பாலிவுட்டில் மட்டுமல்லாமஸ் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தான். ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ.40 கோடி வரை சம்பளம்அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பான சிட்டாடல் வெப் சீரிஸுக்கு ரூ40 கோடி சம்பளம் பெற்றதாககூறப்படுகிறதுஇந்தியாவில்,அவர் ஒரு படத்திற்கு ரூ.14.20 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.ஆலியா பட், கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் என அனைவரும் 10 முதல் 20 கோடி வரை சம்பளம்.
தமிழ் திரையுலகில் சமீப காலமாக ரூ.100 கோடி700 கோடி வரை படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால் முன்பெல்லாம் கோடிகளில் வசூல் செய்யும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அந்த வகையில்,2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ.50 கோடி வசூல் பார்த்த நடிகர் ,தரணி இயக்கத்தில்2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒக்கடு திரைப்படத்தை கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர்.விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.திரைக்கதை, வசனம், பாடல், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிற தான் தொலைக்காட்சியில் வெளியானது. அந்த அளவிற்கு இந்த படம் திரையரங்குகளில் நீண்ட நாள் ஓடியது.8 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.50 கோடி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது. அப்போதைய காலகட்டத்தில் ரூ.50 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவில் பிரம்மிக்க வைக்கும் வசூலாக இருந்தது.கில்லி படத்தில் நடித்ததன் மூலம், முதன் முதலில் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூல் பார்த்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார் நடிகர் விஜய்.20 வருடங்கள் கழித்து தற்போது கில்லி படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்320 திரையரங்குகளில் கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷின் மகன்யாத்ரா12ஆம்வகுப்பு பொதுதேர்வு எழுதிஇருந்தார். இந்தமுடிவுகள் திங்கள்கிழமையான நேற்று வெளியானது. இதில்யாத்ரா நல்லமதிப்பெண்கள் எடுத்துள்ளதாகஇணையத்தில் தகவல்ஒன்று வைரலாகிவருகிறது. எனினும்இது குறித்தஅதிகாரப்பூர்வ தகவல்கள்இன்னும் வெளியாகவில்லை.: தன்னைவிட இரண்டு வயது குறைந்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மகன்களுக்காக இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தநிலையில், அண்மையில் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உள்ளனர். அப்படி அப்பா, அம்மாவின் விவகாரத்து ஒருபுறம் சென்று கொண்டு இருக்க, தனுஷின் மூத்த மகன் யாத்ரா பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது., அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தென் திரைப்படங்கள் மட்டுமல்ல, அதன் நட்சத்திரங்களும் அந்தஸ்தில் வளர்ந்துள்ளன. இதேபோல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்தி திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்துள்ளனர். பான் இந்தியா படங்களின் வளர்ச்சியே இந்திய சினிமா வரலாற்றில் வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன் இன்று தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர். அறிக்கைகளின்படி, கமல்ஹாசனின் நிகர மதிப்பு சுமார்$70 மில்லியன்(ரூ450 கோடி) ஆகும். தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் இடம்பெற்றுள்ளார்.பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை ரஜினிகாந்துக்கும், தளபதி விஜய்க்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு நடிகர்களும், தமிழ் பணக்கார நடிகர்கள் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர். ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு சுமார்450 கோடி என்றும், விஜய்யின் சொத்து மதிப்பு 410 கோடி என்றும் கூறப்படுகிறது.100 கோடிக்கு மேல் நிகர மதிப்புள்ள மற்ற சூப்பர் பணக்கார தமிழ் நட்சத்திரங்களில் அஜித் குமார் (ரூ 350 கோடி), சூர்யா (ரூ 300 கோடி), கார்த்தி (ரூ 110 கோடி), தனுஷ் (ரூ 160 கோடி), மற்றும் மாதவன் (ரூ 115 கோடி) ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவார்கள்.இவர்களை விட கமல்ஹாசன் மேலே இருக்கக் காரணம், விக்ரம்(மட்டும்400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது) போன்ற சொந்த வெற்றிப் படங்களைத் தயாரித்த அவரது படத் தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றிதான். இது ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்றவர்களை முறியடிக்க உதவியது என்றே சொல்லலாம்.பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்துள்ள நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான கல்கி 2898 AD இல் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இந்தியன்2, மணிரத்னத்தின் தக் லைஃப் ஆகிய படங்கள் விரைவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ளது.
