தை பிறந்தால் வழி பிறக்கும்.சொல்லப்படும் பொருள்: தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.
ஏரி உடைவதற்கு முன்னால் அணை போட வேண்டும் விளக்கம்: ஆடம்பர செலவுகளை அதிகமாய் செய்து குடும்பம் நடுத்தெருவிற்கு வருவதற்கு முன்பே செலவுகளை குறைத்து சிக்கனத்தை பெருக்கி வளமாக வாழ வேண்டும் எனும் எச்சரிக்கையை இப்பழமொழி செய்கிறது .வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் வருமுன் காப்பது நல்லது ,பொருள்: அணை போட வேண்டும்- காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஏழை சொல் அம்பலம் ஏறாதுவிளக்கம்: ஏழையின் பக்கம் நீதி இருந்தாலும் அவன் பொருளில்லாதவன் என்னும் காரணத்தால் அவன் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதை இப்ப பழமொழி விளக்குகிறது.பொருள்: அம்பலம் ஏறாது - செல்லுபடியாகாது.
.ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு, எவ்வளவு பெரிய செல்வமும் ,சிறு துரும்பாகவே தெரியும்.
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.
கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே பொருள்: ஒரு விசயம் நடப்பதற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே நமக்கு தெரியும். உதாரணமாக தேர்தல் வருகிறது என்றால் உடனே சாலை போடுவது போல.
அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா ? NAIபொருள்: ஒன்றை கடினப்பட்டு உருவாக்குகின்ற அருமை, அதை துச்சமாக நினைப்பவர்களுக்கு தெரியாது.
உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்.பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.
ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை, தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர்.