2011ல் அறிமுகமான வீராங்கனை சவிதா புனியா, 35 இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் எதிரணியின் கோல் வாய்ப்புகளை துடிப்பாக தடுப்பதால், 'பெருஞ்சுவர்' என அழைக்கப்படுகிறார். இந்தியா 4வது இடம் பெற முக்கிய காரணமாகடோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) சவிதா புனியா. ஜப்பானில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு (செப்.19-அக்.4), ஹாக்கியில் ,தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்கு. இதன் மூலம் 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேரடியாக தகுதி பெறலாம். 'சீனியர்' வீராங்கனை என்ற முறையில், அணிக்கு தேவையான ஊக்கம் அளிப்பேன். தங்கம் வெல்வதற்கான திறமை நமது அணியிடம் உள்ளது என்றார்..
11-வது சர்வதேச இளையோர் பாய்மர படகுப்போட்டியின் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் நேற்று பங்கேற்றனர். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, கடலோர காவல்படை (கிழக்கு மண்டலம்)கமாண்டர் தத்விந்தர்சிங் சைனி, சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர்விஸ்வநாதன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடையை அனுபவித்ததமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி ,கடந்து ஆண்டு மறுபிரவேசம் செய்த அவர் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.அவரிடம்ரத்தம்மற்றும்சிறுநீர்மாதிரிசேகரிக்கப்பட்டு ஊக்கமருந்துசோதனைநடத்தியபோதுடிரோஸ்டானோலான்என்றஊக்கமருந்தைபயன்படுத்தியதுகண்டறியப்பட்டது. இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கைகமிட்டிவிசாரித்தது. 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது
மூன்று போட்டி கொண்ட யூத் ஒருநாள்தொடரில் ,தென் ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பேட்டிங் தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணி 49.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூர்ய வன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஜோடி துவக்கம் தந்தது. 10 சிக்சர் விளாசிய வைபவ், 24 பந்தில் 68 ரன் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 11 ஓவரில் 103/2 ரன் எடுத்த போது, மின்னல், மழை காரணமாக நிறுத்தப்பட்டது. போட்டிமீண்டும் போட்டி துவங்கியதும், இந்திய 27 அணியின் இலக்கு ஓவரில் 174 ரன் எனமாற்றப்பட்டது. முடிவில், இந்திய அணி 23.3 ஓவரில் 176/2 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.. இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.
72வது சீனியர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நேற்றுஉ.பி.,யின் வாரணாசியில் துவங்கியது. 58 அணிகளை சேர்ந்த ஆயிரம் வீரர், வீராங்கனைகள்,நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். இத்தொடரை, பிரதமர் மோடி டில்லியில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார். ஒலிம்பிக் பதக்க இலக்கு' திட்டத்தால், நாட்டின் விளையாட்டு கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நம் இளம் நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில்ஜொலிக்க ,வலுவான உட்கட்டமைப்பு, நிதி உதவி போன்றவை உதவியுள்ளது. இந்தியாவில், கடந்த 10 ஆண்டு களில், 'பிபா' 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து, உலக கோப்பை ஹாக்கி, பெரிய செஸ் தொடர்கள் உட்பட 20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. "கேலோ இந்தியா' விளை யாட்டு மூலம் நுாற்றுக்க ணக்கான இளைஞர்கள் தேசிய அளவிலான போட் டிகளில் பங்கேற்கின்றனர். வரும் 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 'மெகா' விளையாட்டுகளை நடத்துவதால், நமது வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவில் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறதுஎன பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'யூத் கன்டெண்டர் சீரிஸ்' குஜராத்தின் வதோதராவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சின்ட்ரல்லா தாஸ், ஹன் சினி மதன் மோதினர். சின்ட்ரல்லா 3–1 (11–3, 9-11, 11-9, 11-8) என்ற கணக்கில் வென்று சாம்பியன் . இந்தியாவின் ரூபம் சர்தார், சோஹம் முகர்ஜி ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் (17 வய துக்கு உட்பட்ட) மோதினர். இதில் ரூபம் 3-0 (11-8, 11-5, 11-3) என வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பெங்கால் அணி 3-1 என, சூர்மா கிளப் அணியை ,ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் வெற்றி பெற்றது. ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 7வது சீசன் சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், நடக் கிறது. நேற்று சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சூர்மா கிளப், ‘நடப்பு சாம்பியன்' பெங்கால் அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில், நேற்று நடந்த லீக் போட்டியில் ராஞ்சி, பெங்கால் அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அன்டிம் பங்கல் (53 கிலோ), உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 2 வெண்கலம் கைப்பற்றிய இந்திய வீராங்கனை ,ரூ. 52 லட்சத்திற்கு உ.பி., அணியில் ஒப்பந்தமானார். டில்லி அணி ரூ.52 லட்சத்திற்கு உலக சாம்பியன் (23 வயது) பட்டம் வென்ற இந்தியாவின் சுஜீத்தை (65 கிலோ), வாங்கியது. இந்திய வீரர் அமன் ஷெரா வத் (57 கிலோ),பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ரூ.51 லட்சத்திற்கு மும்பை அணியில்இணைந்தார். பல்வேறு அணிகளில் இந்தியாவின் தீபக் புனியா (86 கிலோ, ரூ. 12 லட்சம், மகாராஷ்டிரா), நிஷா (62 கிலோ, ரூ.12 லட்சம், உ.பி.,) உள்ளிட்டோர் ஒப்பந்தமாகினர்.
ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆமதாபாத்தில்,இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் மரியா கோலோவினாவிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார். ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில்பெங்களூருவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 5-7, 6-7 என, பிரான்சின் ஆர்தர்ரேமண்ட்டிடம் போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் மணிஷ் 3-6, 3-6 என, நெதர்லாந்தின் நீல்ஸ் விஸ்கரிடம் தோல்வியடைந்தார். ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப், 'டிரஸ்சேஸ்' அணிகள்பிரிவில் மும்பையில் ஸ்டாஸ்யா பாண்ட்யா, ஹரிப்பிரியா சிங், அமரா சிங், தேவ் ஹரிஷ்அடங்கிய மும்பை அணி வெள்ளி வென்றனர்.
கர்நாடகாவின் திலோத்தமா சென் ,ஜூனியர் பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் (253.1 புள்ளி) 2 வது தங்கம் வென்றார். தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 68வது சீசன் போபாலில், பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில், ஹரியானாவின் அமீரா அர்ஷத், 251.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றார். ரயில்வே வீராங்கனை ராஜ்ஸ்ரீ அனில்குமார் சஞ்சேதி வெள்ளி வென்றார். சட்டீஸ்கரின் பிரஞ்சு ஸ்ரீ சோமனி (230.5) வெண்கலம் கைப்பற்றினார்.உ.பி.,யின் ஜுஹைர் கான் ஆண்களுக்கான 'டிராப்' பிரிவு பைனலில் (43 புள்ளி) தங்கம்வென்றார். உத்தரகாண்ட் டின் ஷபாத் பரத்வாஜ் (40), ஐதராபாத்தின் கைனன்செனாய் (33) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். பஞ்சாப், வெள்ளி, உத்தரகாண்ட், வெண்கலம் வென்றனர்.