.பல வருடங்களாக சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், சமீப காலத்தில் நடிகைகளும் நடிகர்களுக்கு இணையாக சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். தற்போது திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் ஒரு படத்திற்கு ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு நடிகை வெறும் 3 நிமிட பாடல் காட்சியில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் ஊர்வசி ரவ்துலா.பாலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வருகிறார் ஊர்வசி ரவ்துலா. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பிய இவர், பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட், டோலிவுட் போன்ற தென்னிந்திய திரையுலகிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம்‘தி லெஜண்ட்’. படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஊர்வசி..தி லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்க படக்குழு முதலில் அணுகியது நடிகை நயன்தாராவை தான். ஆனால் அவரோ எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டதால், அவருக்கு இணையான சம்பளத்தை கொடுத்து ஊர்வசி ரவ்துலாவை அப்படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. லெஜண்ட் படத்திற்கு பின்னர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 109-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி., அவர் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ராம் பொத்தினேனி நடிப்பில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ,வெறும்3 நிமிட பாடலுக்காகஆடி ரூ.3 கோடி சம்பளமாகவாங்கி இருக்கிறார் .நயன்தாரா, திரிஷா கூட இந்த அளவுக்கு சம்பளம் வாங்காத நிலையில், ஊர்வசி ரவ்துலா இந்த அளவுக்கு அதிக சம்பளம் வாங்கி உள்ளது தென்னிந்திய திரையுலகில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது
தமிழில்மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம் ஆகியமொழி திரைப்படங்களிலும்நடிக்கிறார். மேலும்பாலிவுட்பக்கமும் கவனம்செலுத்த துவங்கியுள்ளார். திரிஷா40 வயதாகியும்20 ஆண்டுகளாகதிரையுலகில் பயணித்துமார்க்கெட்டில் உச்சத்தில்இருக்கும் திரிஷாவிஜய்யின் Goat திரைப்படத்திலும்ஒரே ஒருபாடலுக்கு நடனமாடியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.பிஸியானநடிகையாக மாறியுள்ள திரிஷா, தற்போது ஒரு படத்தில்நடிக்க ரூ.12 கோடி வரைசம்பளம் வாங்கிவருவதாக தகவல்வெளியாகியுள்ளது. தென்னிந்தியஅளவில் அதிகம்சம்பளம் வாங்கிநடிகை திரிஷாதான் எனகூறுகின்றனர்., சம்பளவிஷயத்தில் நடிகைஐஸ்வர்யா ராய்யைதிரிஷா மிஞ்சிவிட்டார்என தகவல்கூறப்படுகிறது. ஐஸ்வர்யாராய் ஒருபடத்தில் நடிக்கரூ. 10 கோடிமுதல் ரூ. 12 கோடி வரைசம்பளம் வாங்கிவருகிறாராம்.ரூ. 776 கோடி சொத்துமதிப்பு வைத்திருக்கும்ஐஸ்வர்யா ராய், இந்தியாவின் பணக்காரநடிகை எனஅழைக்கப்படுகிறார். ஆனால்,சம்பள விஷயத்தில்அவருக்கு இணையாகதற்போது திரிஷாவந்துவிட்டார் எனதிரை வட்டாரத்தில்பேசப்பட்டு வருகிறது.நடிகை திரிஷா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தனர்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். கமர்ஷியல் கிங் என தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்.இதுவரை ஹரி- விஷால் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே வரவேற்பை ரத்னம் படம் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது .
விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. 20 வருடத்திற்கு பிறகு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ள போதும், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு சற்றும் குறையாததால், படத்தை தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ரீ ரிலீஸ் ஆன அனைத்து தியேட்டரிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இருபது ஆண்டுகளுக்கு முன் தியேட்டரில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து திரையில் சக்கை போடு போட்ட திரைப்படங்களை மீண்டும் கையில் எடுத்து ரீ ரிலிஸ் செய்ய தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆளவந்தான், முத்து, வாரணம் ஆயிரம், 3, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது விஜய், த்ரிஷா கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளதுஇருபது ஆண்டுகள் கழித்தும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் பலரும் குடும்பமாக சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படி இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலே 4 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து ரீ ரிலீஸ் செய்த படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்து இருக்கிறது கில்லி.இப்படம் உலகளவில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்றும், படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், இப்படத்தின் வசூல் குறையாததால், கில்லி திரைப்படம், 50 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தை இயக்கிய தரணி மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளரான வித்யாசாகர் கில்லி படம் ஓடும் திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டு மகிழ்ந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டும் பணிகள் பணம் இல்லாத காரணத்தால் நின்று இருந்தது. அதனை தொடர்ந்து விஜய் ஒரு கோடி ரூபாயும், கமல் ஒரு கோடி ரூபாயும் அளித்து இருந்தனர்.இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன்50 லட்சம் ருபாய் வழங்கினார். தற்போது கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி ருபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி கூறி இருக்கிறது.நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி பல நூறு ஏக்கரில் விவசாயமும் அங்கு செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக சம்பளம் வாங்கி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.சுமார்20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வரும் திரிஷா மற்றும் நயன்தாரா, பெண்களுக்கு முக்கியத்துவம் கதைகளை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.திரிஷாவும் நயன்தாராவும் என்னதான் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ.100 கோடி வசூலித்தபடத்தில் நடித்தவர்கள் இவர்கள் இருவருமே இல்லை. தமிழ் சினிமாவில் முதன் முதலாக ரூ.100 கோடி வசூலித்த படத்தில் நடித்தது நடிகை ஸ்ரேயா தான்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படம் தான் அது.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடித்திருப்பார்.சுமார் ரூ80 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரூபாய்160 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.