25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச செய்திகள்

Jul 03, 2026

உலகின் முதல் புதிய மருத்துவ இம்ப்ளான்ட் அறிமுகம்.

மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றமாக, மனித உடலின் திசுக்களுடன் வேகமாக இணையும் திறன் கொண்ட புதிய வகை மருத்துவ இம்ப்ளான்ட்டை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், எலும்பு மற்றும் உறுப்பு அறுவை சிகிச்சைகளில் பக்கவிளைவுகளை குறைத்து, சிகிச்சை முறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

Jul 02, 2026

கோடீஸ்வரி ரூ.4 கோடி மதிப்புள்ள சொகுசு காரில் வீட்டு வேலைக்கு வருகிறார்.

சீனாவில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர், சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொகுசு காரில் வந்து வீடுகளில் பாத்திரம் கழுவும் வேலையைச் செய்வது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது."நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். வீட்டில் சும்மா இருப்பதை விரும்பவில்லை. சுறுசுறுப்பாகவும், பயனுள்ள வகையிலும் நேரத்தை செலவிடவே இந்த வேலையை விருப்பத்துடன் செய்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார். பணம் மட்டுமல்ல, மனநிறைவும் வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Jul 01, 2026

உலகின் சிறந்த நாடுகள் பட்டியல்... அமெரிக்காவை முந்திய UAE.

2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 10-வது இடத்தைப் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அமெரிக்கா 11-வது இடத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியா 31-வது இடத்தைப் பெற்றுள்ளது.

Jun 30, 2026

தனிமைக்கு துணை: சீனாவில் புதிய வணிகம்.

சீனாவில் தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு துணையாக நபர்களை வாடகைக்கு எடுக்கும் புதிய தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது சுமார் 7.4 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த சந்தை, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உணவகங்களுக்கு செல்வது, சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற தருணங்களில் தனிமையை தவிர்க்க பலர் பணம் கொடுத்து நண்பர்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர். சமூக வாழ்க்கையின் புதிய போக்காக இந்த சேவை உருவெடுத்து வருகிறது.

Jun 29, 2026

மூளை சிப் தொழில்நுட்பத்தில் சீனாவின் புதிய சாதனை

மூளை-கணினி இணைப்பு (BCI) தொழில்நுட்பத்தில் சீனா முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைகளை இயக்க உதவும். உலகின் முதல் வணிகரீதியான 'NEO' மூளை சிப் தொழில்நுட்பத்திற்கு அந்நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது. மூளையின் திசுக்களை பாதிக்காமல் பொருத்தப்படும் இந்த சிப், மனித எண்ணங்களைப் புரிந்து அதற்கேற்ப சிக்னல்களை அனுப்பும் திறன் கொண்டது. இதன் மூலம் ரோபோடிக் கையுறைகள் செயல்பட்டு, நோயாளிகள் மீண்டும் தங்களது கை அசைவுகளை கட்டுப்படுத்த உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Jun 27, 2026

சீனா தனது பள்ளி கல்வியில் AIக்கு முக்கியத்துவம்.

எதிர்கால தொழில்நுட்ப உலகை கருத்தில் கொண்டு, சீனா தனது கல்வி முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, 6 வயது முதல் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சிறு வயதிலிருந்தே நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் 8 மணிநேரம் AI பாடங்களை கற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jun 27, 2026

AI வளர்ச்சியால் மாறும் அமெரிக்கா.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, அமெரிக்காவின் முதலீட்டு முன்னுரிமைகளையே மாற்றி வருகிறது. பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை விட தற்போது AI டேட்டா சென்டர்கள் அமைப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் மாத அரசின் புள்ளிவிவரங்களின்படி, டேட்டா சென்டர் கட்டுமானத்திற்கான ஆண்டு செலவு 50.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது பொதுப் போக்குவரத்து திட்டங்களுக்காக செலவிடப்படும் 49.3 பில்லியன் டாலரை விட அதிகமாகும். AI தொழில்நுட்பத்தின் எதிர்கால முக்கியத்துவத்தையும், டேட்டா சென்டர்களின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தையும் இந்த மாற்றம் வெளிப்படுத்துகிறது.

Jun 26, 2026

ஈரான் விவகாரம்: அதிபர் ட்ரம்பிற்கு நாடாளுமன்றத்தில் நெருக்கடி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முக்கியத் தீர்மானம் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.முக்கிய அம்சங்கள்:தீர்மானத்தின் நோக்கம்: சுமார் 90 நாட்களாக நீடிக்கும் இந்தப் போருக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) முறையான அனுமதி தேவை என்பதை வலியுறுத்தி இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.வாக்குகள் விவரம்: இந்தத் தீர்மானம் 215 வாக்குகள் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.கட்சிக்குள்ளேயேஎதிர்ப்பு: ட்ரம்பின்சொந்தக்கட்சியானகுடியரசுக்கட்சியைச்சேர்ந்தநான்குஉறுப்பினர்களும்இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.சொந்தக் கட்சி உறுப்பினர்களே எதிராக வாக்களித்திருப்பது, இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள பிளவை உறுதிப்படுத்துகிறது.

Jun 26, 2026

வணிகக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி.

சர்வதேச கடல் போக்குவரத்தை சீரமைக்க, ஹார்முஸ் நீரிணையை கடக்கும் வணிகக் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கடலடி கண்ணிவெடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Jun 25, 2026

ஆசிரியருக்கு ரஷ்ய அதிபர் புதின் அளித்த மரியாதை.

ரஷ்ய அதிபர் புதின், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பள்ளி ஆசிரியரை சந்தித்து அவருக்கு சிறப்பான மரியாதை செலுத்தினார். கிரெம்ளின் மாளிகைக்கு ஆசிரியரை அழைத்து விருந்தளித்த அவர், தனது வாழ்வில் ஆசிரியரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்த தனது மாணவனை கட்டியணைத்து முத்தமிடும் ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News