழ் மொழி, இலக்கியம், கலை, கல்வெட்டு மரபு மற்றும் கலாசார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முக்கிய வரலாற்றுச் சான்றுகளாக இந்த செப்பேடுகள் விளங்குகின்றன.இந்தியா – நெதர்லாந்து நட்புறவின் புதிய அத்தியாயம்.கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கவும், வரலாற்றுச் சொத்துகளை உரிய நாடுகளுக்கு மீண்டும் வழங்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்த ஒப்படைப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.தமிழர்களின் பெருமையையும், இந்தியாவின் கலாசார அடையாளத்தையும் பிரதிபலிக்கும் இந்த செப்பேடுகள், வருங்கால தலைமுறைகளுக்கு வரலாற்றின் மதிப்பை உணர்த்தும் அரிய பொக்கிஷங்களாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய முன்னிலை பெறும் நோக்கில், சீனா மிகப்பெரிய முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 2 டிரில்லியன் யுவான் (295 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் நவீன ஏஐ டேட்டா சென்டர் கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கணினி மற்றும் தரவு மையங்களை ஒருங்கிணைத்து, 2028-க்குள் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த ஏஐ வலையமைப்பை உருவாக்க பெய்ஜிங் இலக்கு நிர்ணயித்துள்ளது.மேலும், இந்த கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஏஐ சிப்களில் சுமார் 80 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட உள்ளது. குறிப்பாக Huawei போன்ற சீன நிறுவனங்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.இந்த நடவடிக்கை, ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விடுப்பதுடன், Nvidia மற்றும் AMD போன்ற நிறுவனங்களின் சந்தை நிலைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சீனாவின் ஹாங்சோ (Hangzhou) இடைக்கால மக்கள் நீதிமன்றம், தொழிலாளர் நலன் சார்ந்த ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. நிறுவனங்கள் தங்களது செலவைக் குறைப்பதற்காகவும், லாபத்தை அதிகரிப்பதற்காகவும் மட்டும், பணிபுரியும் மனித ஊழியர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.வழங்கப்பட்ட நாள்: சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு முன்னதாக, ஏப்ரல் 30, 2026 அன்று இந்த அதிரடி தீர்ப்பு வெளியானது.நீதிபதிகளின் கருத்து: தொழில்நுட்ப வளர்ச்சியால் நிறுவனங்கள் அடையும் லாபத்திற்காக, உழைக்கும் தொழிலாளர்களைப் பலிகடா ஆக்கக்கூடாது.சமூகப் பொறுப்பு: ஊழியர்களை நியாயமாக நடத்துவதும், அவர்களுக்குரிய ஊதியத்தை முறையாக வழங்குவதும் நிறுவனங்களின் கடமை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த தீர்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும், உலகளவில் தொழிலாளர் உரிமைகளுக்கான ஒரு புதிய வழிகாட்டியாகவும் பார்க்கப்படுகிறது.
சிறிய ரக அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்.தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், பிரம்மாண்ட ஏஐ (AI) டேட்டா சென்டர் அமைப்பதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு விவசாய நிலத்தைக் கோரின. இதற்காக 86 வயதான முதிய விவசாயிக்கு 15 மில்லியன் டாலர் (சுமார் 125 கோடி ரூபாய்) தர முன்வந்தபோதும், அவர் அந்தப் பெரும் தொகையைத் துணிச்சலாக நிராகரித்தார். "என் கண் முன்னே என் விவசாய நிலம் அழிந்து போவதை என்னால் பார்க்க முடியாது" என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்களை வழங்கியதன் மூலம் வடகொரியா சுமார் 14.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகை வடகொரியாவின் ஒட்டுமொத்த ஆண்டு உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) இணையானதாகும். பணமட்டுமின்றி, ரஷ்யாவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்பங்கள், உணவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வடகொரியா கைமாறாகப் பெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் உலக முன்னணியை நோக்கி வேகமாக முன்னேறி வரும் சீனா, தற்போது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வானியல் ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ள கிங்காய் மாகாணத்தில், சுமார் 550 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹4,600 கோடி) செலவில் இந்த பிரம்மாண்ட திட்டம் உருவாகி வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் 14.5 மீட்டர் விட்டம் கொண்ட சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மற்றும் நவீன விண்வெளி ஆராய்ச்சி உபகரணங்கள் நிறுவப்பட உள்ளன.2030 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த மையம், தற்போது உலகின் முக்கிய வானியல் ஆய்வு தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹவாய் தீவுகளின் மௌனா கியா ஆய்வு மையத்தையும் மிஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்வதில் சீனாவுக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் முக்கிய மைல்கல்லாக அமையும்.