25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jan 08, 2026

எச்.ஐ.எல்அணி ஹாக்கி இந்தியா லீக் அணி போட்டியில்., 6-3 என, பெங்கால் அணியை வென்றது.

ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன்  சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், எச்.ஐ.எல்., அணிகள் மோதின. எச்.ஐ.எல்., அணி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  2வது வெற்றியை பதிவு செய்த எச்.ஐ.எல்., அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தில் தமிழகம் அணி (5 புள்ளி) உள்ளது. பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன்ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில்,  . நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்கால், சூர்மா கிளப் அணிகள் மோதி, சூர்மா கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியைபெற்றது. 

Jan 08, 2026

உலக சாம்பியன் ஆனந்த் , கோல்கட்டா செஸ் தொடரில்  இரண்டு வெற்றி!

 சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் *தொடர் கோல்கட்டாவில்,. நடப்பு சாம்பியன் கார்ல்சன் பங்கேற்கவில்லை. இந்தியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். நேற்று'ரேபிட்' முறையிலான போட்டி 3 சுற்று நடந்தன. ஆனந்த், அமெரிக்காவின் சோ வெஸ்லேவை சந்தித்து, 40 நகர்த்தலில் வெற்றி பெற்றார். 3வது போட்டியில் ஆனந்த், சக வீரர் கார்த்தி சிதம்பரத்தை வென்றார்.முதல் 3 சுற்று முடிவில் ஆனந்த் (2.5), அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் (2.5) முதல்இரு இடத்தில் உள்ளனர். விதித் குஜ்ராத்தி 4 (2.0), நிஹால் சரின் 5 (1.5), பிரக்ஞானந்தா 6 வது (1.5) இடத்தில் உள்ளனர். இந்தியாவின் வந்திகா 4 (2.0), ரக்சித்தா தேவி 6 (1.5), ஹரிகா பெண்கள் பிரிவில் ,7வது (1.0) இடங்களில் உள்ளனர். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, 3 போட் டியில் 2 'டிரா', 1 தோல்வியுடன் 9வது (1.0) இடத்தில் உள்ளார்.வைஷாலி (0.5) கடைசி இடத்தில் (10) உள்ளார்.

Jan 08, 2026

பெண்கள் பிரிமியர் லீக் 'டி-20', 4வது சீசன், கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளஐந்து அணிகளின் கேப்டன்கள் .

நாளை மும்பையில் துவங்ககிரிக்கெட் பெண்கள் பிரிமியர் லீக் 'டி-20', 4வது சீசன், கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளஐந்து அணிகளின் கேப்டன்கள் ஆஷ்லே (குஜராத்), ஜெமிமா (டில்லி), ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை), ஸ்மிருதி (பெங்களூரு), மெக் லானிங் (உ.பி.,)

Jan 07, 2026

லக்ஷயா சென் மலேசிய ஓபன் பேட்மிண்டன்முதல் சுற்றில் வெற்றி.

கோலாலம்பூரில் ரூ.13 கோடி பரிசுத் தொகைக்கான மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-16, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜியா ஹங் ஜாசன் டெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற நேர்செட்டில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற லீஜிஜியாவை (மலேசியா) தோற்கடித்தார்.இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத்பெண்கள் ஒற்றையரில் 11-21, 11-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார்.இந்தியாவின் எம்.ஆர். அர் ஜூன்- ஹரிகரன் அம்சகருணன் இணை 10-21, 20-22 என்ற நேர் செட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் ஹிரோகி மிடோரிகவா- கோஹியமாஷிதா ஜோடியிடம் தோற்றனர். 

Jan 07, 2026

72-வது தேசிய சீனியர் கைப்பந்து ,தமிழக பெண்கள் அணி வெற்றி.

 உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில்,72-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள 30 ஆண்கள்அணிகளும், 28 பெண்கள் அணிகளும் தலா 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள்லீக்கில் மோதி வருகின்றன.'எப்' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக பெண்கள் அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் ஜார்கண்டை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 25-7, 25-11, 25-7 என்ற செட் கணக்கில் ஜார்கண்டை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது. .  தமிழக பெண்கள் அணி, இன்றுநடைபெறும் கடைசி ஆட்டத்தில் ,மராட்டியத்தை எதிர்கொள்கிறது.

Jan 07, 2026

இந்தியாவின் அனாஹத் சிங்முதன் முறையாக பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் .

பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ்   இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ,பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் 'இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மலிகா எல் கராக்சியை எதிர்கொண்டார். முதல் செட் 11-8, 2 வது செட் 11-7, மூன்றாவது செட் 11-9,  என போட்டியின் முடிவில் அனாஹத் சிங், 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 17 வயது வீராங்கனை அனாஹத் சிங், பிரிட்டிஷ் ஓபன் தொடரின் 19 வயது பிரிவில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார். 

Jan 07, 2026

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில், தமிழக டிராகன்ஸ் ஆண்கள் அணி , பெண்கள் பெங்கால் டைகர்ஸ், அணிகள்வெற்றி.

 7வது சீசன் சென்னையில் ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழக டிராகன்ஸ் அணி, சூர்மா அணியை சந்தித்தது., முதல் பாதியில் 2-0 , முடிவில் தமிழக டிரா கன்ஸ் அணி 3-2 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. பெண்களுக்கான, நேற்று நடந்த லீக் போட்டி ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில், பெங்கால் டைகர்ஸ், எஸ்.ஜி., பைபர்ஸ் அணிகள் மோதின. இப் போட்டி கோல்எதுவுமின்றி (0-0) சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்' முடிவில் ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. அடுத்து 'ஷூட் ஆப்' நடந்தது. 7-6 என்ற கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 

Jan 07, 2026

விளையாட்டு போட்டிகள், JANUARY 7th 2026

 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ,முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஜன. 18ல் மெல்போர்னில் துவங்குகிறது. ஒற்றையரில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.25.22 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.ஜன. 9ல் பெண்கள்பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது.டில்லி அணி கேப்டன் ஜெமிமா25, கூறுகை யில், ''அணிக்கு தலைமை ஏற்பது, சிறப்பாக செயல்பட,. ஏற்கனவே மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம், கைகொடுக்கும்," என்றார். சர்வதேச 'டி-20' தரவரிசை பட்டியலில் பெண்களுக்கான ,இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 2 இடம் முன்னேறி, 13வது இடம் ,பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி, 2வது இடம் பிடித்தனர்.

Jan 06, 2026

ஸ்ரீஜனி டேபிள் டென்னிஸ் சாம்பியன்

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'யூத் கன்டெண்டர் சீரிஸ்' குஜராத்தின் வதோதராவில்,  17 வயது பிரிவில் ரூபம், சின்ட்ரல்லா, 15 வயது பிரிவில் ஆதித்யா,13வயது பிரிவில் பிரனவ், திவிஜா என இந்திய நட்சத்திரங்கள் வென்றனர். இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் மிகு மட்சுஷிமா ,நேற்று 19 வயது பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனலில் மோதினர்.. முடிவில் திவ்யான்ஷி, 2-3 என்ற செட்கணக்கில் போராடி தோல்வியடைந்தார். 2-3இந்தியாவின் ஸ்ரீஜனி, தனிஷ்கா 15 வயது பிரிவு பெண்கள் பைனலில் மோதி,. இதில் ஸ்ரீஜனி 3-2 (8-11, 11-8, 7-11, 11-7, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்..இந்திய வீரர்கள் பிரியானுஜ், சர்தாக் ஆர்யா  ஆண்கள் ஒற்றையர் (19 வயது) பிரிவு பைனலில் மோதினர். இதில் பிரியானுஜ் 3-0 என்ற (12-10, 11-8, 14-12) நேர் செட்டில் வென்று, சாம்பியன் ஆனார். 

Jan 06, 2026

இந்தியா லீக் 7வது சீசன் சென்னையில் ஆண்களுக்கானஹாக்கியில் எச்.ஐ.எல்., அணி 3-2 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது.

பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் ஜார்க்கண்ட் தலைநகர்  ராஞ்சியில்,.நேற்று ஹரியானாவின் சூர்மா, ராஞ்சி ராய்ல்ஸ் அணிகள் மோதின. இதில் சூர்மா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சூர்மா அணிக்கு பென்னி (1 வது நிமிடம்), ஒலிவியா (39) தலா ஒரு கோல் அடித்தனர்.  இந்தியா லீக் 7வது சீசன் சென்னையில் ஆண்களுக்கான ஹாக்கியில் ,மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் டில்லி, எச்.ஐ.எல்., கவர்னரிங் கவுன்சில் அணிகள் மோதின. எச்.ஐ.எல்., அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

1 2 ... 65 66 67 68 69 70 71 ... 170 171

AD's



More News