25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பழமொழி.

Dec 05, 2023

அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா ?

அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா ? NAIபொருள்: ஒன்றை கடினப்பட்டு உருவாக்குகின்ற அருமை, அதை துச்சமாக நினைப்பவர்களுக்கு தெரியாது.

Nov 28, 2023

உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன்  இலை தேடுவான்

உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன்  இலை தேடுவான்.பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.

Nov 21, 2023

ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல

ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை, தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர். 

Nov 14, 2023

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கலாமா?

விளக்கம்-: நாம் துன்பப்படும் வேளையில் ஒருவர் நமக்கு உதவி செய்தார் என்றால் உதவியை பெற்று நாம் வாழ்வில் முன்னேறியவுடன் நமக்கு உதவி செய்தவரையே பகைவராய்க் கருதி அவருக்கு துன்பம் இழைக்கலாமா கூடவே கூடாது .அவ்வாறு செய்வது பாவம் என்பதை இப் பழமொழி விளக்குகிறது.

Nov 07, 2023

ஊதாரிக்கு பொன்னும் துரும்பு

ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய செல்வமும் சிறு துரும்பாகவே தெரியும்.

Oct 31, 2023

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்

கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க ,பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள். 

Oct 24, 2023

.தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு

 .தழைத்த மரத்திற்கு நிழல் உண்டுபொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்சேர இருந்தால் செடியும் பகை பொருள்: எப்போதும் பிறருடன் அளவாக பழக வேண்டும். யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

Oct 17, 2023

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது

பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது. 

Oct 10, 2023

செக்கை வளைய வரும் எருதுகள் போல ...

செக்கை வளைய வரும் எருதுகள் போல பொருள்: செக்கு மாடுஒரே மாதிரி வளைந்து செல்கிறதோ,அதே போல எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ,ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிப்பதே இந்த பழமொழி.

Oct 03, 2023

இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை

.இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லைபொருள்: பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News