. ஈட்டி எறிதல் இந்தியாவின் வீரர் நீரஜ் சோப்ரா, 27.கடந்த 2021ல் டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த ஆண்டு தோஹா டைமண்ட் லீக் தொடரில், தனது கனவு இலக்கான 90.23 மீ., துாரம் ஈட்டி எறிந்துசாதித்தார். இவருக்கு ராணுவத்தில் 'லெப்டினன்ட் கவுரவ கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுர விக்கப்பட்டது. உலகதடகளசாம்பியன் ஷிப்பிலும் பதக்கங்கள் வென்றார். தனது மனைவி ஹிமானி மோர் உடன், நேற்று நீரஜ் சோப்ரா பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள அவரது அதிகாரப் பூர்வ இல்லமான 'லோக் கல்யாண் மார்க்'கில் சந்தித்தார்.இது பற்றி பிரதமர் மோடி சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட செய்தியில், “நீரஜ் சோப்ரா, அவரது மனைவியை சந்தித்தேன். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி சிறப்பாக கலந்துரையாடினோம்,' என தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் விளையாட்டுத் துறை மீதான அவரது தொலைநோக்குப் பார்வையும் ஆதரவும்இந்தியர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும்,' என குறிப்பிட்டுள்ளார். நீரஜ் சோப்ரா வெளியிட்ட செய்தியில், 'எங்களை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்
சர்வதேச கூட்டமைப்பு ,சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, வெளியிட்டது. உலக கால்பந்து ('பிபா') இதில் இந்திய அணி (1079.52) 142வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியஅணி, இந்த ஆண்டு விளையாடி (2'டிரா', 3 தோல்வி)ஒரு போட்டியில் கூட வெற்றி பெற வில்லை. இதனால் கடந்த நவம்பரில் வெளி யான தரவரிசையில் 6 இடம் பின்தள்ளப்பட்டு, 142வது இடம் பிடித்தது. தற்போது இதே இடத்தில் நீடிக்கிறது.
குளோபல் செஸ் லீக் தொடரின் 3வது சீசன் இந்தியாவின் மும்பையில் மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.3, 4வது இடம் பிடிக்கும் அணிகள், 3வது இடத்திற்கான போட்டியில் பங்கேற்கும்.இந்தியாவின் ஆனந்த், , உலக கோப்பை வென்றஉஸ்பெகிஸ்தானின் சிந்தரோவ், ஜெர்மனியின் வின்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்ற கேங்கஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் அணி, அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணியை சந்தித்தது.ஹிகாரு (அமெரிக்கா நகமுராவை ) ஆனந்த், எதிர்கொண்டார். ஆனந்த் போட்டியின் 41வது நகர்த் தலில் 'டிரா' செய்தார். கேங்கஸ் வீரர் ரவுனக் சாத்வானி (இந்தியா), முர்ஜினை வீழ்த்தினார். முடிவில் கேங்கஸ் அணி 12.0-3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.போட்டி முடிவில் வேணி (24 புள்ளி), திரி கேங்கஸ் (15), ஆல்பைன்பைப்பர்ஸ் (15), மும்பை (12) அணிகள் 'டாப்-4' இடத்தில் உள்ளன. இன்று கடைசி நாளில் பைனலில் வெற்றி அணி, கோப்பை வெல்லலாம்.
ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர் தலைமையில் 2023-ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்திய அணி, தொடர்ந்து 10 வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவிடம் ஆமதாபாத்தில் நடந்த பைனலில் தோற்று, கோப்பையை கோட்டை விட்டது. இதிலிருந்து மீண்ட இவர், 2024-ல் 'டி-20' உலக கோப்பை, 2025-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார். கடந்த 2022ல் கேப்டன் பதவியை ஏற்ற போது, உலகக்கோப்பை வெல்வதே இலக்காக இருந்தது.. தோல்வி பாடமாக அமைந்து. 'டி-20' உலகக்கோப்பை (2024) தொடரில் முழுகவனம் செலுத்தி சாதித்தேன். 'விமானத்தைவிரைவாக தரையிறக்க விரும்பவில்லை. தொடர்ந்து உயரே பறக்க விரும்புகிறேன்," என ஓய்வு குறித்து ரோகித் சர்மா தெரிவித்தார்.
முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு ,இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 121 ரன்னில்கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக் கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஸ்மிர்தி மந்தனா 25 ரன்னிலும்,9 ரன்னிலும், ஷைபாலி வர்மா கேட்ச் ஆனார்கள். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ரன்களுடனும் (44பந்து, 10 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகி விருதை ஜெமிமா பெற்றார்.
.மும்பையில், 'வெஸ்' டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் 80வது சீசன் மும்பையில் ,பெண்களுக்கான பைனலில் ஜோஷ்னாசின்னப்பா, சானியா வாட்ஸ் மோதினர். அபாரமாக ஆடிய ஜோஷ்னா3-1 (7-11, 11-8, 11-8, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் ஆண்களுக்கானபைனலில் மோதினர். இதில் சோட்ரானி 3-0 (11–9, 11-9, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக சாம்பியன் ஆனார்..
'கோல்கட்டாவில், 'வேர்ல்டு 25கே'ஓட்டப் பந்தயத்தின் (25 கி.மீ.,) 10வது சீசன் 'கோல்கட்டாவில் ,இந்திய வீரர்கள் பிரிவில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம்,12 நிமிடம்,06 வினாடியில் கடந்த குல் வீர் சிங், தனது சொந்த சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார்.. சீமா இந்திய வீராங்கனைகள் பிரிவில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 26 நிமிடம், 04 வினாடியில் கடந்து, புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லியில் இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக ,பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டார். மெஸ்சிக்குஇந்திய பயணத்துக்காகரூ.89கோடிவழங்கப்பட்டது.ரூ.11 கோடி அரசுக்குவரியாகசெலுத்தப்பட்டது. ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் கட்டணம் மூலம் கணிசமான தொகை வசூலிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள, எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று, அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டி தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் (தமிழ்நாடு) 25-19, 25-6, 25-21 என்ற நேர் செட்டில் ஸ்வர்னிம் குஜராத் பல்கலைக் கழகத்தை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கே.ஐ.ஐ.டி. (ஒடிசா) அணி 25-10, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகத்தை (அரியானா)வென்றது. அதாமஸ் பல்கலைக்கழகம் மேற்கு வங்காளம்) 25-22, 25-21, 21-25, 25-19 என்ற செட் கணக்கில் சண்டிகார் பல்கலைக் கழகத்தை வெற்றி பெற்றது.
மாநிலஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்போட்டி தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டிசார்பில் கோவை துடியலூரில் உள்ள எஸ்.என்.எஸ். அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளியில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளில் சிறுமிகளுக்கும், 2-வது நாளில் சிறுவர்களுக்கும் போட்டி நடத்தப்படும். தமிழ் நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டி தலைவர் சுப்பையா தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் இதன்அடிப்படையில் ஒடிசாவில் ஜனவரி 5 முதல் 10-ந்தேதி வரை 33-வது தேசிய ஜூனியர் வாள்வீச்சு போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.