25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆன்மீகம்

Jul 11, 2025

திருப்பதி ஏழுமலையானுக்கு உங்கள் திருமண பத்திரிக்கையை அனுப்பி ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம்!

திருப்பதி தேவஸ்தானம்திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க துவங்கும் முன், திருமணத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைத்து,ஏழுமலையானின் ஆசிர்வாதத்தை பெறும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.அப்படி பத்திரிக்கை அனுப்பும் பட்சத்தில் கோவிலில் இருந்து பிரசாதம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.அத்துடன் புதுமண தம்பதிகள், திருமணத்தின்போது கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.மேலும் திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் திருப்பதி கோயிலில் இருந்து பிரசாதம் கிடைத்த மாதிரியும் ஆகிவிடும். .திருமண பத்திரிக்கையை அனுப்ப வேண்டிய முகவரிToSri Lord Venkateswara swamy,The Executive OfficerTTD Administrative BuildingK.T.RoadTirupati – 517 501  Andhra Pradesh

Jul 11, 2025

விருதுநகர் மாவட்டம்  நடுச்சத்திரம் காசிவிஸ்வநாதர்.

விருதுநகர் மாவட்டம் நடுச்சத்திரம் கிராமத்தில் உள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம். இந்த ஆலயம், கோவில் அமைப்பில் பல அதிசயங்களையும் அற்பு தங்களையும் கொண்டது. இக்கோவிலின் இறைவன் ஸ்ரீகாசிவிஸ்வநாதர், இறைவி ஸ்ரீஅன்னபூரணி. இந்த ஊரில் உள்ள சிவபக் தர்கள் இந்த ஸ்ரீகாசிவிஸ்வ நாதர்-ஸ்ரீஅன்னபூரணி திருக்கோவிலை, 'இந்தியா வின் இரண்டாவது காசி' என்றே கொண்டாடுகிறார் கள்.சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் இது. தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வை யில் உள்ளது. இங்கு வற்றாத நூபுர கங்கை தீர்த்தக் கிணறு உள்ளது. இந்தக் கோவில், காசியில் இருந்து நேர்கோட்டில் அமையப்பெற்றிருப்பதாக சொல்கிறார் கள். தற்போது கோவில் அமைந்துள்ள இடம், அப்போது வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். கோவிலின் அருகிலேயே ஓர் அழகான நீர்நிலை உள்ளது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு,காசிக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தைகாசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்ற னர். இந்த வழியாகக் காசிக்குச் செல்பவர்கள் இந்த ஆலயத்தில் தங்கி, இங்குள்ள சிவபெருமானை தரிசித் துவிட்டுச் செல்வது வழக்கம். பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன் னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம் ஆலய நிர் வாகத்தை ஒப்படைத்தனர். அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இவர்கள் சில தலைமுறை களாக இந்தக் கோவிலைப் பாதுகாத்து வந்துள்ளனர். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக் காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற் றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் எலுமிச்சை மாலையை அன்னபூரணி அம்மனுக்குச் சூடி, சுவாமியை தரிசித்து விட்டுச் சென்றால், நல்ல வரன் அமையும். அதேபோன்று, ஆண்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்களுக்கு இங்கு வந்து, அன்ன பூரணி அன்னைக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை தோள்சேரும். குழந்தை வரம் இல்லாத வர்கள் இளநீர் வாங்கி வந்து, அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் அமையும் என் பது பக்தர்களின் நம்பிக்கை.

Jul 04, 2025

உப்பு லிங்கம்

காசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராம லிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர அபூர்வமான லிங்கம் ஒன்றுள்ளது. அதுதான் உப்பு லிங்கம்.ஒருமுறை பாஸ்கர ராயர் என்னும் மகான் தரிசனத்திற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது சிலர், "இந்தக் கோயிலில் மூலவராக உள்ள ராமலிங்கத்தை சீதாதேவி மணலில் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள். அப்படி இருந்தால் அபிஷேகத்தின் போது அந்த லிங்கம் கரைந்திருக்க வேண்டுமே" என வாதம் செய்தனர்.அவர்களின் சந்தேகம் தீர்ப்பதற்காக உப்பு வாங்கி வரச் செய்தார் பாஸ்கரராயர். அதில் சிவலிங்கம் ஒன்றைச் செய்துபிரதிஷ்டை செய்தார். அதற்கு அபிஷேகம் செய்தும் காண்பித்தார். அந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருந்தது. சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இன்று வரை அபிஷேகம் நடந்தும் கரையவில்லை.'அம்பிகையை வழிபடும் எளியவனான அடியேன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே கரையாத போது, கடவுளின் அவதாரமான ராமரின் மனைவி சீதை பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் அதிசயம் என்ன இருக்கிறது ?'எனக் கேட்டார். வலிமை மிக்க இதற்கு 'வஜ்ர லிங்கம்' என்றும் பெயருண்டு. இவரை தரிசித்தால் நோய் தீரும். மனம், உடல் பலம் பெறும்.ராமேஸ்வரம் சென்றால் உப்பு லிங்கத்தை தரிசிக்க மறவாதீர்.

