25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

May 06, 2025

6 TH MAY  IPL MATCH .GUJARAT - MUMBAI

MAY 6-ம் தேதி  அகமதாபாத்தில், குஜராத், மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 155/8, ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 147/7 ரன்கள்  எடுத்தது,  கடைசி ஓவரில் மழை காரணமாக  (DLS METHOD) செய்யப்பட்டு குஜராத் அணி 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHUBMAN GILL தேர்ந்தெடுக்கப்பட்டார். 

May 06, 2025

வில்வித்தை

 உலக கோப்பை வில்வித்தை 2 ஸ்டேஜ், சீனாவின் ஷாங்காய் நகரில் காம்பவுண்டு பிரிவில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, 714 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.ரிஷாப் யாதவ் (713), 4வது, ஓஜாஸ் பிரவின் (707), 10வது இடம் பெற்றனர். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 2134 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது.பெண்கள் தனிநபர்  பிரிவில் இந்தியாவின் மதுரா, 708 புள்ளியுடன் மூன்றாவது இடம்பிடித்தார்.மற்ற இந்திய வீராங்கனைகள் ஜோதி (705) 6, சிகிதா (701), 11, ஆதித்தி (699) 13வது இடம் பெற்றனர்.இந்திய பெண்கள் அணி 2114 புள்ளியுடன்  முதலிடம் பெற்றது. நேரடியாக காலிறுதியில் பங்கேற்க உள்ளது.ஒற்றையர் தகுதிச் சுற்றில் அபிஷேக் வர்மா, மதுரா ஜோடி கலப்பு அணிகள் பிரிவில் 1422 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. இரண்டாவது சுற்றில் நேரடியாக களமிறங்குகிறது .

May 06, 2025

'கேலோ இந் தியா யூத்' 7வது சீசன் விளையாட்டு போட்டிகள்.

'கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் பீஹாரில், நடக்கிறது. துப்பாக்கி சுடுதல், சைக்கிளிங் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.சைக்கிளிங் போட்டி.சைக்கிளிங் போட்டியில் ராஜஸ்தானின் ஹர்ஷித்தா, 500 மீ., டைம் டிரையல் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு  நேற்று தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் தபிதாவுக்கு வெண்கலம் கிடைத்தது.7.5 கி.மீ., ஸ்கிராச் ரேஸ் பிரிவில் ஹர்ஷித்தா, 11 நிமிடம், 50.973 வினாடி நேரத்தில் வந்து தங்கத்தை  வசப்படுத்தினார்.துப்பாக்கிசுடுதல்.துப்பாக்கிசுடுதல் போட்டியில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் மயங்க் சவுத்ரி தங்கம் கைப்பற்றினார்.நீச்சல் போட்டிகயாவில் நடந்த நீச்சல் போட்டியில் தெலுங்கானா வின் வர்ஷித் (400 மீ., தனி நபர் மெட்லே), சுஹாஸ் (100 மீ., பேக்ஸ்டிரோக்), ஸ்ரீ நித்யா (100 மீ., பேக்ஸ் டிரோக்) என மூவரும் தங்கம் கைப்பற்றினார்கள்.  ஜூடோ போட்டிஜூடோ போட்டியில் திவ்யா (44 கிலோ), குஷ்பு (57 கிலோ) குஜராத் அணிக்கு முதல் இரு தங்கம் வென்று தந்தனர்.நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் அணி, 6 தங்கம், 2 வெள்ளி என 8 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. : கர்நாடக அணி (5 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) இரண்டாவதாக உள்ளது. மஹாராஷ்டிரா (5 தங்கம். 6 வெள்ளி, 9 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் உள்ளது. டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 5 இடம் முன்னேறி, 33வது இடம் பிடித்துள்ளார். கடந்த வாரம் நடந்த மாட்ரிட் டென்னிசில் போபண்ணா ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற் றுக்கு தகுதி பெற்றதால், இந்த முன்னேற்றம் கிடைத்தது. டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.45 வயதான போபண்ணா, மீண்டும் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். 

May 05, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட்

மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் தொடர் பெங்களூருவில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் நான்கு போட்டியில் 'வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது.நேற்று, ஐந்தாவதுபோட்டியில் ,முதலில் 'பேட்' செய்த இந்திய அணி,20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. இலங்கை அணி 15 ஓவரில், 88 ரன்னுக்கு 103 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இலங்கை அணிக்கு கோப்பையுடன், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் நரேந்திர வென்றார். நாயகன் இந்தியாவின் மாங்கூர் தொடர் விருதை ரவிந்திர சான்டே கைப்பற்றினார். 

May 05, 2025

 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டுபோட்டிகள்  .

