மூன்று, ஒரு நாள் மற்றும்ஐந்து 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ,இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் இந்தியா-நியூசிலாந்துஅணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் நடக்க உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு கமிட்டி, . ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை இன்று தேர்வு செய்து அறிவிக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் கவுதம் கம்பீர், தலைமை பயிற்சியாளர் ,காணொலி மூலம் பங்கேற்கிறார் .
ஆண்களுக்கான ஹாக்கி இந் தியாலீக்போட்டியை ,ஐ.பி.எல். கிரிக்கெட்பாணியில் ஹாக்கி இந்தியா அமைப்பு, 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. 2017- ஆண்டு வரைதொடர்ச்சியாக 5சீசன் நடை பெற்றது. பல் வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்த ஹாக்கி தொடர் 8 ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. அதில் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.7-வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சென்னை ராஞ்சி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில்நடத்தப்படுகிறது.இன்றுமுதல் 9ந்தேதிவரைசென்னைஎழும்பூரில்உள்ளமேயர்ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ,முதற்கட்ட ஆட்டங்கள் நடக்கிறது.
குளிர்கால ஒலிம்பிக் ,பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் சங்கமிக்கும் (இத்தாலி, பிப்.6-22), காமன்வெல்த் விளையாட்டு (ஸ்காட்லாந்தில் ஜூலை 23-ஆகஸ்டு2), 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் (ஜப்பானில் செப்.19 முதல் அக்.4 வரை) ஆகிய போட்டிகளையும் 2026-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், பார்முலா 1 கார்பந்தயம், டூர் டி பிரான்ஸ் சைக்கிளிங் போன்ற வழக்கமான பந்தயங்களும் பார்வையாளர்களை கவரும் போட்டிகளாகஇருக்கும்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடக்கிறது. இடம் மற்றும் தேதி இன்னும் முடிவாகவில்லை.. 8 வீரர்கள் இடையிலான கேண்டிடேட் செஸ் போட்டி மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை சைப்ரசில் நடக்கிறது.
16 அணிகள் பங்கேற்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து 16-வது ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்டு 14-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது.இந்திய அணி 1975-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போராடும் ,51 ஆண்டு கால ஏக்கத்தை தணிக்குமா என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. அதே நாளில் அங்கேயே பெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியும் நடத்தப்படுகிறது.
.பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்கஉள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணி சூர்ய குமார் யாதவ் தலைமையில் களம் காணுகிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு ,எந்த 20 ஓவர் தொடரையும் இழக்காமல் இந்திய அணி முதல் முறையாக உள்ளூர் சூழலில், முழுவீச்சில் ஆயத்தமாகிறது.ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை பெண்களுக்காக இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி அதே உத்வேகத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையையும் வெல்ல ஆர்வம் காட்டுகிறது.
விளையாட்டு ரசிகர்களுக்கு புதிதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பெரும் விருந்து படைக்கும் ஆண்டாக அமையப்போகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நிறைய முக்கியமான போட்டிகள் அரங்கேறப் போகின்றன.
உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில், முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன. இந்தியாவின் அர்ஜுன் 22, பெண்கள் பிரிவில் இந்தி யாவின் கொனேரு ஹம்பி 38, இதன் ஓபன் பிரிவில் ,வெண்கலம்கைப்பற் றினர்.அடுத்து, 'பிளிட்ஸ்' முறையில் (அதிவேகம்) ,மொத்தம் 19 சுற்று போட்டிகள் நடந்தன. இந்தி யாவின் அர்ஜுன், 15.0 புள்ளியுடன் முதலிடம்பிடித்தார். அமெரிக்காவின் பேபியானோ (14.0), ஐந்து முறை உலக சாம்பி யன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (13.5), உஸ் பெகிஸ்தானின் நாடிர்பெக் (13.0) அடுத்த 3 இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.ஆனந்த், வைஷாலிக்குப் பின் உலக 'பிளிட்ஸ்' தொடரில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் அர்ஜுன். .உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' என ஒரு தொட ரின், இரு பிரிவிலும் பதக்கம் வென்றஆனந்துக்குப் பின், அர்ஜுன் 2வது இந்திய வீரர் ஆனார் அர்ஜுன்.
துவக்க வீரர் அபிஷேக் சர்மா 25. ரோகித் சர்மா ஓய்வுக்குப் பின், இந்திய 'டி-20' அணியின் 'டி-20' அரங்கில் ரன் குவித்து வருகிறார்.சர்வதேச பேட்டர் தரவரிசையில் 908 புள்ளியுடன் உலகின் 'நம்பர்-1 வீரராக திகழ்கிறார். இந்தியா, பஞ்சாப், ஐதராபாத் (பிரிமியர் தொடர்) அணிகளுக்காக ரன் மழை பொழிகிறார். 2025ம் ஆண்டில் இவர் மொத்தம் 1602 ரன் எடுத்துள்ளார். உள்ளூர், சர்வதேச 'டி-20'ல் ஒரு ஆண்டில் குறைந்தது,1000 ரன் எடுத்த வீரர்களில், 200க்கும் மேல் என பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ள முதல் வீரர் என சாதனை படைத்தார் அபிஷேக். கடந்த ஆண்டு விளையாடிய அனைத்து போட்டியிலும் இவரது பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' 202.01 ஆக உள்ளது.
இந்தியாவின் ஆமதாபாத்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இந்தியாவின்ஆமதாபாத்தில் ,ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி sowdhri, சக வீராங்கனை பிரதியூஷாவை எதிர் கொண்டு ,முதல் செட் 6-4 , அடுத்த செட்டை 6-1 என வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் செய்லி, சந்தீப்தி, பூஜா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.இந்தியாவின் சோஹா, தம்ஹன்கர், தேபாஸ், அரோரா (அமெ ரிக்கா) ஜோடி, பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.