25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வெள்ளித்திரை

Sep 25, 2024

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த காமெடி கூட்டணி

15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி - வடிவேலு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு கேங்கர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. வடிவேலுலின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு, ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டுள்ளது. கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் இப்படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது 

Sep 18, 2024

ஜெயம் ரவி பிறந்த நாளை முன்னிட்டு ஜீனி படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.ஜெயம் ரவி ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார்.

Sep 18, 2024

பிக்பாஸ் விஜய் சேதுபதிக்கு ரூ.50 கோடி சம்பளம்

விஜய் டிவியில் பிக் பாஸை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ .50 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸை முன்பு தொகுத்து வழங்கிய கமல், படங்களில் நடிக்க இருப்பதை. சுட்டிக்காட்டி விலகினார். இதையடுத்து, கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். கமலுக்கு ரூ .120 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது 

Sep 18, 2024

செப்., 20ல் ரிலீஸ் ஆகும் படங்கள் 

கோழிப்பண்ணை செல்லதுரை' ரிலீஸ்சீனு ராமசாமி இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள படம் 'கோழிப் பண்ணை செல்லதுரை'. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக் கின்றன. சில தினங்களுக்கு முன் இதன் டீசர் வெளியானது. எதார்த்த படைப்பாக உருவாகி உள்ள இந்த படம் செப்., 20ல் ரிலீஸாகிறது என சீனு ராமசாமி அறிவித்துள்ளார். 'வேட்டையன்' இசை வெளியீடு ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரி யர் நடிப்பில் தயாராகி உள்ள படம் 'வேட்டையன்'. அக்., 10ல் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத் தில் இருந்து 'மனசிலாயோ' என்ற முதல்பாடலை விரைவில் வெளியி டப் போவதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். அதோடு செப்., 20ல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.மாளவிகாவின் ஹிந்தி படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு . மலையாள நடிகை யான மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தாண்டி பிறமொழிகளிலும் நடிக்கிறார். ஏற்கனவே ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தி ருப்பவர் இப்போது 'யுத்ரா' என்ற படத்தில் நடித்துள்ளார். சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்க, ரவி உத்யவார் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்க்ஷன் கதையில் உருவாகி உள்ள இந்த படம் செப்., 20ல் ரிலீஸ் என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.சட்டம் என் கையில்' ரிலீஸ்நகைச்சுவை நடிகராக இருந்த சதீஷ் சமீப காலமாக நாய் சேகர், கான்ஞ்சுரிங் கண்ணப் பன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்று வருகிறார். அடுத்து சச்சி இயக்கத்தில் 'சட்டம் என் கையில்' எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். வித்யா  பிரதீப் நாயகியாக நடித்துள்ளார். இதன்  படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வரும் சூழலில் செப்., 20ல்  படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.'நந்தன் ரிலீஸ்உடன்பிறப்பே படத்திற்கு பின் மீண் டும் சசிகுமாரை வைத்து நத்தன் என்ற படத்தை ஈ.ரா. சரவணன் இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளனர். படப்பி டிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கும் நிலையில் செப்., 20ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர், சென்ட்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் படமாக உருவாகி உள்ளது.

Sep 11, 2024

'கூலி' படத்தில் அடுத்தடுத்து இணைந்த பிறமொழி நடிகர்கள்

லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது படத்தில் நடித்து வரும் நடிகர்களின் அறிவிப்பை படக்குழுவினர் வெளி யிட்டு வருகின்றனர். அந்தவகையில் தயாளாக மலையாள நடிகர் சவுபின் சாகிர், சைமனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் நடிப்பதை அவர்களின் முதல் பார்வையுடன்' அறிவித்துள்ளனர்.சென்னை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 177-வது படத்துக்கு “கூலி” என தலைப்பிடப்பட்டுள்ளது.  இது தொடர்பான டைட்டில் அறிமுக விடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.5- 16 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் தங்க கட்டிகளையும் நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து கதவின் இடையிலிருந்து ரஜினியின் கண்கள் தெரிகிறது கூலிங்  கிளாஸை  மாட்டிக்கொண்டு எதிரிகளை அடித்து துவம்சம் செய்தபடி, உள்ளே வருகிறார் .தங்க நகைகள் மட்டும் கலரிலும் ,மற்றவை ப்ளாக் அன்ட் வொயிட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது.

Sep 11, 2024

ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை

உலக சினிமா வரலாற்றில் என்டிஆர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர் ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் மட்டும் தான் .

Sep 11, 2024

வித்தியாசமான தோற்றத்தில் சசிகுமார்

இயக்குனராக இருந்து நடிகராக மாறியதற்காக கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்காமல், சமீப காலமாக நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை ,தேர்தெடுத்து நடித்து வரும் சசிகுமார் என்னும் எதார்த்த நடிகர், “அயோத்தி”, “கருடன்” படத்தை தொடர்ந்து 'நந்தன்" படத்தில் வித்யாசமான லுக்கில் நடிக்கும் சசிகுமார்.

Sep 04, 2024

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகள் அறிமுகம்

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகள் அறிமுகமாகி வருகின்றனர். 'ஜவான்' படத்தின் வாயிலாக நயன்தாரா இந்தியில் அறிமுகமானார். மேலும் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் பாலிவுட்டில் ஏற்கனவே நுழைந்துள்ளனர். இந்த லிஸ்டில் தற்போது சாய் பல்லவியும் இணைந்துள்ளார். தனது முதல் இந்தி அறிமுக படத்திலே சீதையாக நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது.

Sep 04, 2024

நடிகை சௌகார் ஜானகி

நடிகை சௌகார் ஜானகி மற்றும் அவங்களோட மகள், பேத்தி, கொள்ளு பேத்தி, எள்ளு பேத்தி அரிய புகைப்படம்எள்ளு பேத்தி எடுத்து ஐந்து தலைமுறையை பார்த்த ஒரே தமிழ் நடிகை செளகார் ஜானகிஅவர்கள் மட்டும்தான் .

Sep 04, 2024

 இமான்வி என்ற புது முக நடிகை பிரபாஸ்க்கு ஜோடி

' சீதா ராமம் ' இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்  கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 1940ல் நடக்கும் பீரியட் படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக இமான்வி என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ' ராஜா சாப் ' படத்தில் நடித்து  முடித்துள்ளார்.

1 2 ... 78 79 80 81 82 83 84 ... 95 96

AD's



More News