25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

May 15, 2025

கிரிக்கெட் ஐந்து 'டி-20', மூன்று ஒருநாள் போட்டி. இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி.

ஐந்து 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி.முதல் 'டி-20' போட்டி ஜூன் 28ல் நாட்டிங்காமில் நடக் கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்டோல் (ஜூலை 1), லண்டன் (ஜூலை 4), மான்செஸ் டர் (ஜூலை 9), பர்மிங்காமில் (ஜூலை 12) நடக்கவுள்ளன. மூன்று ஒருநாள் போட்டிகள் சவுத் தாம்ப்டன் (ஜூலை 16), லண்டன் (ஜூலை 19), செஸ்டர்-லி-ஸ்டிரீட்டில் (ஜூலை 22) நடக்கின்றன.இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒருநாள்,  டி-20' அணிகளுக்கு கேப்டனாக ஹர்மன்பிரீத்கவுர், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின்றனர். 

May 15, 2025

. இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் , ஸ்ரீஹரி .

ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் ஐக்கிய அரபு எமிரேட் சில் (யு.ஏ.இ.,). 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன், ஸ்ரீஹரி இதில் மோதினர். கல்லுாரி மாணவரான ஸ்ரீஹரி 19, தோற்ற போதும் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்துக்கு தேவையான புள்ளியை பெற்றார். இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.   

May 14, 2025

இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னலாக' நியமிக்கப்பட்டார்.

 இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னலாக' நியமிக்கப்பட்டார். 2021ல் டோக் கியோவில், ஒலிம்பிக் தடக ளத்தில் ,இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26. தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் (2023, புடாபெஸ்ட்) தங்கம் கைப் பற்றினார்.பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந் தியாவில் ஒலிம்பிக் தட களத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார். தற்போது ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னல் ' ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, கடந்த ஏப்ரல் 16 முதல் ,மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வார இதழில் வெளியிடப்பட்டது

May 14, 2025

'  “கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் 200 மீ., ஓட்ட ம்.

“கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் பீஹாரில்,  நேற்று, நடந்த 200 மீ., ஓட்டத்தில் மஹாராஷ் டிராவின் பூமிகா (24.51 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். ஹரியானாவின் பிரியா (24.62), ஆர்த்தி (24.94) அடுத்த இரு இடம் பிடித்து வெள்ளி, வெண்கலம் வென்றனர்.ஒட்டுமொத்தமாக 56 தங்கம், 45 வெள்ளி, 48 வெண்கலம் என 149 பதக்கம் வென்ற மஹா ராஷ்டிரா, சாம்பியன் பட் டத்தை தட்டிச் சென்றது.ஹரியானா 106 (35 தங்கம், 26 வெள்ளி, 45 வெண்கலம்), ராஜஸ்தான் 55 பதக்கத்துடன் (22, 11, 22) அடுத்த இரு இடம் பிடித்தன.15 தங்கம், 20 வெள்ளி, 28 வெண்கலம் என 63 பதக்கம் வென்ற தமிழகம், பட்டியலில்  ஐந்தாவது இடம் பிடித்தது.  

May 14, 2025

ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர்

தாய்லாந்து ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் பாங்காக்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நுயென் மோதினர். இதில் லக்சயா சென் F 18-21, 21-9, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 13-21, 21-17, 16-21 என இந்தோனேஷியாவின்ஆல்வி பர்ஹானிடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், துருக்கியின் நெஸ்லிஹான் அரின் மோதினர். மாளவிகா 21-12, 13-21, 21-17 கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என ஜப்பா னின் சுகியமாவை தோற் கடித்தார். இந்தியாவின் உன்னதி ஹூடா 21-14, 18-21, 23-21 என தாய்லாந்தின் தமோன்வானை வென்றார்.இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 18-21, 7-21 என சிங்கப்பூரின் யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த்  ஜோடி 21-15, 21-13 என மலேசியாவின் கார் மென் டிங், ஆங் ஜின் யீ ஜோடியை வென்றது. 

