25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Aug 14, 2024

வெப் தொடரில் சூரி அறிமுகம்

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய சூரி. கொட்டுக் காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. அடுத்து வெப் தொடரில் களமிறங்குகிறார். சூரி நடிக்கும் இந்த தொடருக்கு அவரே கதை எழுதி உள்ளதாக தெரிகிறது. விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். மதுரையில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Aug 14, 2024

“ மகாராஜா”வை  அடுத்து மகாராணி ஆக நயன்தாரா

மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடி யோஸ் நிறுவனத்திற்கே அடுத்த படத்தையும் இயக்குகிறார் நித்திலன். மகாராணி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலித்தது. பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

Aug 14, 2024

எனிமி' படப் பாடலான 'டம் டம்' பாடல்- 600 மில்லியனைக் கடந்தது

 தமன் இசையில் விஷால், மிருணாளினி நடித்த 'எனிமி' படப் பாடலான 'டம் டம்' 600 மில்லியன் சாதனையைப் கடந்துள்ளது.தமிழ் சினிமா பாடல்களில் 1500 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது மாரி 2 பட பாடலான'ரவுடி பேபி'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ், தீ பாடினர். இதற்கு அடுத்து அனிருத் இசையில் விஜய்யின் பீஸ்ட் படப் பாடலான 'அரபிக் குத்து' 621 மில்லியன் பார்வைகளுடன் இரண் டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவதாக 'டம் டம்' 600 மில்லியன் சாதனையைப் கடந்துள்ளது.

Aug 14, 2024

கீர்த்தி சுரேஷ் அரசியல் ஆசை

 இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆசை இல்லை,நடிப்பு மட்டும் தான். எதிர் காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் போகலாம்" என்றார்.சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள  'ரகு தாத்தா' படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ் ''எனக்கு பிடித்த ஊர் மதுரை. மல்லிப்பூ, மீனாட்சி  அம்மன் கோயில் என பிடித்தமான நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த படத்தில் பெண்ணியத்திற்காக போராடும் பெண்ணாக நடித்துள்ளேன். கலாசாரம் என்ற பெயரில் பெண் கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை காட்டி உள்ளோம். ஹிந்தி திணிப்பு பற் றியும் ஆங்காங்கே பேசியிருக்கிறோம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக் காது. முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி உள்ளோம். 

Aug 07, 2024

பிரபாஸ், திரிஷா நான்காவது முறை இணைந்து நடித்துள்ளார்.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்கும் அவரின்25வது படமான'ஸ்பிரிட்' விரைவில் துவங்க உள்ளது. இதன் பட்ஜெட்மட்டும் ரூ.300 கோடி.. இதில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க உள்ளார். இன்னொரு நாயகியாக திரிஷாவும் நடிக்க போகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே பிரபாஸ் உடன் வர்ஷம், புஜ்ஜி காடு, பவுர்ணமி ஆகிய படங்களில் திரிஷா இணைந்து நடித்துள்ளார்.

Aug 07, 2024

ஜெயம் ரவியின் 'மிருதன் 2'

 2016ல் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் அவர் நடித்த படம் மிருதன். ஜாம்பிஸ்களை மையமாக வைத்து வெளியான இந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம்8 ஆண்டுகளுக்கு பின் உருவாக உள்ளது. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. இதுதவிர ஜெயம் ரவியின் தனி ஒருவன்2 படமும் ஆரம்பமாக உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள'பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை' ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.

Aug 07, 2024

அந்தகன் ரிலீஸை ஆக., 9க்கு மாற்றிவிட்டனர் 

ஹிந்தியில் வரவேற்பை பெற்ற 'அந்தாதூன்' படம் தமிழில் அந்தகன்' என்ற பெயரில் ரீமேக்ஆகி உள்ளது. பிரசாந்த், பிரியா  ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். ஆக., 15ல் படம் ரிலீஸ் என அறிவித்தனர். அந்தசமயம் விக்ரமின் 'தங்கலான்', கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' மற்றும் அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' ஆகிய படங்களின் வெளியீடும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதனால் நான்கு படங் களுக்கும் கணிசமான தியேட்டர் கிடைக்குமா என்ற சூழல் இருந்தது. இதனால் அந்தகன் ரிலீஸை ஆக., 9க்கு மாற்றிவிட்டனர்.

Jul 31, 2024

'ராமாயணா' படம் பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

ராமாயணம் கதையை படமாக இயக்க திரையுலகை சார்ந்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு 'ஆதி புருஷ்' படம் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் வெளியானது.. கடந்த வருடம் ஓம் ராவத் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியான 'ஆதி புருஷ்' படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. வசூலிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தற்போது ராமாயணம் கதை தற்போது பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் இணைந்து நடித்து வரும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது நிதேஷ் திவாரி இயக்கும் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது. இந்தப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். அத்துடன் ராவணனாக யாஷும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்து வருகின்றனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன், நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கசிந்ததுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., 'அனிமல்' படத்தில் சரிக்கு சமமாக பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களை சம்பாரித்த ரன்பீர் கபூர் தற்போது இராமராக அவதாரம் எடுத்துள்ளார். அனிமலை தொடர்ந்து இப்படமும் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 31, 2024

ஆக. 2ல் ரிலீஸ் ஆகும் படங்கள்

ஆகஸ்ட் மாதம் நிறையபடங்கள் வெளியாகும் என்பதன்  முன்னோட்டமாக வரும்  ஆக., 2 ல் "போட், ஜமா, மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, வாஸ்கோடகாமா 'ஆகிய 6 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் யோகி பாபுவின் போட், புதியவர் பாரி இளவழகனின் ஜமா மற்றும் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத பிடிக்காத மனிதன் ஆகிய  படங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளன.

Jul 31, 2024

பிறருக்கு உதவும் குணம் வரம் . டாப் ஹீரோ மகேஷ்பாபு

  மகேஷ்பாபு  1000 குழந்தைகளுக்கு உயிர் வழங்கிய டாப் ஹீரோ வருசத்துக்கு  30 கோடி நன்கொடை.மகேஷ்பாபு தனது ஆண்டு வருமானத்தில் 30 சதவிதம் ந ன்கொடையாக வழங்கி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஆண்டுக்கு 25-30 கோடி ரூபாய் பணத்தை தொண்டு செயல்களுக்கு பயன்படுத்துகின்றார். இன்று வரை இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அத்தியாவசிய இருதய அறுவை சிகிச்சையை வழங்கியுள்ளார்.இதுகெல்லாம் ஒரு நல்ல மனசுவேணும். 

1 2 ... 73 74 75 76 77 78 79 ... 89 90

AD's



More News