25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Sep 04, 2024

 இமான்வி என்ற புது முக நடிகை பிரபாஸ்க்கு ஜோடி

' சீதா ராமம் ' இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்  கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 1940ல் நடக்கும் பீரியட் படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக இமான்வி என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ' ராஜா சாப் ' படத்தில் நடித்து  முடித்துள்ளார்.

Aug 28, 2024

ரஜினியுடன் நடித்தது பற்றி துஷாரா நெகிழ்ச்சி

ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் அடுத்ததாக ரஜினியின் 'வேட்டையன்', விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் நடித்தது பற்றி அவர் கூறுகையில் "அவருடன் நடிக்க வேண்டும் என்றதும் பயம் ஏற்பட்டு, காய்ச்சலே வந்துவிட்டது. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பயம் என இரண்டும் கலந்த மனநிலையில் ரஜினியுடன் நடித்தேன். அது ஒரு கனவு மாதிரியே இருந்தது" என்றார்.

Aug 28, 2024

சிவகார்த்திகேயன் படத்தில் பிஜு மேனன்

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த், கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜு மேனனும் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளார்.இவர் ஏற்கனவே தமிழில் மஜா, தம்பி, பழனி, அரசாங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Aug 28, 2024

அவதார் 3 உருவாகிறது

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பேன்டஸி படமாக வெளிவந்த 'அவதார்' படத்தின் இரண்டு  பாகங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது அவதார் 3 உருவாகிறது. இதற்கு 'அவதார் பயர் அண்ட் ஆஷ்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். படப் பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் வேலைகள் நடக்கின்றன. அடுத்தாண்டு டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறையில் படம் வெளியாகிறது.

Aug 28, 2024

அர்ஜுன் மகள், மருமகனை வைத்து எடுக்கும் படம்

 புதிய இயக்குனர் இயக்க அர்ஜூன் தயாரிப்பதோடு கதையையும் எழுதுகிறார்.நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்தாலும் அவை வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் மகள், மருமகனை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார் அர்ஜூன்

Aug 21, 2024

ஆக. 23ல் ரிலீஸ் ஆகும்  படங்கள்

இந்த வாரம் ஆகஸ்ட் 23ல் வாழ்க்கை பற்றி பேசும்   உணர்ச்சிகரமான படங்கள்  வெளியாக உள்ளன.'கொட்டுக்காளி, வாழை, போகுமிடம் வெகு தூரமில்லை, நாற்கரப்போர்' ஆகியவை தான் அந்த படங்கள். இவற்றுடன் "அதர்மக் கதைகள், சாலா, கடமை" என மொத்தம் 7 படங்கள் வெளியாக உள்ளன.

Aug 21, 2024

லோகேஷ் கனகராஜ் உடன் அமீர்கான்

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான். ஏற்கனவே தமிழ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்தார். இப்போது மற்றொரு தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் படம் பண்ண பேச்சுவார்த்தை நடக்கிறது. முற்றிலும் ஆக்க்ஷன் கதையில் இந்தப்படம் உருவாகிறது.. 'டங்கல்' படத்திற்கு அமீர்கான் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை ஒரு பெரிய வெற்றிக்காக தமிழ் இயக்குனர் உடன் இணைகிறார்.

Aug 21, 2024

இசையமைப்பாளர் இல்லாமல் படமான கொட்டுக்காளி  ரிலீஸ்

வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. 'எங்க விட்டு பிள்ளைக்கு பேய் புடிச்சுருக்கு.அதை விரட்டப் "போறோம்' என்கிற ஒரே ஒரு வசனம் மட்டுமே டிரைலரில் உள்ளது. மற்ற காட்சிகள் அனைத்தும் ஆரம்பம் முதல் இறுதிவரை சீரியஸாகவே நகர்கின்றன. படத்திற்கு இசையமைப்பாளர் என யாரும் இல்லை. படப்பிடிப்பு சூழலில் இருந்த ஒலியை மட்டும் பயன்படுத்தி உள்ளனர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்த படம் ஆக., 23ல் ரிலீஸாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் கொட்டுக்காளி. இந்தப்படத்தை கூழாங்கல் என்ற அற்புதமான படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். கொட்டுக்காளி திரைப்படத்தில் இசையமைப்பாளரே கிடையாதாம். எதார்த்தமான திரைப்படம் என்பதால் கதையோடு ரசிகர்களும் பயணிக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் இல்லாமல் படத்தை எடுப்போம் என்று இயக்குனர்  சொன்னதாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்

