புதிதாக வாங்கும் ஆடைகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் போது, பக்கத்து வீட்டிலுள்ள தோழி தெரிந்தவர்களுக்கு காண்பிக்கும் போது அவர்களுடைய மனதில் இவ்வளவு விலையா? நம்மால் இப்படி வாங்க முடியவில்லையே, என ஏக்கமாக பார்ப்பது, உங்களுக்கு கண் திருஷ்டி ஏற்படும்.மேலும் நகைகள், பீரோவிலுள்ள புடவைகளை, கடைபரப்பி காண்பிப்பதும் சரியல்ல.அவ்வாறு ஆர்வமாக காண்பித்த பின்பு அந்த புடவையையோ அல்லது நகையையோ அணியமுடியாமல் போகும்,மேலும் நகைகள் அடகுக்கு போவது ,மீட்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.எல்லோருடைய பார்வையும் அப்படி இருக்காது என்றாலும், உங்களுக்கு தெரிந்து இவர்களிடம் காட்டினால் கண் திருஷ்டி படுகிறது என்று ஒரு அபிமானம் .இருப்பவர்களிடம் காட்டாமல் இருப்பது நல்லதே...மற்றபடி உங்களின் மீது அதிக பாசமுள்ள பிரியமுள்ளவர்களிடம் காண்பிப்பது சரியே.கண் திருஷ்டி ஆபத்து: உலகம் முழுதும் நம்பும்உண்மை .வேதத்தில் 'கோரம் சக்சுக்ஷக்ஷிஷு என்று கண் திருஷ்டி பற்றி துதி இருக்கிறதுகுழந்தைகளுக்குக் கருப்புப் போட்டு வைப்பது , கோவிலில் கோபுரத்தில் ஆபாச சிலைகள் வைப்பது ,பெரிய கடைகளில் விநோத உருவம் வரைந்த பூசணிக்காய் தொங்குவது ,வீட்டின் முகப்பில் திருஷ்டி விநாயாகர் உருவம் மாட்டுவது , கார் வாங்கினால் குங்குமத்துடன் எலுமிச்சம்பழத்தை டயரில் வைத்து நசுக்குவது ,எல்லா நிகழ்ச்சிகள் முடிந்ததும் செந்நிற மஞ்சள் வண்ணஆரத்தி சுற்றுவது ,வெள்ளிக்கிழமைகளில் தாய்மார்கள், வீட்டிலுள்ள அனைவரையும் நிறுத்தி உப்பு அல்லது மிளகாயைச் கற்றி நிரிலோ, நெருப்பிலோ போடுவது ,தலையைச் சுற்றி அல்லாது ஒரு பொருளைச் சுற்றி தேங்காயை சிதறு காய் அடிப்பது,கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பழமொழி சொல்லுவது இந்துக்களின் கண்திருஷ்டி நம்பிக்கை ,உலகம் முழுதும் பரவியுள்ளது.,கண் படுதல் அல்லது திருஷ்டி என்பது உண்மையே என்று அதர்வண வேதம் கூறுகிறது.அதர்வண வேதம் கோரமான தீய கண்கள் என்ற சொற்றொடரை பயன்படுத்தி அதற்கு பரிகாரங்களையும் பேசுகிறது
பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி ,தலை வகிட்டு பகுதி ஆரம்பம், ஆகிய மூன்று இடங்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்கின்றால். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால் லட்சுமி தேவியின் அருளை முழுமையாக பெற முடியும்.வீட்டிற்கு வரும் பெண்களுக்கு, குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே ,மாங்கல்ய பலம்பெருகும்,பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்ட பிறகே கொடுக்க வேண்டும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
நவீன இந்து மதத்தை போதித்தவர்களில் ஒருவரான ஆதிசங்கராச்சாரியார் ஜோஷிமட்டில் உள்ள ஒரு மரத்தடியில் ஞானம்பெற்றதாகக் கூறப்படுகிறது.எனவே இப்பகுதி ஜோதிர்மத் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தமரத்தை இன்றும் அங்கு காணலாம். இது கல்பவ்ரிக்ஷம் என்று அழைக்கப்படுகிறது.ஆனால், இந்த மரத்தை அடுத்துள்ள கோயில் இன்று இடிந்துவிழுந்துள்ளது. அதன் அருகில் இருந்த குகையும் அழிக்கப்பட்டுவிட்டது.அதில் ஆதி சங்கராச்சாரியார் தியானம் செய்ததாக கூறப்படுகிறது.ஜோஷிமட் பற்றி பல கதைகள் உள்ளன. இங்கு லட்சுமி நரசிம்ம சுவாமிகோயிலும் உள்ளது. அவரது பக்தரான பிரஹலாதன் இங்கு முக்திஅடைந்ததாக கூறப்படுகிறது.இங்கு ஏராளமான கோவில்கள் மற்றும் நீர் ஊற்றுகள் உள்ளன. இவைபிரம்மா, விஷ்ணு, கணேஷ் என கடவுளின் பெயர்களிலும்அறியப்படுகின்றன.
சிவன், விஷ்ணு, பிரம்மாவை வணங்கும்போது, தலைக்கு மேல், 12 அங்குல உயரத்திற்கு, கைகளை உயர்த்தி, கை கூப்ப வேண்டும்.பிற தெய்வங்களுக்கு தலை மேல் கை கூப்ப வேண்டும். குருவை, நெற்றிக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்.தந்தைக்கும், அரசருக்கும் வாய்க்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்.அறிநெறியாளர்களை, மார்புக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்.அன்னையை வயிற்றுக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்.
புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். இந்த ஆண்டுக்கான மகாளய பட்சம் (11) முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை மகாளய பட்சம். இந்த 15 நாட்கள் அடங்கிய புண்ணிய தினத்தில் எந்த நாளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால் நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம்.மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதிகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும்.ஆவணி பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்களே மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது.மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம், பட்சம் என்றால் பதினைந்து நாட்கள், முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்மேற்கண்ட பதினைந்து நாள்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த தினத்தில் அரச மரத்தை சுற்றிவந்து கணபதியை வணங்கி வருவது அமாவாசை நாட்களில் காகம், எறும்பு, பசு, நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தல் ,கருப்பு உளுந்து, கருப்பு எள், உப்பு, உடைகள், வெல்லம், பார்லி போன்ற உணவு பொருட்களை தானமாக அளித்தல், தண்ணீர் தானம் கொடுப்பதும், குடிக்க இனிப்பு கலந்த தண்ணிரைப் பருக கொடுப்பதும், சிவ பெருமான் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வருவது,எப்போதும் ஏழை, எளியோரை தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக்கூடாது. நாம் அவர்களுக்கு உதவியோ, மரியாதை கொடுத்தாலே போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.முன்னோர்களை வணங்குவதுகுல தெய்வ இறைவனை வணங்குவதும் சிறப்பான விஷயம் தான்.ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து அந்த தீபத்தைப் பார்த்து வணங்குவது மிகவும் நல்லது.மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். மகாளய அமாவாசை தினத்தில் நற்காரியங்களை செய்து இறைவனின் அருளும், முன்னோர்களின் அருளும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.