25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Dec 29, 2025

கர்நாடக வீராங்கனை திலோத்தமா தேசிய துப்பாக்கிசுடுதலில்மொத்தம் 466.9 புள்ளி எடுத்து தங்கம் வென்றார்!

 மத்திய பிரதேசத்தின் போபாலில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டி நடந்தது. கர்நாடக வீராங்கனை திலோத்தமா, 591 புள்ளியுடன்  தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து, பைனலுக்குள் நுழைந்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட திலோத்தமா 17, மொத்தம் 466.9 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கேரளாவின் விதர்சா, (462.9), ரயில்வேயின் அயோனிகா (451.8) அடுத்த இரு இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

Dec 29, 2025

நான்காவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள்  அணி வெற்றி.

இந்திய பெண்கள் அணி  நான்காவது 'டி-20' போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில்இலங்கையை வென்றது. ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா அரை சதம் கடந்தனர்.ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொட ரில் ,முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா,3-0 , நேற்று, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடந்த , நான்காவது  போட்டியில் இந்திய அணி 20 ஓவரில்  2 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்தது,இலங்கை அணி,  20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருதை ஸ்மிருதி வென்றார். ஐந்தாவது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது. 

Dec 29, 2025

ஐ.டி.எப்., டென்னிஸ் வைதேகி சவுத்ரி 'சாம்பியன்' .

' .பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர், மகாராஷ்டிராவின் சோலாபுர் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் வைதேகி சவுத்ரி 25, ஜப்பானின் மிச்சிகா ஒஜெகி மோதினர். முடிவில் வைதேகி 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். 4வது ஐ.டி. எப்., ஒற்றையர் பட்டம் வைதேகி கைப்பற்றினார். இந்தியாவின் அன்கிதா ரெய்னா, வைஷ்ணவி அத்கர் ஜோடி இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Dec 29, 2025

'ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆப் பேம்' பட்டியலில் பிரட் லீ..

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' பிரட் லீ, 49. இரு முறை மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பந்துவீசினார். 2003, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் 22 விக்கெட் வீழ்த்தி, ஆஸ்தி ரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். 13 ஆண்டு (1999– 2012) ஆதிக்கம் செலுத்திய இவர், ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக உள்ளார். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, வாழ்நாள் சாதனையாளருக்கான 'ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆப் பேம்' பட்டியலில் நேற்று சேர்க்கப்பட்டார். 

Dec 27, 2025

ஐ.டி.எப்., டென்னிஸ் பெண்களுக்கான தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்ரீவள்ளி ராஷ்மிகா.

ஐ.டி.எப்., டென்னிஸ் பெண்களுக்கான தொடர் இந்தியாவின்மகாராஷ்டிராவில் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி மோதினர். முதல் செட்டை ராஷ்மிகா 6-2 என வென்றார். 2 வதுசெட்டை மாயா 7-5 என கைப்பற்றினார்.மூன்றாவது செட்டை ராஷ்மிகா 6-1 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 

Dec 27, 2025

'டி-20' தொடரை இந்திய பெண்கள் அணி, மூன்றாவது போட்டியில்  வென்றது.

ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில்  பங்கேற்கஇந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. நேற்று திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் ,மூன்றாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மீண்டும் பீல்டிங் தேர்வு செய்தார்.  இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 117 ரன்,. இந்தியஅணி 13.2 ஓவரில் 115/2 ரன் எடுத்து  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  நாளை நான்காவது போட்டி  திருவனந்தபுரத்தில் நடக்கிறது. 

Dec 27, 2025

உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன் ஷிப் தொடர்திவ்யா,அர்ஜுன், வைஷாலி வெற்றி.

உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' சாம்பியன் ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று துவங்கி,.முதலில் 'ரேபிட்' சுற்றுக்கான போட்டிகள் நடக்கின்றன. ஓபன் பிரிவில் இந்தியா சார்பில் அர்ஜுன், பிரக்ஞானந்தா, அபிமன்யு, இனியன், பிரனேஷ், ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உட்பட, மொத்தம் 247 பேர் பங்கேற்றுள்ளனர்.முதல் போட்டியில் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் மக்சிமை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா, 52 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன், பிரான்சின் மார்கோ மடேரியாவை சந்தித்து 53 நகர்த்தலில் வென்றார். கனடாவில் ரோட்ரிகு ,உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ்,  மோதிய போட்டி 'டிரா' ஆனது.  3 வெற்றி பெற்ற அர்ஜுன் (3.0), கார்ல்சன் (3.0) முதல் 3 சுற்று முடிவில் முதலிடத்தில் இருந்தனர். இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, சாவித்ரி உட்பட  141 பேர் பெண்கள் பிரிவில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் வைஷாலி, ரஷ்யாவின் அலியாக்சாண்ட்ராவை 43 வது நகர்த்தலில் வென்றார். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, சீனாவின் குயான்யுனை வென்றார்.

Dec 27, 2025

'பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருதுஇளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.

 பீஹாரை சேர்ந்த  இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 14. இவர்,  மின்னல் வேகத்தில் ரன் சேர்த்து, சதங்களாக விளாசுகிறார். இந்த ஆண்டு பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 35 பந்தில் சதம் எடுத்தார்.ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் (4 நாள்) 58 பந்தில் சதம் அடித்தார். ஆசிய கோப்பை கத்தாரில் நடந்த 'ரைசிங் ஸ்டார்' " தொடரில் இந்திய 'ஏ' அணிக்காக 42 பந்தில் 144 ரன் எடுத்தார். சையது முஷ்டாக் அலி உள்ளூர் 'டி-20' தொடரில் 61 பந்தில் 108 ரன் எடுத்தார். 84 பந்தில் 190 ரன் விளாசினார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இளம்நட்சத்திரங்களுக்கான ((5-18 வயது ) 'பிரதமரின் பால புரஸ்கார் விருதுக்கு' தேர்வு செய்யப் பட்டார்.இவ் விருது கலை, கலாசாரம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப் படுகிறது.டில்லியில் நேற்று நடந்த விழாவில் ஜனாதி பதி திரவுபதி முர்மு, விருதினை சூர்யவன்ஷிக்கு வழங்கினார். 

Dec 26, 2025

2026 முதல் 2029 வரையில், பி.டபிள்யு. எப்., தலைவராக பாட்மின்டன் கமிஷனில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து தேர்வு.

பாட்மின்டன் நட்சத்திரங்களின் நலன்கள், சர்வ தேச போட்டிகளில் நடக்கும் விஷயங்கள், போட்டி குறித்த விதிகள் குறித்து, பி.டபிள்யு.எப்., கவுன்சி லுக்கு இவர்கள் ஆலோசனை வழங்க தற்போது 2026 முதல் 2029 வரையில், பி.டபிள்யு. எப்., இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் டேபோரா ஜில்லி, சிந்துவுக்கு துணை தலைவராக செயல்படுவார், ," சக விளையாட்டு நட்சத்திரங்களால்  இந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது பெருமை. இதை பணிவு, நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நன்றாக செயல்பட முயற்சிப்பேன்," என்றார்.

Dec 26, 2025

87வது சீசன்சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் ஷ்ருதி, தான்வி வெற்றி .

 சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் 87வது சீசன் ஆந்திர மாநிலம் விஜய வாடாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஷ்ருதி 21-14, 21-19 என ஜியா ராவத்தை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் தான்வி பத்ரி 22-20, 21-19 என, இஷாராணியை தோற்கடித்தார்.  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வீராங்கனை பருல் சவுத்ரி, முன்னேறினார்.   ஆர்யமான் டான்டன் 17-21, 21-11, 21-14 என ரகுவைஆண்கள் ஒற்றையரில் வீழ்த்தினார். போட்டியில் மற்றொரு அபினவ்  கார்க் 21-19, 21-16 , அபினவ் தாகூரை வென்றார். ரித்விக் சஞ் ஜீவி 21-15, 21-19 என ஒரிஜித் சாலிஹாவை தோற்கடித்தார். கலப்பு இரட் டையர் பிரிவு போட்டியில் நிதின் குமார், கனிகா ஜோடி  23-21, 21-15 என கெவின் வோங், பிரனவி ஜோடியைவென்றனர். 

1 2 ... 69 70 71 72 73 74 75 ... 170 171

AD's



More News