Aug 21, 2024

'தி கோட்' டிரைலர் புதிய சாதனை படைத்தது

விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைத்துள்ளார். ஆக., 17ல் டிரைலர் வெளியானது. 24 மணிநேரத்தில் 33 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த தமிழ் டிரைலர்களில் விஜய்யின் 'லியோ' 32.7 மில்லியன் பார்வைகளை பெற்றது.நடிகர் விஜய் - ன் "தி கோட்" டிரெய்லர் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு பேசுகையில் நடிகர் அஜித் அவர்கள் படத்தின் டிரெயிலரை பார்த்து விட்டு சூப்பரா இருக்குடா.! உனக்கும் விஜய்க்கும் நல்லா செட் ஆகியிருக்கு டா. விஜய்க்கும் படக்குழுவினருக்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லிடு என்று மெசேஜ் அனுப்பியதாக கூறியுள்ளார். இந்தப்படத்தில் இனி சத்தியமாகக்  குடிக்கக் கூடாது  என்ற  மங்காத்தா அஜித் டயலாக்கை  விஜய் பேசியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Aug 21, 2024

தங்கலான் விக்ரமின் நடிப்பு

தங்கத்தை தேடி எடுக்கவெள்ளையர்களுக்கு உதவும் தங்கலானாகசியான் விக்ரம் படம் முழுவதும் தனது ஒட்டுமொத்த நடிப்பையும்வெளிக்காட்டி விட்டார். இந்த படத்தை சியான்விக்ரமின் நடிப்புக்காக மட்டுமேரசிகர்கள் தாராளமாக தியேட்டர்களுக்குசென்று பார்க்கலாம்.கோலார் பகுதியில் தங்கத்தைதேடி பல அரசர்கள்அலைந்த நிலையில், ஆங்கிலேயர்களும்தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.வட ஆற்காடு பகுதியில்வேப்பூர் கிராமத்தில் உள்ள மக்கள் தான் தங்கத்தை எடுக்கசரியான ஆட்கள் என ஆங்கிலேய துரையானகிளெமண்ட்(டேனியல் கால்டாகிரோன்)தங்கலான்(சியான் விக்ரம்)இருக்கும் கிராமத்துக்கு வருகிறான். தங்கலான்தனது மனைவி கங்கம்மா(பார்வதி) மற்றும் தனது குழந்தைகள், மக்கள் என விவசாயம் செய்துவாழ்ந்து வருகிறார்.ஆனால், அந்த பகுதியில்உள்ள ஜமீன்(முத்துகுமார்)மக்களிடம் இருந்து நிலத்தைஅபகரித்து அவர்களை அந்த நிலத்திலேயே அடிமைகளாகவேலை வாங்கி வருகிறார்.இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற வேண்டுமென்றால் வெள்ளைக்காரனுக்கு தங்கம் தேடுவதில்உதவி செய்ய வேண்டும்என பசுபதி, ஹரி உள்ளிட்ட சிலருடன்தங்கலான் ஆனை மலைக்குசெல்கிறார். தங்கத்தை பற்றியும் அதை காக்கும் நாகர் இன தலைவி ஆரத்தி பற்றியும்தனது குழந்தைகளுக்கு விக்ரம் கதை சொல்லும் வழியாகதங்கலானின் பாட்டன் காடயன்ஆரத்தியை வீழ்த்தி சோழ மன்னனுக்கு எப்படிதங்கத்தை எடுத்துக் கொடுத்தான்என்கிற கதையை காட்டுகின்றனர். தங்கத்தை எடுத்துக் கொடுத்தால்வெள்ளைக்காரன் நம்மை மேன்மைப்படுத்துவான், நம் அடிமை விலங்குஅகன்று போகும் என தனது மக்களுடன்போராடும் தங்கலானுக்கு தங்கம்கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின்கதை. அப்போகலிப்டா,அவதார் படங்களை போல தமிழில் ஒரு பெரும் முயற்சியாகஇந்த தங்கலான் பேசப்படும். ஆஸ்கர்விருது கிடைக்கக் கூடிய நடிப்பை சியான்விக்ரம் கொடுத்திருக்கிறார். படத்திற்கு தேவையானகூஸ்பம்ப்ஸ் இசையை ஜி.வி. பிரகாஷ்கொடுத்திருக்கிறார்.நடிகர்கள்: சியான்விக்ரம், பார்வதி, மாளவிகாமோகனன், பசுபதிஇசை: ஜி.வி. பிரகாஷ் குமார்இயக்கம்: பா. ரஞ்சித்'தங்கலான்'. வெளியான முதல்நாளில் உலகளவில் ரூ.26.44 கோடி வசூலித்தது. இது குறித்து விக்ரம் 'புரிந்து கொள்ள முடியாத இந்த அன்புக்கு நன்றி. இதைவிட சிறப்பாக வேறு எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்" எனத் தெரிவித்தார்.

1 2 ... 72 73 74 75 76 77 78 ... 89 90

AD's



More News