'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன்,பீஹாரில்,  துப்பாக்கி சுடுதல், சைக்கிள் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.துப்பாக்கி சுடுதல் .நேற்று, டில்லியில் நடந்த துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ.,'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் பிராச்சி, மயங்க் சவுத்ரி ஜோடி, உ.பி.,யின் தேவ் பிரதாப், உர்வா சவுத்ரி ஜோடியை சந்தித்தது. போட்டி 15,15 என 'டை' ஆனது. பின் 'ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, இம்முறை முதல் தங்கத்தை கைப்பற்றியது..மூன்றாவது இடத்துக்கான போட்டியில் டில்லியின் ஹர்திக் பன்சால், நியாமிகா ராணா ஜோடி 1614 என ஹரியானாவின் பிரதிக் ஷியோகன்ட், கனக் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.நீச்சல் போட்டி.நீச்சல் போட்டியில் கர்நாடகா நட்சத்திரங்கள்,. நேற்று வழங்கப்பட்ட 7 தங்கப்பதக்கத்தில்,4 தட்டிச் சென்றனர். மஹாராஷ்டிரா, கேரளா, அசாம் அணிகளுக்கு தலா ஒரு தங்கம் கிடைத்தன..ஆண்களுக்கான வில்வித்தைஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் தமிழகத்தின் ஸ்மரன் சர்வேஷ் 6,2 என, உ.பி.,யின் விஷுவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.  

May 04, 2025

'கேலோ இந்தியா யூத்' வாலிபால் விளையாட்டு.

'கேலோஇந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் நேற்றுபீஹாரில்,பெண்களுக்கான வாலிபால் 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க் கண்ட் அணிகள் மோதின. தமிழக அணி3-0 (25-13, 25-11,25-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 'ஏ' பிரிவு போட்டியில் மேற்கு  வங்க அணி3-0 (25-9, 25-7, 25-9) என பீஹாரை வென்றது.ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பின்தங்கி இருந்த ஜம்மு காஷ்மீர் அணி, பின் எழுச்சி கண்டு 3-2 (18-25, 25-20, 16-25, 27-25, 15-9)  உத்ரகாண்ட் அணியை வீழ்த்தியது. 'பி' பிரிவு போட்டியில் குஜராத் அணி 3-1 (25-12, 18-25, 25-18, 25-19) என கேரளாவை வென்றது

May 04, 2025

5TH MAY விளையாட்டு போட்டிகள் .

கபடி 'நடப்பு சாம்பியன்' ஆண்களுக்கான கபடி லீக் போட்டியில் ஹரியானா, கர்நாடகா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் 28-14 என முன்னி லையில் இருந்த ஹரியானா, ஆட்ட நேர முடிவில் 57-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.பெண்களுக்கான லீக் போட்kடியில் 'நடப்பு சாம்பியன்' ஹரியானா அணி 33-32 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.ஹாக்கி இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா சென்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று. முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி யிடம் தோல்வியடைந்த இந்தியா, 4வது போட்டியில் சீனியர் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. நேற்று, பெர்த்தில் நடந்த கடைசி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்தார்.. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.  

May 04, 2025

3RD MAY AND 4TH MAY IPL MATCH

3RD  MAY  IPL MATCH BANGALORE – CHENNAI  MAY 3-ம் தேதி பெங்களுரில், சென்னை, பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 213/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 211/5 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Romario Shepherd தேர்ந்தெடுக்கப்பட்டார்.4TH MAY IPL MATCH KOLKATTA - RAJASTHAN 4-ம் தேதி கொல்கத்தாவில், ராஜஸ்தான், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 206/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 205/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ANDRE RUSSELL தேர்ந்தெடுக்கப்பட்டார்.4-ம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 236/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னேர் அணி 199/7 ரன்கள் தோல்வியடைந்தது.. 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRABHSIMRAN SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.

May 04, 2025

“யூத் ஸ்டார் கன்டெண்டர்'டேபிள் டென்னிஸ் தொடரில் ,ஒரு தங்கம் ,3 வெள்ளி வென்ற இந்தியா.

“யூத் ஸ்டார் கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்தில்,19 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் அன்குர் பட்டாச் சார்ஜீ, அபினாத் பிரதாவதி ஜோடி, தென் கொரியாவின் லீ ஜங்மோக், சோய் ஜிவூக் ஜோடியை எதிர் கொண்டது. இந்திய ஜோடி 3-1 (11-7, 8-11, 11-8, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பட்டத்தை  வென்றது. (19 வயது) பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சின்ட் ரெலா தாஸ், திவ்யான்ஷி போவ்மிக் ஜோடி 1-3 (7-11, 15-13, 1-11, 10-12) என தாய்லாந்தின் விராகர்ன் தயாபிடக், பாட்சரபோன் வோங்லாகோன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. 15 வயதுக்குட்பட்ட பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ரியானா, அனன்யா த் ஜோடி வெள்ளி வென்றது. பெண்கள் ஒற்றையரில் (15 வயது ) இந்தியாவின் திவ்யான்ஷி போவ்மிக் வெள்ளி வென்றார்.

May 02, 2025

2ND MAY  IPL MATCH .GUJARAT - HYDERABAD.

  MAY 2-ம் தேதி  அகமதாபாத்தில், குஜராத், ஐதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 224/6, ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 186/6 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது,  38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRASIDH KRISHNA  தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

1 2 ... 139 140 141 142 143 144 145 ... 170 171

AD's



More News