25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச செய்திகள்

Jul 14, 2026

உலகின் முதல் Air Taxi Vertiport-க்கு UAE அங்கீகாரம்!

எலக்ட்ரிக் ஏர் டாக்சி சேவைக்கான உலகின் முதல் வணிக Vertiport-க்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் துபாயில் பாதுகாப்பான Air Taxi சேவையை அறிமுகப்படுத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன. நகர்ப்புற விமானப் போக்குவரத்தில் UAE முன்னோடியாக உருவெடுத்து வருகிறது.

Jul 13, 2026

300 மலைப்பாம்புகள்... மின்கட்டணத்தில் சிக்கிய நபர்!

சீனாவின் தைசோ பகுதியில் வசித்த ஒருவர், தனது வீட்டிலேயே 300-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்து வந்தது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பாம்புகளுக்கு தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், வழக்கத்திற்கு மாறான மின்கட்டணம் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.

Jul 13, 2026

அமெரிக்காவை விட்டு வெளியேற நினைக்கும் இந்தியர்கள் அதிகரிப்பு!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 40% பேர் அந்நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள், அரசியல் சூழல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவை இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.

Jul 11, 2026

சிங்கப்பூரில் AI மூலம் போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி.

சிங்கப்பூரில் இணையத்தில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதை பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார். அண்மையில் இந்திய சமூகத்தை குறிவைத்து பரவிய 14 தவறான இணையப் பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Jul 10, 2026

123 ஆண்டுகளாக அணையாமல் எரியும் மின்விளக்கு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், லிவர்மோர் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 'சென்டினியல் லைட்' (Centennial Light) என்ற மின்விளக்கு, 1901 முதல் இடையறாது எரிந்து வருகிறது. 123 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த விளக்கு, உலகின் மிக நீண்ட காலம் எரியும் மின்விளக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனம் தயாரித்த இந்த விளக்கு, தற்போது சுமார் 4 வாட் வெளிச்சம் மட்டுமே அளித்தாலும், அதன் நீடித்த செயல்திறன் உலகையே வியக்க வைத்துள்ளது.

Jul 09, 2026

வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வெனிசுலாவின் கரீபியன் கடற்கரை அருகே உள்ள மோரோன் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. முதலில் 7.1 மற்றும் 7.2 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நிமிட இடைவெளியில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த நூற்றாண்டில் அந்நாட்டை தாக்கிய மிகப் பெரிய நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Jul 08, 2026

பிறந்த குழந்தைகளுக்கு இலவச டயப்பர் திட்டம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச டயப்பர்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 400 டயப்பர்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தை பராமரிப்பின் ஆரம்பச் செலவைக் குறைத்து, குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Jul 07, 2026

விண்வெளியில் இருந்து மின்சாரம்... சீனாவின் புதிய சாதனை.

விண்வெளியில் சூரிய மின் நிலையம் அமைத்து, வயர்லெஸ் முறையில் பூமிக்கு மின்சாரம் அனுப்பும் 'Sun Chasing' திட்டத்தில் சீனா முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது.75 மீட்டர் உயர கோபுரம் மற்றும் சிறப்பு குவிமாடக் கண்ணாடி மூலம் சூரிய ஒளியை சேகரித்து, அதை மைக்ரோவேவ் அலைகளாக மாற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் மின்சாரம் அனுப்பும் தரைவழிச் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

Jul 06, 2026

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புச் சம்பவம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்களை குறிவைத்து சிலர் இனவெறி முழக்கங்களை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதுடன், இந்திய தேசியக் கொடியை அவமதித்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, "அமெரிக்காவில் எந்த சமூகத்தினருக்கும் எதிரான வெறுப்புக்கும் இடமில்லை. இந்தியர்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று தெரிவித்துள்ளார்.

Jul 06, 2026

சைக்கிள் பயன்பாட்டில் உலகுக்கு முன்னுதாரணம் நெதர்லாந்து.

சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தில் முன்னணி நாடாக திகழும் நெதர்லாந்து, "சைக்கிள்களின் நாடு" என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்நாட்டில் சுமார் 99 சதவீத மக்கள் சைக்கிளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் எண்ணிக்கையை விட சைக்கிள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் அன்றாட பயணத்திற்கு சைக்கிளையே பயன்படுத்துவது, எளிமை மற்றும் பசுமை வாழ்க்கை முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News