Jun 27, 2025

விநாயக பெருமானின் அறுபடை வீடு

முருகப்பெருமானின் அறுபடை வீட்டை உலகமே அறியும். ஆனால் விநாயக பெருமானின் அறுபடை வீட்டை பற்றி சிலருக்கே தெரியும். 1. முதல் படைவீடு: அல்லல் போம் விநாயகர்.மக்களின் துன்பத்தை போக்கக்கூடிய விநயாக பெருமானாக எழுந்தருளியிருக்கிறார். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்குள்ளே தான் இருக்கிறார் இந்த அல்லல்போம் விநாயகர். ‘அல்லல்போம் வல்வினைப்போம்’ என்று ஔவையார் பாடியதை வைத்தே இந்த பிள்ளையாரின் சிறப்பை புரிந்துக்கொள்ள முடியும்.2.இரண்டாவது படைவீடு: ஆழத்து விநாயகர்.விருதாச்சலத்தில் எழுந்தருளி அருள்புரிகிறார் இந்த ஆழத்து விநாயகர். இவரே இரண்டாவது படை வீட்டிற்கு சொந்தக்காரர். ஆழத்து பிள்ளையார் 18 அடி ஆழத்தில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இவரை காண 18அடி ஆழம் இறங்கி செல்ல வேண்டும். விருதகிரீஸ்வரர் என்று சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலில் தான் இந்த விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கினால் ஞானத்தையும், செல்வத்தையும், கல்வியையும் சேர்த்து தருவார்.‘ஞானத்தையும் கல்வியையும் நயந்து தந்த ஆழத்து விநாயகர்’ என்ற பெயரோடு எழுந்தருளும் இந்த விநாயகர் இரண்டாவது படைவீடாகும்.3. மூன்றாவது படைவீடு: திருக்கடவூரில் இருக்கும் விநாயகர்.திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தான் இந்த பிள்ளையார் காட்சித்தருகிறார். இந்த விநாயகரின் பெயர் கல்ல வாரண விநாயகர். அமிர்த கலசம் கிடைத்தபோது அதை தேவர்களிடமிருந்து ஒளித்து வைத்து விளையாடி திருவிளையாடல் புரிந்ததால், இவருக்கு கல்ல வாரண விநாயகர் என்று பெயர் வந்தது. இவரை வணங்குவதால் ஆயுள் பலம் அதிகரிக்கிறது.4. நான்காவது படைவீடு: சித்தி விநாயகர்.மதுரை என்றாலே மீனாட்சியம்மன்தான். மதுரையில் அம்மன் சன்னதிக்குள் நுழையும் போதே வழியிலேயே காட்சித்தருகிறார் இந்த சித்தி விநாகர். நம் மனதில் நினைத்த எல்லா காரியங்களையும் அப்படியே நிறைவேற்றி கொடுக்கக்கூடியவர். மாணிக்கவாசகர் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சென்றார், அவ்வாறே நடந்தது. எனவே இந்த சித்தி விநாயகரை வணங்கினால் காரியங்களில் சித்தி கிடைக்கும்.5. ஐந்தாவது படைவீடு: துண்டிராஜா கணபதி, கற்பக விநாயகர்.காசி மாநகரில் அமைந்திருக்கும் தூண்டி ராஜா கணபதி. இவரை துண்டி மஹாராஜ், தீட்சா கணபதி என்றும் அழைக்கிறார்கள். காசியிலே எல்லா தெய்வங்களையும் வணங்க தொடங்கும் முன்பு இவரை வணங்க வேண்டும். இவரை வணங்கினால் ஞானம் கிடைக்கும். ஆனால் எல்லோராலும் காசி சென்றுவிட முடியாது என்ற காரணத்தினால் அதற்கு இணையான கோவிலாக பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கருதப்படுகிறது. எனவே ஐந்தாவது படைவீட்டில் இரண்டு கோவில்கள் உள்ளது, ஒன்று துண்டிராஜா கணபதி, இன்னொன்று கற்பகவிநாயகர்.கற்பகவிநாயகர் தன்னுடைய தந்தையான சிவபெருமானை வணங்கும் ரூபத்திலேயே எழுந்தருளி அருள்புரிகிறார். தந்தையை வழிப்படும் புதல்வன் என்னும் ஞானத்தை உலகிற்கு உணர்த்தும் ஞானகுருவாகவும் காட்சித்தருகிறார். எனவே கற்பக விநாயகரை வணங்கினால் நினைத்தது நடக்கும், ஞானமும் கிடைக்கும்.6. ஆறாவது படைவீடு: திருநாரையூர்.திருநாரையூரில் சௌந்தரேஸ்வரர் என்னும் ஆலயத்திலேயே ஆறாவது பிள்ளையாரான பொள்ளாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். பொள்ளாப் பிள்ளையார் என்றால் உளிக்கொண்டு செதுக்கப்படாதவர் என்று பொருள். இவர் சுயம்புவாக தோன்றிய பிள்ளையார் ஆவார். புதிதாக காரியம் செய்ய துவங்கும் முன் இந்த பொள்ளாப்பிள்ளையாரை வணங்கினால் அந்த காரியம் கைக்கூடும். நம்பியாண்டர் நம்பி மூலமாக ராஜ ராஜ சோழன் தேவாரம், திருவாசகம் அனைத்தையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற புது முயற்சியை மேற்க்கொண்டார். அதற்கு இந்த பொள்ளாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டே தொடங்கினார். அப்படிப்பட்ட புதிய முயற்சிக்கு வெற்றியை பெற்று தந்தவர் இந்த பிள்ளையார்.இப்படி ஆறுபடை வீடுகளிலும் ஆறு பலன்களை பக்தர்களுக்கு தந்து விநாயகர் எழுந்தருளி காட்சித்தருகிறார். எனவே விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று அவரை தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.

