25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


பழமொழி.

Oct 29, 2024

சொல் அம்போவில் அம்போ?

மிதித்தாரை கடியாத பாம்புண்டோபொருள்: ஒரு செயலுக்கான எதிர்வினையை அனுபவிக்காதவர் என்று எவரும் இல்லை.சொல் அம்போவில் அம்போ? பொருள்: வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் தாக்கத்தை விட, நமது நாவில் இருந்து வரும் வார்த்தையின் தாக்கம் அதிகம். எனவே வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும். 

Oct 22, 2024

கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.பொருள்: நாம் செய்த தீவினையை ஒரு நற்செயல் புரிவதன் மூலம் ஈடு செய்ய வேண்டும்.கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா? பொருள்: ஒரு விடயத்தால் பயனில்லை எனத் தெரிந்த பின்பும் அதில் ஈடுபட்ட பிறகு பின்விளைவுகளுக்கு வருந்த கூடாது.

Oct 15, 2024

கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்

.கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன். பொருள்: எந்த ஒன்றையையும் எப்படி பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்றார் போலவே அதன் பயன் இருக்கும். நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம் பொருள்: எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு. அதற்கான நேரம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

Oct 08, 2024

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!பொருள்:நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் பெண்கள் கையில் தான் இருக்கிறது.உண்மையான பொருள்:நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்

Oct 01, 2024

ஏறச்சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிகோபம்

ஏறச்சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிகோபம்.பழமொழி விளக்கம்ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சிலருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும், எருதுவின் மேலே ஏறினால் எருதுவுக்கு வலிக்கும் ஏறவில்லை என்றொல் நொண்டிக்கு கஷ்டம் .நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் கொடுக்கும்.என்பதை குறிப்பது தான் இந்த  பழமொழி.

Sep 24, 2024

காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது

காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது.இறைவனை நினைக்க இளமையிலேயே அறிந்து கொண்டால் முதுமையில் நமது ஆத்மா இறைவனோடு இணைந்து விடும். இறைவனை உணர, மனதில் கொண்டு வர, இறை சூத்திரம் தெரிந்திருக்க வேண்டும். வாழ்க்கையின் முடிவில் சிந்தித்துப் பயனில்லை. இதனால் நாம் அறிவுப்பூர்வமாக விழிப்புணர்ச்சியோடு இறைவனை உள்ளத்தில் கொண்டுவந்து வழிபட வேண்டும். அதுவே பேரறிவு

Sep 17, 2024

தம்பியுடையான் படைக்கஞ்சான் 

தம்பியுடையான் படைக்கஞ்சான் தம்பியை உடைய ஒரு அண்ணன் எதற்கும் அஞ்சாமல், அனைத்தையும் தைரியமாக செய்யலாம். ஒருவேளை தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் ,தன் குடும்பத்தை காத்து நிற்க தன் தம்பி இருக்கிறான் என்ற தைரியம். 

Sep 10, 2024

பழகப் பழக பாலும் புளிக்கும்

ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதன் மூலம் ஒருகட்டத்தில் அலுப்பு தட்டும்.

Sep 03, 2024

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

சித்தம் தெளிய வில்வம்.குடல்புண் நலம் பெற அகத்திக்கீரை.சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.சூட்டை தணிக்க கருணைக்கிழங்குஜீரண சக்திக்கு கண்டைக்காய்.தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை.பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு,வாத நோய் தடுக்க அகத்திக்கீரை.உவாத நோய் தடுக்க அரைக்கீரை.

Aug 27, 2024

ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை.அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு, அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான். 

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 14 15

AD's



More News