May 13, 2025

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன்

 19 வயதுக்குட்பட் டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன்  அருணாச்சல பிரதேசத்தில், இந்தியா, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.   பி பிரிவில்இடம் பெற்றுள்ள இந்தியா, நேபாளஅணிகள் நேற்று மோதின. போட்டியின் 28 வது நிமிடத்தில் நேபாள வீரர் தலையில் பட்டு வந்த பந்தை லாவகமாக கொண்டு சென்று, கோலாக மாற்றினார் இந்தியாவின் ரோஹன் சிங். இம்முறை சக வீரர் டேனி மெய்டெய் அடித்த பந்தை பெற்ற ஓமங் டோடம், கோல் அடித்தார். முதல் பாதியில்  இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் ரோஹன் சிங்(75வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்தார்.முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 2 போட்டியிலும் வென்று, 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் மாலத்தீவு அணியை (மே 16) சந்திக்க உள்ளது. 

May 13, 2025

13th MAY விளையாட்டு போட்டிகள் .

ஹாக்கிசிலியில் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் (டிச. 1-13) நடக்க உள்ளது.  இந்திய அணி 6 நட்பு போட்டியில் அர்ஜென்டினா சென், பங்கேற்க உள்ளது. செஸ்ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான பிரிவு 6வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா வெற்றி பெற்றார். 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். பாட்மின்டன்  படும் வனில் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர். நேற்று இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் முதல் தகு திச்சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரர் சங்கர் முத்துசாமியை 21-15, 21-17 என வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன் னேபள்ளி, சீன தைபே வீரர் குவான் லினை 17-21, 21-19, 21-17 என போராடி வென்றார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகு திச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியா வின் இரா சர்மா, தமன் வானிடம் 12-21, 18-21 என தோல்வியடைந்தார். 

May 12, 2025

மீண்டும் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி. சி.சி.ஐ.,) முடிவு செய்துள் ளது.

பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியா, பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது போர் முடிவுக்கு வந்திருப்பதால், மீண்டும் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி. சி.சி.ஐ.,) முடிவு செய்துள் ளது. நேற்று, புதிய அட்ட வணையை வெளியானது.மீதமுள்ள 17 போட்டிகள், பெங்களூரு, ஜெய்ப் பூர், டில்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் என 6 இடங்களில் நடக்கவுள்ளன. வரும் மே 17ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் பாதியில் கைவிடப்பட்ட பஞ்சாப், டில்லி அணிகளுக்கு இடையிலான போட்டி, மே 24ல் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளது.தகுதிச் சுற்று-1, 'எலிமி னேட்டர்', தகுதிச் சுற்று-2 போட்டிகள் முறையே மே 29, 30, ஜூன் 1ல் நடக்கும். பைனல், ஜூன் 3ல் நடக்கவுள்ளது. இந்த நான்கு போட்டிகளுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். 

May 12, 2025

விராத் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .

 களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும்  இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார்.வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.  டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் பட்டியலில் கோலி முதலிடம். இதுவரை 68 டெஸ்டில், 5864 ரன் (20 சதம், 18 அரைசதம்) குவித்துள்ளார்.  இந்திய கேப்டன் பட்டியலில் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்றுத் தந்த  விராத் கோலி முதலிடம். இவரது தலைமையிலான இந்திய அணி, 68 டெஸ்டில், 40 வெற்றி (58.82% வெற்றி சதவீதம்), 11 'டிரா', 17 தோல்வியை பதிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தோனி (27 வெற்றி, 60 டெஸ்ட்), கங்குலி (21 வெற்றி, 49 டெஸ்ட்) உள்ளனர். * கோலி தலைமையில் இந்திய அணி, 43 மாதம் (2016 அக்., -2020 மே) டெஸ்ட் அணி தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் இருந்தது

May 12, 2025

பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர்

பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர், சர்வதேச செஸ் கூட் டமைப்பு சார்பில் 6 கட்டமாக நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 'டாப்-2 இடம் பெறுபவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம். இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியா வில் நடக்கிறது.இதன் 6வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, ஆஸ்திரியாவின் ஆல்கா படேல்கா மோதினர். இதன் 39 வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார். ஆறு சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (4.5) முதலிடத்தில் உள்ளார். சீனாவின் ஜு ஜினெர் (4.0), இந்திய வீராங்கனை வைஷாலி (4.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்

1 2 ... 137 138 139 140 141 142 143 ... 170 171

AD's



More News