Jun 20, 2025

கொடி மரத்தின் சிறப்புகள்.

கொடிமரம் என்பது இந்து கோவில்களில் பலி  பீடத்துக்கு அருகே கொடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட மரமாகும். பல ஆலயங்களில் கொடி  மரமானது உள்ளது. சமஸ்கிருதத்தில் கொடிமரம், 'துவஜஸ்தம்பம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கொடிமரம்  மிகவும் புனிதமானது. இதன் சிறப்புகளைப் பற்றி காண லாம். ஆலயங்கள் ஆகம விதிப்படி கட்டப்படுகிறது. அதாவது ஒரு கோவிலை புனித உடலுடன் ஒப்பிடலாம். அதன்படி தலைப்பகு தியை கருவறையாகவும், மார்புப் பகுதியை மகா மண்டபமாகவும், வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்பிள் பகுதி கொடிமரமாகவும், கால் பகுதியை ராஜ கோபுரமாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆகம விதிப்படி கட்டப்படும் கோவில்களில் திருவிழா நடைபெறும் போது முதல் நாள் கொடியேற்றமானது நடை பெறும். தேவர்கள், இந்த கொடிமரத் தின் வழியாகத் தான் கோவிலுக்குள் வருவதாக கூறப்படுகிறது.கோவிலில் இறைவனை வணங்க முடியாவிட்டாலும் கொடிமரத்தையாவது வணங்குவது அவசியம். ஏனென் றால் கோவிலில் இறைவனை வணங்குவதும், கொடி மாத்தின் கீழே விழுந்து வணங்குவதும் ஒன் றாக கருதப்படுகிறது. கொடிம ரத்தை வணங்கும் போது மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி, தூய மனதுடன் வணங்க வேண்டும். இறைவனின் அருளைப்பெற, நம்மை தகுதிப்படுத்த கொடிமர வணக்கம் அவசியமாகும்.நம்முடைய ஆன்மா இறைவனை தஞ்சமடைய வேண்டுமானால், நமது மனம் ஒருநிலையுடன் நிறுத் தப்பட வேண்டும். இதை உணர்த் தவே கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். அசுர  சக்திகளை அழிக்கவும், சிவகணங் களை கோவிலுக்குள் வரவைக்க வும். ஆலயத்தையும் பக்தர்களையும்  காக்கவும் கொடி ஏற்றம்  நடத்தப்படுகிறது.கொடி மரத்தின் உச்சியில் அந் தந்த கோவில் இறைவனின் வாக னம் அடையாள சின்னமாக அமைக் கப்படும். அதன்படி, விநாயகர் கோவிலில் மூசிகம், சிவன் கோவி லில் நந்தி, விஷ்ணு கோவிலில் கரு டன், குபேரன் கோவிலில் நரன், முருகன் கோவிலில் மயில் அல்லது சேவல், சாஸ்தா கோவிலில் குதிரை, வருணன் கோவிலில் அன்னம், எமன் கோவிலில் எருமை, சனிபக வான் கோவிலில் காகம், இந்திரன் கோவிலில் யானை, துர்க்கை மற் றும் அம்மன் கோவில்களில் சிம்மம் என உருவங்கள் பொறித்த கொடி ஏற்றப்படும்.இவ்வாறு ஏற்றப்படும் கொடியானது திருவிழா இறுதி நாளில் இறக்கப்படும். பல்வேறு சிறப்புகளை உடைய கொடிமரத் துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆரா தனை, நைவேத்தியம் முதலான அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதி, அந்த அளவுக்கு கொடிமரம் மூலவருக்கு நிகராக கருதப்படுகிறது, கொடிமரத்துக்கு அருகில் நின்று நாம் வேண்டும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் சென்றடையும் என்பது நம்பிக்கை.

