25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jan 12, 2026

டாடா ஸ்டீல் இந்தியா செஸ் ('ரேபிட் அண்ட் பிளிட்ஸ்') தொடரில் நிஹால் சரின், வந்திகா அகர்வால்2வது இடம் பிடித்தனர்.

டாடா ஸ்டீல் இந்தியா செஸ் ('ரேபிட் அண்ட் பிளிட்ஸ்') தொடர் கோல்கட்டாவில் ,ஓபன் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அர்ஜுன் எரி கைசி, நிஹால்சரின், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான ஓபன் பிரிவில் இந்தியாவின் நிஹால்சரின் சாம்பியன் பட்டம் வென்றார்.18 சுற்று கொண்ட 'பிளிட்ஸ்' முறையிலான போட்டிகள் ,ஓபன் பிரிவில், 8 வெற்றி, 8 'டிரா', 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தியாவின் நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி அடுத்த இரு இடங்களை தலா 11 புள்ளிகளுடன் வென்றனர். பெண்களுக்கான ப்ளிட்ஸ் பிரிவில், 18 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் வந்திகா அகர்வால், 2வதுஇடம் பிடித்தார்.

Jan 12, 2026

நாட்டின் முதல் 'அயன்மேன் 5i50 டிரையத்லான்’ போட்டி

'5i50’ டிரையத்லான்' போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'அயன்மேன்' அமைப்பு இணைந்து, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுகாடு பகுதியில் ,சர்வதேச அளவில் ஒலிம்பிக் தூரமான 51.50 கி.மீ அடிப்படையாகக் கொண்டு இப்போட்டி வடிவமைக்கப்பட்டது. 1.5 கி.மீ கடல் நீச்சல், 40கி.மீசைக்கிள்பயணம், 10 கி.மீ ஓட்டம் ஆகிய மூன்றும் இதில் அடங்கும். கடினமான அயன்மேன் 70.3' மற்றும் முழு தூர அயன்மேன் போட்டிகளில் பங்கேற்போருக்கு சிறந்த அனுபவமாக அமையும்.இந்தியா இப்போட்டியை, ஆசியாவில் மூன்றாவது நாடாகவும், உலகளவில் ஆறாவது நாடகாவும் நடத்துகிறது. போட் டியில், 17 வெளிநாட்டு வீரர்கள், 83 பெண்கள் என, 529 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.40 கி.மீ., சைக்கிள் போட்டி, கோவளம் கடற்கரை முதல் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வழியாக, எம்.ஜி.எம்., ரிசார்ட் வரையும்,10 கி.மீ., ஒட்டம், எம்.ஜி.எம்., ரிசார்ட்டில் துவங்கி, கிழக்கு கடற்கரையில் மாயாஜால் வரையிலும், 6- 16 வயதுடைய சிறுவர்களுக்கான 'அயன்கிட்ஸ்' பந்தயமும் நடந்தது.போட்டியை துணை முதல்வர் துவங்கி வைத்து "உலக தரமுடையபோலந்துக்கு கோப்பைவிளையாட்டைநடத்தும் திறன் மீண்டும் தமிழகம் நிரூபிக்கப்பட்டள்ளது. போட்டியை, சென்னையில் நடப்பது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமையாகும்" என்றார்.

Jan 12, 2026

முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கஇந்தியா வந்துள்ள நியூ சிலாந்து அணி, முதல் போட்டி நேற்று குஜராத்தின் வதோதராவில் நடந்தது. இந்திய அணியில் புது முயற்சியாக 3 'வேகம்', 3 - 'ஸ்பின்னர்' என 6 பவுலர்கள் இடம் பெற்றனர். இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். இரண்டாவது போட்டி ஜன. 14ல் ராஜ் கோட்டில் நடக்க உள்ளது.

Jan 12, 2026

பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் குஜராத் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிமியர் லீக் -டி-20') தொடருக்கான போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் குஜராத், டில்லி அணிகள் மோதின. குஜராத் அணி 20 ஓவரில், 209 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. டில்லி அணி சார்பில் நந்தனி 5 விக்கெட் வென்றார்.டில்லி அணி 20 ஓவரில் 205/5 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

Jan 12, 2026

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பைனலில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா கோப்பை வென்றார்.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பைனலில் உக்ரைனின் கோஸ்டியுக்கை வென்று  பெலாரஸ் வீராங்கனை சபலென்கா கோப்பை வென்றார்.

Jan 12, 2026

தேசிய குத்துச்சண்டைசாம்பியன் ஷிப்பில் லவ்லினா, தங்கம் வென்றார் .

தேசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் உ.பி.,யின் கிரேட்டர் நொய்டாவில்பெண்களுக்கான75 கிலோ பிரிவு பைனலில் அசாமின் லவ்லினா 5-0 என்ற கணக்கில் ரயில்வே அணியின் சனமாச்சா சானுவை வென்று தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 51 கிலோ பிரிவு பைனலில் தெலுங்கானாவின் நிகாத் ஜரீன்5,0 என, தங்கத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான55 கிலோ பிரிவு பைனலில் சர் வீசஸ் அணியின் ஜடுமானி சிங்5,0 என, சகவீரர் பார்த் வால் பவானை வென்றார்.மொத்தம்12 தங்கம் வென்ற சர்வீசஸ் அணி, முதலிடம் பிடித்தது.

Jan 10, 2026

பெங்களூரு அணி 20 ஓவரில் 157/ 7 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

பிரிமியர் லீக் கிரிக்கெட் ('டி-20')  இந்தியாவில், பெண்களுக்கான 4வது சீசன் நேற்றுதுவங்கியது. நவி மும்பையில் (மகாராஷ்டிரா) உள்ள பெங்க டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில்  நேற்று, நடந்த முதல் போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது..பெங்களூரு அணி 20 ஓவரில் 157/ 7 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

Jan 10, 2026

லவ்லினா நிஹாத் ஜரீன் தேசிய குத்துச்சண்டை பைனலுக்கு முன்னேறினர்.

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் உ.பி.,யில் முதன் முறையாக ஆண்கள், பெண்களுக்கான தொடர் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.10 பிரிவுகளில் இந்தியாமுழுவதும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.அரையிறுதிபோட்டிகள் நேற்று ,51 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் இரு முறை பதக்கம் வென்ற நிஹாத்ஜரீன், உ.பி.,யின் குசும் பஹலை 4:1 என்ற கணக்கில் வென்று பைனலுக்குள் நுழைந்தார்.அசாமின் லவ்லினா, 5:0 என உ.பி.,யின் இம்ரோஸ்கானை சாய்த்து, 75 கிலோ பிரிவு அரையிறுதியில் பைனலுக்கு முன்னேறினார். ஹரியானாவின் பூஜா ராணி (80 கிலோ), 5:0 என உ.பி.,யின் ஸ்நேகாவை வென்றார். மீனாட்ஷி ஹூடா (48), பிரீத்தி (54), அருந்ததி (70) மற்ற அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்றனர்.ஆண்கள் 55 கிலோ பிரிவு அரையிறுதியில் சர்வீசஸ் வீரர் ஜடுமானி சிங், 5:0 என சகவீரர் அமித் பங்கலை வென்று, பைனலுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில்சர்வீசஸ் வீரர் நரேந் தர் (90+), பெட்ரோலிய அணியின் நமன் (90) வென்றனர்.

Jan 10, 2026

டபிள்யு.டி.டி., சாம்பியன்ஸ் டேபிள் டென்னிஸ் மானவ் தக்கார் வெற்றி .

டபிள்யு.டி.டி., சாம்பியன்ஸ் டேபிள் டென்னிஸ் தொடர் கத்தார்தலைநகர் தோஹாவில் இந்தியா சார்பில் மானவ் தக்கார் 25, பங்கேற்கிறார். உலகத்தரவரிசையில் 34 வது இடத் திலுள்ள இவர், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 17வது இடத்திலுள்ள பிரான் சின் சைமன் காஜியை சந்தித்து,முதல் செட்டை 11-8 என மானவ் தக்கார்  கைப்பற்றினார். அடுத்த இரு செட்டுகளை 7-11, 9-11, என இழந்தார். 4, 5வது செட்டுகளை 11-7, 11-8 என வசப்படுத்தினார்.35 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் மானவ் தக்கார், 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். உலகின் 'நம்பர்-4' வீரர், சுவீடனின் டிரல்ஸ் மோர் கார்டுவை அடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சந்திக்க உள்ளார்.

Jan 10, 2026

டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடரில் நிஹால் சரின் 'சாம்பியன்'.

டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் கோல்கட்டாவில் இந்தியா சார்பில்  ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட் முறையிலான போட்டி (9 சுற்று) நடந்தன. நேற்று மூன்றாவது கடைசி 3 சுற்று நடந்தன. 7வது சுற்றில் நிஹால் சரின், பிரக்ஞா னந்தா, ஆனந்த் விதித் குஜ்ராத்தி மோதிய போட்டி 'டிரா' ஆகின. 8வது சுற்றில் நிஹால் சரின், அமெரிக்காவின் வெஸ்லேயை வீழ்த்தினார். ஆனந்த்-பிரக்ஞானந்தா மோதிய போட்டி டிரா ஆனது.ஆனந்த்-நிஹால் சரின் மோதிய கடைசி சுற்று ” 'டிரா' ஆனது. முடிவில் 2 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த நிஹால் சரின் சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ, 6.5 புள்ளி எடுத்து  பெண்கள் பிரிவில் முதலிடம்பெற்று, சாம்பியன் ஆனார். ரஷ்யாவின் அலெக்சா கோர்யச்கினா 2 (இந்தியாவின்திவ்யா (4.5) இடம் பெற்றனர்.

1 2 ... 63 64 65 66 67 68 69 ... 170 171

AD's



More News