Jun 05, 2025

குபேரசிவன்

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கர்னாலி என்னும் இடத்திலுள்ள குன்றில் குபேர பந்தாரி கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமான் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர், அமாவாசை, திங்களன்று சுவாமியை தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.நர்மதை நதிக்கரையிலுள்ள வனப்பகுதியில் ஒருநாள்  சிவனும், பார்வதியும் நடந்து சென்றனர். களைப்பால் பார்வதிக்கு பசி, தாகம் ஏற்பட்டது. இப்பகுதியில் பாயும் நர்மதை நதியானது, சிவன், பார்வதிக்கு மகளாக கருதப்படுகிறது. "நர்மதா... உன் தாயார் பார்வதி பசி, தாகமுடன் இருக்கிறாள். அவளுக்கு உதவி செய்" என்றார் சிவன். ஊற்றாக கிளம்பிய நர்மதை, உணவும் நீரும் அளித்தாள்.சிறிது நேர ஓய்வுக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் ராவணனின் தம்பியான அரக்கன் குபேரன் எதிர்ப்பட்டான். பார்வதியின் அழகைக் கண்ட அவன் ஆசை கொண்டான். அதன் எதிரொலியாக பார்வையை இழந்தான். பின்னர் தவறை உணர்ந்து சரணடைந்தான்.மனமிறங்கிய பார்வதி பார்வையை வழங்கினாள். அவனை வடக்கு திசையின் காவலனாகவும், செல்வத்தின் அதிபதியாகவும் ஆக்கினார் சிவபெருமான்.குபேரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவரது திருநாமம் குபேர் பந்தாரி சலவைக் கல்லால் ஆன சுவாமி முறுக்கு மீசை,தலைப்பாகை, மிரட்டும் விழிகளுடன் இருக்கிறார். நர்மதை நதியை படகில் கடந்த பின்னர் கோயிலை அடையலாம்.மகாசிவராத்திரியின் போது பெருமளவில் பக்தர்கள் கூடுவர்.

May 30, 2025

நெல் கொள்முதல் செய்ய 13 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2024-2025 பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வதற்காக 13 கிராமங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலன்கருதி திறக்கப்படுகிறது.அதன்படிஇராஜபாளையமவட்டம்சேத்தூர்,தேவதானம்,முகவூர்,கோவிலூர்,மேலூர்துரைச்சாமியாபுரம்,அயன்கொல்லங்கொண்டான். ஜமீன்நல்லமங்களம், மேட்டுப்பட்டி வத்ராயிருப்பு வட்டம் கான்சாபுரம், தம்பிபட்டி, வத்ராயிருப்பு, சுந்தரபாண்டியம் மற்றும் காரியாபட்டி வட்டம் முஷ்டக்குறிச்சி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ECS மூலம் செலுத்தப்படும். எனவே விருதுநகர் மாவட்ட அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் செயல்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும், நெல் கொள்முதல் தொடர்பாக தேவையான விபரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக தொலைபேசி எண். 04562-252607-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 29, 2025

வேண்டிய வரம் தரும் வத்திராயிருப்பு  சேதுநாராயணப் பெருமாள்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு   நடு அக்ரஹாரம் பகுதியில் சேதுநாராயண பெருமாள் கோவில் அமைந்துள் ளது. இவ்வூரின் நீர் நிலைகளில் தண்ணீர் எப்போதும் வற்றாத இருப்பாக இருப்பதால், 'வற்றா இருப்பு' என்ற பெயர் ஏற்பட்டு அதுவே காலப்போக்கில் 'வத்திரா யிருப்பு என்று மருவிவிட்டது. வத்திராயிருப்பில் வாழ்ந்து வந்த அழகர் ஐயங்கார் என்பவரால், இந்தக் கோவில் நிர்மாணிக்கப் பட்டது என்றும், ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.இக்கோவிலில் சேதுநாராய ணப்பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சன்னிதிகளும், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகி யோரின் உபசன்னிதிகளும் உள் ளன. கோவிலுக்கு தேரும் இருக் கிறது. இந்த ஆலயத்தில் பாஞ்ச ராத்திர முறைப்படி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கின்றது. இங்கு ஆவணி மாதம் நடைபெறும் திருவிழா முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.வத்திராயிருப்பில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் சேதுநாராயணப் பெருமாள் சுவா மிக்கு, 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் இறைவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமி வீதி உலா வருவார். அதன்பிறகு சேதுநாராயணப் பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்குவார்.இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். முன்னதாக அதி காலை 3 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ ஆழ்வார் களுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து நாலாயிரம் திவ்ய பிரபந்தமும், ஆண்டாள் திருப்பாவையும் ஓதப்படும். பின்னர் பரமபத வாசல் வழியாக சேது நாராயணப் பெருமாள் வெளியேறி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.

May 22, 2025

வேல்மலை முருகன் 

'குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்' என்பர். இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி அருகே கணக்கபிள்ளைவலசை வேல்மலை யில் அமைந்துள்ளது, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவில் சுமார் 1300 ஆண்டு களுக்கு முன்பு வேல் மலையில் ஆதிநாத சித்தர் வாழ்ந்து வந்தார். சிறந்த தவசீலரான இவர் முருகனின் திருப்பாதங் கள் தனது சிரசின் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்பி பல ஆண்டுகள் தவம் புரிந்தார். அவரது வேண்டுதலுக்கு இணங்க முருகப்பெரு மான் பாலகனாக அவருக்கு காட்சி தந்து முக்தியளி தார். அவரது ஜீவசமாதி பீடத்தின் மீது முருகப்பெரு மான், பாலசுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கின்றார்.முன்பொரு காலத்தில் குற்றாலநாதர் கோவில் வைணவ ஆலயமாக இருந்தது. அப்போது பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், ஹரி யும் சிவனும் ஒன்று என் பதை உணர்த்த எண்ணி னார். அதன்படி, முருகன் ஆணைக்கு இணங்க மகாவிஷ்ணுவை பிரார்த் தனை செய்து குற்றா லத்தை சிவதலமாக மாற்றினார்.பின்னர் அகத்தியரை வேல்மலைக்கு வருமாறு முருகப்பெருமான் அழைத்தார். உடனே குற்றாலம் பொங்குமாங் கடலில் மூழ்கிய அகத்தியர், தனது தவ வலிமை யால் வேல்மலையில் இருந்த சுனை வழியாக வெளியே வந்து முருகப் பெருமானை வழிபட்டார்.எனவே வேல்மலையை அகத்தியர் அமர்ந்த மலை' என்றும் அழைக்கின்றனர்.

May 15, 2025

"கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்.

அர்த்தமுள்ள இந்துமதம்' தோன்றிய வரலாறும்" -மற்றும் தன்னைக் காப்பாற்றிய பெரியவா மீது கண்ணதாசன் இயற்றிய கவிதையும்-'"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்றதீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்துகூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!"சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News